Sunday, November 23, 2014

முத்தப் போட்டியாளர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்

நல்லதோ கெட்டதோ பயனுள்ளதோ பயனற்றதோ
வித்தியாசமாக எதையும் செய்தால் உலகம்
தன்னை உற்றுப்பார்க்கும்  (எப்படி பார்க்கும்
என்பது குறித்து உங்களுக்கு அக்கறையில்லை என்பது
எங்களுக்கும் தெரியும்  ) என்னும் ஒரு பித்தல்லாட்ட
 எண்ணத்தில்நம்பிக்கை கொண்டவர்கள் செய்யும்
 அட்டகாசமே உங்களின்இந்த முத்தப் போட்டியென்பது பெரும்பாலோனோரின் அபிப்பிராயம்.

பேண்டுக்கு மேல் ஜட்டி போட்டால்  சூப்பர் மேன்
,சட்டைக்கு மேல் பிரா போட்டால் தேவதைகள்
என ஆவ போல

வீட்டுக்குள் செய்ய வேண்டியதை வெளியில் செய்தால்
தாங்கள் அறிவு ஜீவிகள் எனக் காட்டிக் கொள்ளலாம்
என நினைக்கும்  உங்களைப் போலுள்ள முட்டாள்களின்
மூளையில் விளைந்த விஷப்பயிரே இது

கார்த்திகை மாதத்தில் காம வெறிபிடித்து ரோட்டில்
ஒன்றுக்குப் பத்து என்கிற கணக்கில்
எச்சில் வழிந்தபடித் திரியும் தெரு நாய்களுக்கும்
இவர்களுக்கும் என்ன வித்தியாசம் எனபதும்
எனக்குப் புரியவில்லை

எனவே எனதருமை அறிவுஜீவிகளே !
நீங்கள் கவனிக்கப் படவேண்டும் தங்கள் குறித்த
செய்திகள் அதிகம் பரவ வேண்டும் என்பதே
உங்கள் தலையாய நோக்கம் என்பதால்...

நீங்கள் நின்றபடி மனிதர்களைப் போல
அதைச் செய்யாது கைகளையும்
கால்  முட்டியினையும் தரையில் ஊன்றி
நாலு கால் விலங்குகளைப் போல் நின்று செய்யுங்கள்
அது மற்றவர்கள் தங்கள் மனம் எந்த  இனம்
எனப் புரிந்து கொள்ளவும் ஏதுவாகும்

அதைப்போல் இந்தக் கண்றாவி தூரம் தொலைவு
உள்ளவர்கள்  கண்ணில்  தெரியாமலாவது
இருந்து தொலைக்கும்

17 comments:

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

super. will those idiots realize?

ஸ்ரீராம். said...

விளம்பார ஆசை. பரபரப்பு ஆவல்! என்ன செய்வார்கள் அவர்கள்!

தனிமரம் said...

இதுவும் ஒரு விளம்பரமோகம் தான் ஐயா.

Unknown said...

நிச்சயம் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்று நம்பலாம். போராட்டத்தின் வடிவம், அனைத்து தரப்பினரையும் தங்களுக்கு ஆதரவாக மாற்றுவதாக இருக்க வேண்டுமே தவிர, இப்படி பைத்தியக்காரத்தனமாக இருத்தல் கூடாது.

Rathnavel Natarajan said...

அருமை சார்.

திண்டுக்கல் தனபாலன் said...

தெரு நாய்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை...

Seeni said...

அருமைங்க அய்யா..

KILLERGEE Devakottai said...

சவுக்கடி வார்த்தைகள் இனியெனும் திருந்துக....

UmayalGayathri said...

நல்லா சொன்னீங்க ஐயா...உறைத்தால் சரி..
தம 6

தி.தமிழ் இளங்கோ said...

நன்றாகவே சொன்னீர்கள். நாலு வார்த்தைகளை நறுக்கென்று.
த.ம.7

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கற்காலத்தை நோக்கிப் போகிறோமா என எண்ணத் தோன்றுகிறது. வெட்கப்படவேண்டிய ஒரு நிகழ்வைப் படம் போட்டுக் காட்டுகிறார்கள். அதைப் பார்க்க ஒரு கூட்டம். வெளியிட ஒரு கூட்டம். வேதனையான செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

Unknown said...

முத்தப் போராட்டமா,முட்டாள்களின் போராட்டமா :)
த ம 9

Amudhavan said...

இளைஞர்கள் போராடுவதற்கென்று நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடைபெறுகின்றன. அதுபற்றியெல்லாம் சாதாரண சிந்தனைகள்கூட இல்லாத இவர்கள் உப்புச்சப்பில்லாத ஒரு விஷயத்திற்காகப் 'போராட்டம்' நடத்துகிறார்களாம். அதுவும் கிளுகிளுப்புப் போராட்டம். கடுமையான வார்த்தைகளாலேயே கண்டித்திருக்கிறீர்கள்.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

தமிழ்மணம் 9

பாதை மணந்திடுமோ பண்பை இழந்திட்டால்?
போதை நிலையினைப் போக்கு!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

Avargal Unmaigal said...

சரியான சாட்டை அடி......

நாய்களை இவர்களுடன் ஒப்பிட்டு நாய்களை கேவலப்படுத்த வேண்டாம்

ananthako said...

உன்னைச்சொல்லி குற்றமில்லை என்னைச் சொல்லி குற்றமில்லை காலம்செய்த கோலமடி சோனியா சோனியா பாடல் மம்மி டாடி --உய்யாலா இந்தசின்ன பெரிய திரை --சமுதாயத்தை பிடிக்கும் பேய்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல சரியான சவுக்கடி! ரமணி சார் மனுஷன் பண்ணுற இந்தக் கேவலத்திற்கு நாலுகால்கள் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டா...நமக்கு அதற்குத்தானெ 6 ஆவது அறிவு என்று ஒன்று கொடுக்கப்பட்டிருக்கின்றது!

Post a Comment