Friday, October 31, 2014

காதல் வயப்பட்டவனின் கடவுள் வாழ்த்து

வானூறும் நிலவெடுத்து
கறைதுடைத்து முகம்படித்து
தேனூறும் மலரெடுத்து
தெவிட்டாத இதழ்படைத்து
பாநூறுப் பாடுவென
பாவலனாய் எனப்படைத்து
வானுயரப் போனவனை
என்னசொல்லி வாழ்த்திடுவேன் ?

கருநாகக் குழல்படைத்து
கருமேக நிறம்கொடுத்து
கருவண்டால் விழிபடைத்து
கள்ளிலதை மிதக்கவிட்டு
ஒருபோதும் சோர்ந்திடாத
இளம்மனதும் எனக்களித்து
உருவமற்று நிற்பவனை
எப்படித்தான் வாழ்த்திடுவேன் ?

தந்தத்தால் உடல்செய்து
சந்தனத்தில் நிறம்சேர்த்து
தங்கமென தகதகத்து
தரணியிலே உலவவிட்டு
செந்தமிழின் சுவையதனைத்
தெரிந்தவனாய் எனைப்படைத்து
அந்தமாதியாய் ஆனவனை
ஏதுசொல்லிப் போற்றிடுவேன்?

17 comments:

Unknown said...

சும்மா ஒரு மாறுதல் அல்ல!! கவிதை சுகமான , சுவையான் மாறுதல்! இனித்தது!

ரிஷபன் said...

பாவலனாய் எனப்படைத்து
வானுயரப் போனவனை
என்னசொல்லி வாழ்த்திடுவேன் ?

நன்றி சொல்லி மாளாது

இளமதி said...

வணக்கம் ஐயா!

மிக மிக அருமையான கவிப் படைப்பு!

கடவுளுக்கு வாழ்த்ததைக் காதலொடு சேர்த்த
இடமுங்கள் உப்பரிகை யே!

வாழ்த்துக்கள் ஐயா!

ஐயா!.. நேரமிருப்பின் எனது பதிவும் பார்க்க வரவேண்டுகிறேன்! மிக்க நன்றி ஐயா!

http://ilayanila16.blogspot.de/2014/11/blog-post.html

UmayalGayathri said...

செந்தமிழின் சுவையதனைத்
தெரிந்தவனாய் எனைப்படைத்து
அந்தமாதியாய் ஆனவனை
ஏதுசொல்லிப் போற்றிடுவேன்?//

தமிழ் சுவை மிதக்க படைத்து அளித்தீர் எங்களுக்கு...

நன்றி ஐயா.
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி.

UmayalGayathri said...

த.ம 3

ஊமைக்கனவுகள் said...

அய்யா,
அருமையான கவிவரிகள்...
குறிஞ்சி மலரில் ந. பா. சொல்வாரே,

“நிலவைப் பிடித்துச் - சிறு
கறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதிந்த முகம்!

நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி “
தங்களின் முதற்கவிதையைப் படித்ததும் இவ்வரிகள் நினைவுக்கு வந்தன.
ஆஹா அருமை அருமை!
நன்றி

”தளிர் சுரேஷ்” said...

அருமை! அருமை! படிக்க படிக்க இனித்தது கவிதை! வாழ்த்துக்கள்!

Anonymous said...

Nanru..''..பானூறுப் பாடுவென
பாவலனாய் எனப்படைத்து....''
பா நூறு பாடுங்கள்!
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

ஸ்ரீராம். said...

புதிய பாணியில் கவிதை அருமை. ரசிக்க வைக்கிறது.

Unknown said...

உங்கள் கவிதைமேல் காதல் வயப்பட்டேன் :)
த ம +1

Yarlpavanan said...

"ஒருபோதும் சோர்ந்திடாத
இளம்மனதும் எனக்களித்து
உருவமற்று நிற்பவனை
எப்படித்தான் வாழ்த்திடுவேன்?" என்ற
அடிகளை அடியேனும் விரும்புகிறேன்.
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தந்தத்தால் உடல்செய்து
சந்தனத்தில் நிறம்சேர்த்து
தங்கமென தகதகத்து
தரணியிலே உலவவிட்டு//

கிளிகொஞ்சும் வரிகள்.

பாவலனாய் எனப்படைத்து
வானுயரப் போனவனை
என்னசொல்லி வாழ்த்திடுவேன் ?

நன்றி சொல்லி மாளாதுதான்.

பகிர்வுக்கு நன்றிகள்.

காரஞ்சன் சிந்தனைகள் said...

//கறைதுடைத்து முகம்படித்து
தேனூறும் மலரெடுத்து
தெவிட்டாத இதழ்படைத்து
பாநூறுப் பாடுவென
பாவலனாய் எனப்படைத்து
வானுயரப் போனவனை
என்னசொல்லி வாழ்த்திடுவேன் ?
// அருமை ஐயா! இரசித்தேன்!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.!

அருமையான கவிதை.!

சிறப்பான வரிகளுடன். ரசிக்க வைத்த கவிதையை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு
மிக்க நன்றிகள்.!

வாழ்த்துக்களுடன்,
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் அழகான கவிதை! ரசித்தோம் மிகவும்!

தேனூறும் மலரெடுத்து
தெவிட்டாத இதழ்படைத்து
பாநூறுப் பாடுவென
பாவலனாய் எனப்படைத்து
வானுயரப் போனவனை
என்னசொல்லி வாழ்த்திடுவேன் ?// அருமை அருமை!

வெங்கட் நாகராஜ் said...

அருமை..... ரசிக்க வைக்கும் வரிகள்....

த.ம. +1

கோமதி அரசு said...

ஒருபோதும் சோர்ந்திடாத
இளம்மனதும் எனக்களித்து
உருவமற்று நிற்பவனை
எப்படித்தான் வாழ்த்திடுவேன் ?//
அருமை.
வாழ்த்தி வாழ்வோம்.

Post a Comment