இருளுக்கும் இரவுக்கும்
இருக்கும் நெருக்கம்
இருக்கும் வரைக்கும்
கடலுக்கும் அலைக்கும்
தொடரும் பழக்கம்
தொடரும் வரைக்கும்
நிலவுக்கும் மலருக்கும்
நிலவும் உறவது
நிலவும் வரைக்கும்
இளமைக்கும் தமிழுக்கும்
இயைந்த இயக்கம்
இயங்கும் வரைக்கும்
நினைவுக்கும் மனதிற்கும்
நிகழ்ந்திடும் தொடர்பது
நிகழும் வரைக்கும்
படைப்பிற்கும் எனக்கும்
இடைப்பட்ட பிணைப்பது
இணைந்தே இருக்கும்
காற்றுக்கும் மூச்சுக்கும்
வாய்த்திட்ட உறவுபோல்
சார்ந்தே நிலைக்கும்
19 comments:
நிலவுக்கும் மலருக்கும்
நிலவும் உறவது
நிலவும் வரைக்கும்
நிலைத்து நிற்கும் உறவு - உவகை தருகிறது.!
மலரினில் மணமது இருக்கும் வரைக்கும் உங்கள் கவியினில் என் மனமும் மயங்கித் திரியும் :)
த ம 2
படைப்பிற்கும் தங்களுக்கும்
இடைப்பட்ட பிணைப்பது
இணைந்தே இருக்கட்டும் ....
காற்றுக்கும் மூச்சுக்கும்
வாய்த்திட்ட உறவுபோல்
சார்ந்தே நிலைக்கட்டும்.
பாராட்டுகள் ...... வாழ்த்துகள்.
ஆஹா அருமை அருமை வரிகளும் சிந்தனையும் அபாரம் மிகவும் பிடித்த பதிவு. பாராட்டுக்கள் ....!
படைப்பிற்கும் உங்களுக்கும்
இடைப்பட்ட பிணைப்பில்
நாங்களும்
இளைப்பாருகிறோம் கவிதைச்சோலையில்.
தம 3
கவிஞர்கள் உருவாக்கப்படுவதில்லை.
கவிஞர்களாகவே பிறந்து கவிதைகளாகவே வாழ்கிறார்கள்.
த.ம. 4
அருமையான வரிகள்!
படைப்பிற்கும் எனக்கும்
இடைப்பட்ட பிணைப்பது
இணைந்தே இருக்கும்//
ஆம் இணைந்தே இருக்கும்! மிகவும் ரசித்தோம்!
படைப்பிற்கும் எனக்கும்
இடைப்பட்ட பிணைப்பது
இணைந்தே இருக்கும்//
இணைந்தே இருக்க வாழ்த்துக்கள்.
கவிதை அருமை.
உண்மைதான் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்
த.ம 6
வணக்கம் ஐயா!
தமிழும் சுவையும் போல இணைந்தது
உங்கள் படைப்புக்களும் நீங்களும்!..
படித்து பயனுறும் நாங்களும் உங்களுடன்
அப்படியே இருக்க வேண்டி விரும்புகிறேன்!
அருமை! வாழ்த்துக்கள் ஐயா!
அருமையா சொன்னீங்க ஐயா! வாழ்த்துக்கள்!
வணக்கம்
ஐயா.
சிறப்பான கவி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இளமைக்கும் தமிழுக்கும்
இயைந்த இயக்கம்
இயங்கும் வரைக்கும்
என
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
முதல் முறையாக உங்கள் பக்கத்திற்கு வந்தேன் அனைத்து பதிவுகளும் அருமை வாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரரே.!
நல்லதோர் கவிதை.! சிறப்பான வரிகள்.!
\\படைப்பிற்கும் எனக்கும்
இடைப்பட்ட பிணைப்பது
இணைந்தே இருக்கும்//
ஆம்! இணைந்தே இருக்கின்றன.! என்றும் இணைந்தே இருக்கவும் வேண்டுகிறேன்.!
வாழ்த்துக்களுடன்,
கமலா ஹரிஹரன்.
//நிலவுக்கும் மலருக்கும்
நிலவும் உறவது
நிலவும் வரைக்கும்//
இதை ரொம்பவே ரசித்தேன்....
சிறப்பான பகிர்வு.
த.ம. +1
Post a Comment