Monday, September 8, 2014

சொர்க்கமது ஆனாலும் கூட----

பிடிச் சோறு ஆனாலும் கூட -அது
மிகப்பழசே ஆனாலும் கூட -நீ
பிழிந்துத்தர உண்ணுகிற சுகமே -அது
தேவலோக அமுதுக்குச் சமமே

எட்டுவகைக்  காய்கறிகள் கூட -உடன்
எறாநண்டும்  சேர்த்துவைத்தும் கூட-சோத்தை
தொட்டெடுக்க மறுக்குதடி மனமே-இந்தக்
கூத்துஇங்கு தொடருதடி தினமே

ஒருமொழியே ஆனாலும் கூட-அது
வசைமொழியே ஆனாலும் கூட-அது
திருமொழியாய்த் தெரியுதடி எனக்கு-உன்னைப்
பிரிந்துஇங்கு தவிக்கின்ற எனக்கு

நாகரீக உடையணிந்த மாந்தர்-தினம்
நுனிநாக்கில் கதைத்தாலும் கூட-அது
சோகமேற்றிப் போகுதடி எனக்கு -உன்னை
எண்ணிதினம் துடிக்கிற எனக்கு

குச்சிவீடு என்றாலும் கூட-வசதி
கூடக்குறச்சு என்றாலும் கூட-கண்ணே
நிச்சயசமாய் சொர்க்கமது தானே-அதுவே
கடல்தாண்டப் புரியுதடித் தேனே

கண்ணைவித்து ஓவியத்தை வாங்கி -மனம்
களிக்கின்ற கிறுக்கர்கள் போல-இங்கு
உன்னைவிட்டு வசதிசேர்க்க நானும்-இளமை
வாழ்வதனைத் தொலைக்கிறேண்டி நாளும்

சொர்க்கமது  ஆனாலும் கூட - அது
நம்மூரைப் போலாகா தென்று- கவிஞன்
சொல்லியது சத்தியமாய் நிஜமே-இதனை
அங்கிருப்போர் அறிந்துகொண்டால் நலமே


(முக நூலில்  நண்பர்  நாஞ்சில்  மனோவின்
ஒரு பதிவைப் பார்க்கப்  பிறந்தக் கவிதை
அயல் நாட்டில்  வாழும் நண்பர்களுக்கு
இக்கவிதை என் எளிய  சமர்ப்பணம் ) 

21 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சொந்த ஊரில் சொந்த வீட்டில், தரையில் படுத்துக் கிடப்பதில்தான் எத்துனை ஆனந்தம்

சிறிய இடைவெளிக்குப் பிறகு தங்களின்
கவி கண்டு மகிழ்ந்தேன் ஐயா
நலம்தானே

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

Unknown said...

சொந்த ஊரும் சொந்த வீடும் தரும் சுகமே , தனிதான்!

இராஜராஜேஸ்வரி said...

சொர்க்கமது ஆனாலும் கூட - அது
நம்மூரைப் போலாகா தென்று- கவிஞன்
சொல்லியது சத்தியமாய் நிஜமே-இதனை
அங்கிருப்போர் அறிந்துகொண்டால் நலமே

எங்கிருப்போரும் ஏங்கும் வரிகள்..

Avargal Unmaigal said...

குடும்பத்தை பிரிந்து பணம் சேர்க்க சென்றவர்கள் சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா என்றுதான் பாடுவார்கள் அதிலும் குறிப்பாக சிங்கபூர் மலேசியா மிடில் ஈஸ்ட் பகுதிகளுக்கு சென்றவர்கள். ஆனால் எங்களைப் போல உள்ள குடும்பங்களுக்கு இப்போது வசிக்கும் இடமே சொர்க்கமாகி போனது...இதை ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நாங்கள் இந்தியாவிற்கு வெகேஷ்னுக்கு தமிழகம் வந்தாலும் மீண்டும் நாங்கள் (அமெரிக்கா) எங்கள் வீட்டிற்கு வந்து, தரையிலோ அல்லது பெட்டிலோ படுத்துக் கிடப்பதில்தான் எத்துனை ஆனந்தம் தெரியுமா....எல்லோருக்கும் தாங்கள் நீண்ட் நாள் இருந்து பழகிய இடம் எப்போதும் சொர்க்கமாகவே இருக்கும்.

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல கவிதையை படித்த திருப்தி. பாராட்டுக்கள் ரமணி சார்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நம் நாட்டையும், நம் ஊரையும், நம் வீட்டையும் விட்டு வெளியே போனாலே இதுபோன்ற அவஸ்தைகளுக்கும் ஏக்கங்களுக்கும் பஞ்சமே இல்லை.

பாடல் அருமை. பாராட்டுக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

மிக அருமையான கவிதை ரமணி சார்! எந்த இடத்தில் நாம் அதிக நாட்கள் மிக ரசனையுடன் வாழ்கின்றோமோ அந்த இடம் நமக்கு சொர்கமாகிவிடுகிறது!

அருமை சார்!....

தி.தமிழ் இளங்கோ said...

இடைவெளி விட்டு வந்த தங்கள் கவிதையை மீண்டும் காணும்போது மிக்க மகிழ்ச்சி! நலம்தானே! அய்யா!
த.ம.4

Unknown said...

Eliya vaarthaiyil miga arumaiyaana kavithai, neengal sonna yaavum nijam !

Kasthuri Rengan said...

திரைகடலோடி திரவியம் தேடுவோரின் வேதனைகளை சொன்னவிதம் ரொம்ப ஜோர்.

அடுத்தவரின் வேதனைகளை கவிதையில் படம்பிடிப்பது சாதாரண விசயம் அல்ல ...
வெகு இலகுவாக அது உங்களுக்கு கைவந்திருக்கிறது

RajalakshmiParamasivam said...

கணவனும் மனைவியும் வெவ்வேறு ஊர்களில் வேலை பார்க்கும் போது , இருவரும் மனதளவில் படும் வேதனைகளை கவிதை வடிவில் பிட்டு பிட்டு வைத்து விட்டீர்கள் ரமணி சார்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை......

பல சமயங்களில் ஊரை விட்டு வாழ்வது கடினம் தான். எந்த இடத்தில் இருக்கிறோமோ அதையே சொந்த இடமாக நினைக்க பழக வேண்டியிருக்கிறது...

Yarlpavanan said...


புலம் பெயர்ந்து வாழும் உறவுகளுக்கு
நம்ம ஊரைப் போல வருமா என்ற
செய்தி நன்றே

கவியாழி said...

உன்னைப்
பிரிந்துஇங்கு தவிக்கின்ற எனக்கு/////புரியுது அய்யா புரியுது

மனோ சாமிநாதன் said...

அயல் நாட்டில் வாழும் என்னைப்போன்ற பலரின் மனக்குரல் தான் ' சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா?' என்ற வரி. அந்த மன ஏக்கத்தை அருமையான கவிதையால் வடித்ததற்கு மிக்க நன்றி!!

Unknown said...

Sir, here is my mobile number +91 98864 96867, please call me

Unknown said...

Sorry, I generally don't use gmail so missed your mail

RajalakshmiParamasivam said...

உங்களுடன் விருது ஒன்றைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
இணைப்பு இதோ http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/09/blog-post_13.html

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்


ஐயா
தங்களுக்கு  விருது இரண்டை பகிர்ந்துள்ளேன் அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்


ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதோ விருது அள்ளிச் செல்லுங்கள்....:

-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-

Yaathoramani.blogspot.com said...

ரூபன் //

தாங்கள் நடத்துகிற போட்டியில்.
நடுவராக இருக்கவேண்டியிருப்பதால்
தங்கள் மூலம் பரிசு பெறமுடியாத ஆதங்கம் இருந்தது
அக்குறையைப்போக்கியமைக்கு மனமார்ந்த நன்றி
வாழ்த்துக்களுடன்...

ஊமைக்கனவுகள் said...

அய்யா,
என்ன நடை! என்ன நடை!!
இப்பொழுதுதான் கவியாழியாரின் தளத்திற்கு முதன் முறையாகச் சென்று விட்டுத் தங்கள் தளத்திற்கு அடுத்து வந்தால் நீங்களும் இப்படி வெளுத்து வாங்குகிறீர்களே அய்யா!
எதுகையும் மோனையும் இயைபும் இப்படிப் போட்டி போட்டுக்கொண்டு எழும் இந்த எளிய வரிகளில் ஏற்றி இருக்கும் பொருளாழம்....
எல்லார்க்கும் கூடல் அரிது!
வியக்கிறேன்.
தங்களைத் தொடர்கிறேன் !
நன்றி அய்யா!!

Post a Comment