Wednesday, January 14, 2015

தமிழர் திரு நாளிதன் உட்பொருள்

விதைத்த  ஒன்றை
நூறாய் ஆயிரமாய்
பெருக்கித் தரும்
பூமித் தாய்க்கு
நன்றி சொல்லும் நாளிது

எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உடனுழைத்து
நம் உயிர்  வளர்க்க உதவும்
விலங்கினங்களுக்கு
நன்றி சொல்லும் நாளிது

இணைந்து இயைந்து
 இருப்பதாலேயே
வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்
உறவுகளுக்கு
நன்றி சொல்லும் நாளிது

அனைத்து இயக்கங்களுக்கும்
 மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது

நம்மிருப்புக்குக்  காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக  நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது

அற்ப எல்லைகள்   கடந்து
நன்றியுடமையின்  பெருமை  சாற்றும்
 தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து  மகிழ்வோம்
அதன் உன்னதம் காத்து உயர்வோம்

( பதிவர்கள் அனைவருக்கும்
பொங்கல்  திரு நாள்
நல்வாழ்த்துக்கள்  )

22 comments:

துரை செல்வராஜூ said...

பொங்கலைப் போல தித்திக்கும் கவிதை..
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

KILLERGEE Devakottai said...

கவிதை இனித்ததே...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
தமிழ் மணம் 2

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் . நன்றிக் கவிதை நன்று

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல பொருள், நல்ல கவிதை, ரசித்தோம். நன்றி.

UmayalGayathri said...

பொங்கலின் பொருள் நிறைந்த கவிதை அருமை ஐயா
தம 4

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை.

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

kingraj said...

அருமை அய்யா. தங்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உட்பொருளும் அதை எடுத்துச்சொன்ன விதமும் மிக அருமை. பாராட்டுக்கள். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

நன்றி ஐயா, அருமையான கவிதை!
பொங்கல் நல்வாழ்த்துகள்!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

த.ம.6

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே!

நன்றி சொல்லும் பெருமையை உணர்த்திய அருமையான அழகான கவிதை!
பகிர்ந்தமைக்கும் நன்றி.!

தங்களுக்கும், தங்கள் உற்றார், உறவினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்….

நட்புடன்,
கமலா ஹரிஹரன்.

கீதமஞ்சரி said...

நன்றி சொல்லும் நாளின் பெருமையை அறியச் செய்யும் அரிய வரிகள். நன்றியும் பாராட்டும் ரமணி சார்.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

yathavan64@gmail.com said...

தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

ஆறுமுகம் அய்யாசாமி said...

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Yarlpavanan said...

தை பிறந்தாச்சு
உலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

தி.தமிழ் இளங்கோ said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
த.ம.9

மனோ சாமிநாதன் said...

மனங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

கவிதை இனிக்குதே!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

Unknown said...

உட்கொள்ளும் தினமென்றே நினைத்திருந்தேன் ..
உட்பொருளை அறிந்து மகிழ்ந்தேன் :)
த ம 10

Thulasidharan V Thillaiakathu said...

உட்பொருள் அருமை...

அனைத்து இயக்கங்களுக்கும்
மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது//

ஆம் மிக அழகான வரிகள்! சூரியன் இல்லை என்றால் இந்த உலகே இல்லையே! சூரியன் தான் கடவுள் என்று பண்டைய தமிழர் தொழுதுவந்தனர்.

Post a Comment