சொட்டு ஒண்ண மேலே விட்டுப் போகும்-அந்த
மேகம் என்னுள் தாகம் கூட்டிப் போகும்
"லுக்கு" ஒண்ண என்மேல் விட்டுப் போகும் -அவ
மோகம் என்னுள் நாகம் போலச் சீறும்
குளத்து மேல புரண்டு வந்த போதும்-காத்து
அனலை கக்கி மனசை வாட்டிப் போகும்
எனக்கு என்று முடிவு செஞ்ச போதும்-கள்ளி
பிணக்குக் காட்ட மனசு வெந்துச் சாகும்
ஆசை கோடி நெஞ்சில் பூக்கும் போதும்-வண்டை
சுத்த விட்டு காற்றில் ஆடும் பூவு
நேசம் கோடி நெஞ்சில் நிக்கும் போதும்-பொய்க்
கோபம் காட்ட பெருகும் நோவு நூறு
பச்சைப் பாலும் சுட்டப் பாலும் வேற-இதை
புரியாது ஓடும் முட்டாள் பூனைப் போல
மெச்சும் காதல் நச்சுக் காமம் வேற-இது
புரியாத பாவி மகளை என்ன சொல்ல ?
25 comments:
ஏன் இப்படி நடக்குது?
அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கிற
நண்பனின் மகன் செல்லில் பேச மறுக்கும்
பெண்குறித்து ரொம்பப் புலம்பினான்
அதைக் கொஞ்சம் வேற மாதிரிச் சொல்ல
முயன்றிருக்கிறேன்.
(அவ்வளவே எனக்கும் இந்தக் கவிதைக்கும் சம்பந்தம் )
//மெச்சும் காதல் நச்சுக் காமம் வேற///
அருமை
இதனைப் புரிந்து கொண்டால் இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் வளமாகும்
தம 3
காதல் வேறு, காமம் வேறு அருமை ஐயா.
சந்தம் இனிக்கும் கவிதை!
எனக்கு என்று முடிவு செஞ்ச போதும்-கள்ளி
பிணக்குக் காட்ட மனசு வெந்துச் சாகும் //
அருமையாக இருக்கிறது.
த.ம 5
சுவையான கவிதை .
இப்பொழுது இருக்கிற தலையாய் பிரச்சனையே அதுதானே?(
இளவயதினர் உலகில்)
ரசித்தேன்.
நச்சு காமமா? ஏன்?
Nacharippathal enavum kollalaamaa ?
மெச்சும் காதல் நச்சுக் காமம் வேற-இது
புரியாத பாவி மகளை என்ன சொல்ல// வரிகள் அருமை ஆனால் திரு அப்பாதுரை சார் சொல்வது போல் நச்சு என்றால் விஷம் என்றாகி விடாதோ?
வரிகள் அருமை ஜி!
அட.. அட!..
என்ன ஒரு இனிமை!
மிக அருமை! நல்ல பொருள்!
வாழ்த்துக்கள் ஐயா!
இனிமை!
அருமை!
ஹா ஹா ஹா.....
பொதுவாக கவிஞர்கள் அடுத்தவரின் பிரச்சனையைத் தன்மேல் ஏற்றி பாடுவார்கள். ஆனால் இதுவரையில் நீங்கள் அப்படி எழுதியது இல்லை.
அதனால் பாடலை நான் படிக்கும் பொழுது..... என்ன இது...? இவ்வளவு இளமை தவிப்பை எழுதி இருக்கிறாரே என்ற எண்ணத்துடன் சிரித்துக் கொண்டே படித்தேன்.
நீங்கள் மட்டும் ஸ்ரீராம் ஐயாவிற்கு பதில் சொல்லாமல் போயிருந்தால்......
அருமையான கருத்து ரமணி ஐயா.
Nalla velai thangal thakkuthalil irundu thappichchen..
கலக்கலான கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!
பையனுடன் பேச மறுக்கும் பொண்ணா ,அதுவும் இந்த காலத்திலா ?வேறெங்கும் தொடர்பு இருக்கா என்று நன்றாக விசாரிக்கச் சொல்லுங்கள் !
நல்ல கவிதைச் சொன்ன உங்களுக்கு இதோ ...தமிழ்மண மகுடம் !
இனிமை! இளமை! அருமை!
ஒரு வார்த்தை அருமை
நம்ம துரோகம் கதை என்னாச்சு?
அருமை. பதிவர்கள் கவனிக்கவும் ! : புரட்டாத பக்கங்கள் - இப்ப என்ன சொல்வீங்க?
பதிவர்கள் கவனிக்கவும் ! : சிகரம் - வலை மின்-இதழ் - 003
//ஆசை கோடி நெஞ்சில் பூக்கும் போதும்-வண்டை
சுத்த விட்டு காற்றில் ஆடும் பூவு
நேசம் கோடி நெஞ்சில் நிக்கும் போதும்-பொய்க்
கோபம் காட்ட பெருகும் நோவு நூறு
//இரசித்தேன் ஐயா! நன்றி!
"ஆசை கோடி நெஞ்சில் பூக்கும் போதும்-வண்டை
சுத்த விட்டு காற்றில் ஆடும் பூவு
நேசம் கோடி நெஞ்சில் நிக்கும் போதும்-பொய்க்
கோபம் காட்ட பெருகும் நோவு நூறு" என்ற
இனிய வரிகளில் எழும் இசையும் உணர்வும்
கவிதைக்கு உயிர் ஊட்டுகிறதே!
வணக்கம்
ஐயா
லுக்கு" ஒண்ண என்மேல் விட்டுப் போகும் -அவ
மோகம் என்னுள் நாகம் போலச் சீறும்
என்ன வரி ஐயா. நன்றாக உள்ளது..பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-லுக்கு" ஒண்ண என்மேல் விட்டுப் போகும் -அவ
மோகம் என்னுள் நாகம் போலச் சீறும்
Post a Comment