Thursday, January 15, 2015

பகைவனுடன் தொடர்பில் இரு

எதிரிகளை மிகச் சரியாக
அடையாளம் கண்டுகொள்
அவன் கருத்துக்கள் முழுமையாக
உன்னைச் சேரும்படி
வழிவகைச் செய்து கொள்

ஏனெனில்

உன் திட்டம் குறித்து
அதன் பலவீனம் குறித்து
உன் செயல்பாடுகள் குறித்து
உன்னை விட அவனே அதிகம் யோசிக்கிறான்
அது உனக்கு நிச்சயம் பலன் கொடுக்கும்

துதிப் பாடுபவனைக்
கொஞ்சம் எட்டியே வை
அவன் பாராட்டுக்கள் துளியும்
உன்னில் ஒட்டி விடாதபடி
எப்போதும் தட்டிவிட்டுக் கொண்டே இரு

ஏனெனில்

உன் செயல்பாடுகளில்
ஒரு அலட்சியம் வரவும்
அதன் காரணமாய்
உன் வேகம் குறையவும்
நிச்சயம் கூடுதல் வாய்ப்பிருக்கிறது

ஆலோசனை சொல்பவனிடம்
கொஞ்சம் எச்சரிக்கையாய் இரு
அவன் அலோசனைகள் எதையும்
அலசி ஆராயாது உன்னுள்
அடுக்கி வைக்கத் துவங்காதே

ஏனெனில்

முன் இருவரை விட
உன்னிடம் மிகவும் நெருங்கவும்
உனக்கே அறியாது உன் இலக்குகளை
மாற்றிவிடும் அதீத ஆற்றலும்
இவனிடம்தான் அதிகம் உள்ளது

22 comments:

துரை செல்வராஜூ said...

எளியதாக - இனியதாக - நல்ல அறிவுரை..

நலம் வாழ்க!..

UmayalGayathri said...

நல்ல...தெளிவான...ஆராய்ச்சி...கவிதையாய் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.

UmayalGayathri said...

தம 2

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே!

ஒவ்வொருவரிடமும், எப்படி பழக வேண்டுமென்று ஆராய்ந்து கணித்து எழுதியிருக்கிறீர்கள். தங்கள் கணிப்பு சரிதான்.! பகிர்ந்தமைக்கு என் பணிவான நன்றிகள்..

தங்களுக்கும் இனிய உழவர், மற்றும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அறிவுரை.

Unknown said...

பகைவனுடன் மட்டுமல்ல ,இந்த பகவான்ஜீவுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் நல்லதே நடக்கும் என்று இந்த இனிய தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன் :)
த ம +1

Unknown said...

அறிவுரை நன்று!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
சிறப்பான கருத்தாடல் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி.
த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என் வெற்றிகளுக்கு
உறுதுணையாக இருந்தவன்
என் நண்பன்...!

இந்த வெற்றிக்காக
என்னை உழைக்கவைத்தவன்
என் எதிரி..!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய படைப்பு

அன்பே சிவம் said...

அருமை
அனுபவ பாடமென்பர்.
ஏதேது
இது
அனுபவித்ததை
அனுபவித்து பதிவிட்ட கவிதையாய் தெரிகிறதே.
இருப்பினும் அந்த அனுபவத்தின் வலி எனக்கும்
உள்ளது.

KILLERGEE Devakottai said...

வாழ்க்கை தத்துவம் கவிஞரே...

திண்டுக்கல் தனபாலன் said...

நம்மை முன்னேற வைக்கும் நண்பன் தான் எதிரி...! அருமை ஐயா...

kingraj said...

அருமை அய்யா. தம+1

அம்பாளடியாள் said...

மிகச் சரியான உண்மை !பகிர்வுக்கு மிக்க நன்றி ரமணி ஐயா .

விச்சு said...

பகைவனும் முக்கியம்தான்..

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம +1

”தளிர் சுரேஷ்” said...

அட! அருமையான கவிதை! பாராட்டுக்கள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நூற்றுக்கு நூறு உண்மை. நான் அனுபவத்தில் கண்டது.

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும்சரியே! நல்ல அறிவுரை கவிதை வடிவில்...வாழ்த்துக்கள்! சார்!

நிலாமகள் said...

பகைவனினும் கொடியவனா ஆலோசனை சொல்பவன்...?! இனி யாருக்கும் யோசனை சொல்லக் கூடாதோ...?! நூதனமாய் அமைந்த பாடுபொருள் பலவித சிந்தனைகளை தோற்றுவிக்கிறது. நீங்கள் சொல்வது மிகச் சரி என்றால் அதுவும் முகஸ்துதி ஆகிவிடுமோ...:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல பயனுள்ள அறிவுரைகள்.

//நீங்கள் சொல்வது மிகச் சரி என்றால் அதுவும் முகஸ்துதி ஆகிவிடுமோ...:) - நிலாமகள் //

ரஸித்தேன். பாராட்டுக்கள்.

Post a Comment