Saturday, January 17, 2015

எதிர்திசையில் ஓரடி

புரியாது என புலம்பித் திரிந்ததைவிட
புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுகித் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட

நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது

14 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

///நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது///
நம்பிக்கைதானே வாழ்க்கை

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தன்னம்பிக்கை தரும் கவிதை. அருமையானநேர்மறை எண்ணங்கள்.

துரை செல்வராஜூ said...

//நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது//

உண்மைதான். ஆனாலும் நிறைய பலன் தரும் நேரமும் வரும்!..

திண்டுக்கல் தனபாலன் said...

நம்பிக்கை வேண்டும்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
படிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் தன்நம்பிக்கை ஊட்டும் கவிதை.. பகிர்வுக்கு நன்றி த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Bhanumathy Venkateswaran said...

Super

இளமதி said...

வணக்கம் ஐயா!

நம்பிக்கை நம்மோடிரிருக்க
நலம் பெருகுமே தினந்தினம்! மிக அருமை!

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா!

”தளிர் சுரேஷ்” said...

அருமை ஐயா ! வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

வாழ்க்கையில் நம்பிக்கையுடன் வாழ சொல்லும் கவிதை அருமை.
முயற்சி திருவினையாக்கும் என்று சொல்கிறது கவிதை.

Kasthuri Rengan said...

நாளைய மழை பொய்க்காது

Kasthuri Rengan said...

தம +

Thulasidharan V Thillaiakathu said...

நம்பிக்கைதானே வாழ்க்கை! அருமையான வரிகள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நம்பிக்கையை விதைத்திருப்பது நன்று. பாராட்டுக்கள்.

Post a Comment