Monday, January 12, 2015

புதுப் பொங்கலில் பழைய உப்பு

மனவெளிக்காட்டினில்
மண் மேடாய் எண்ணங்கள்
சிந்தனை ஏர் நடத்தி
விதைத்து வைத்த கவி விதைகள்
கால வெள்ளத்தில்
 அழுகிச்  சிதைந்து     போமோ ?

எண்ணங்கள் கேள்வியாய்
உருமாறி என்னை
உசுப்பி விட்டுப்  போக
அகல  உழுதலை  விடுத்து
ஆழ உழுகிறேன்
கணபதியே நீயே துணை

இதய கட்டுத்தறியில்
எண்ணப் பாவுகள்
பொருட்சுவை இழையோட
நெய்துவைத்த கவியாடைகள்
கால நகம் பட்டுக்
கிழிந்தழிந்து போமோ ?

மனக் குளம் விழுந்த
சிறுகல் எழுப்பிய சிற்றலயையாய்
எண்ணங்கள் விரிந்து பரவ
அலட்சிய  பாவம் விடுத்து
அழுந்த நெய்கிறேன்
ஞானவேலா  நீயே கதி

மனப் பட்டறையில்
வார்ப்புகளாய் எண்ணங்கள்
அனுபவ உலையிலிட்டு
சீர் செய்த கவிதாயுதங்கள்
காலக் காற்றினில் துருவேறி
மண்ணாகி மக்கிப் போமோ ?

ஒண்ட வந்த கேள்விகள்
கரையானாய்  உடன் பெருகி
என்னை சாய்த்துவிடப்  பார்க்க 
ஓய்தலைவிடுத்து  ஆயுதத்தை
இன்னும் கூராக்குகிறேன்
கலைவாணியே  அருள் புரி 

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான நெய்தல் தொடரட்டும் ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...

கலைவாணி அருள் புரிவாள் ஐயா
தொடரட்டும் தங்களின் கவி ஊர்வலம்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 4

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கேள்விகள் கவிஞனை சாய்த்துவிடாது .
கவிதையும் கருத்தும் சிறப்பு

ஸ்ரீராம். said...

அருமை. சிறந்த நெசவாய் அமையட்டும்!

துரை செல்வராஜூ said...

கலைவாணி நிச்சயம் அருள் புரிவாள்!..
வாழ்க நலம்..

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை.

த.ம. +1

UmayalGayathri said...

அருமை ஐயா தம + 1

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் அருமையான கவிதை!

G.M Balasubramaniam said...

பிரமாதமாக எண்ணங்களைக் கடத்துகிறீர்கள் வாழ்த்துக்கள்.

Unknown said...

காலம் கடந்து நிற்கும்! கலைவாணி அருள் புரிவாள்!

KILLERGEE Devakottai said...

அருமையான கவி ''தை'' மகள் கவிஞரே....

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

பக்குவமாக எண்ணங்களைக் கவிதையாக்கித் தந்துள்ள உங்களின் எழுத்துக்குப் பாராட்டுகள்.

மனோ சாமிநாதன் said...

கவிதையுடன் தலைப்பும் அருமை!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

இப்படி ஒற்றை வார்தையில் சொன்னாலும் நெடும் கவிதை எழுதிப் புகழ்ந்தாலும் விருப்பம் என்னமோ ஒன்றுதானே.

ஆனாலும் மக்கள் வார்த்தை ஜாலத்தைத்தான் விரும்புகினரே, இது என்ன விந்தை?

கோமதி அரசு said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
கலைவாணியின் அருள் நிச்சயம் கிடைக்கும் உங்களுக்கு.

”தளிர் சுரேஷ்” said...

அருமை! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

தி.தமிழ் இளங்கோ said...

காளிதாசனுக்கும் கம்பனுக்கும் அருளிய காளியைப் போல, கலைவாணி உங்களுக்கும் அருளுவாள். எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
த.ம.10

yathavan64@gmail.com said...

தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான வரிகள்1 கலைவாணி தங்களுக்கு அருள்புரிய தாங்கள் இன்னும் பல கவிதைகள் புனைவீர்கள்! வாழ்த்துக்கள்!

Post a Comment