Tuesday, January 20, 2015

அணுவும் அண்டமும்

கருப்பையே பேரண்டத்தின்
ஒரு சிறுமாதிரி
பேரண்டமே கருப்பையின்
மிகப் பெரும்விஸ்வரூபம்

துளியே பெருங்கடலின்
ஒரு சிறு மாதிரி
பெருங் கடலே துளியின்
மாபெரும் விஸ்வரூபம்

உறக்கமே மரணத்தின்
ஒரு சிறு மாதிரி
மரணமே உறக்கத்தின்
எல்லையிலா விஸ்வரூபம்

கவிதையே வாழ்வின்
ஒரு சிறு மாதிரி
வாழ்க்கையே கவிதையின்
மாபெரும் விஸ்வரூபம்

20 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

ஆரம்பித்த விதத்தில் இருந்து முடித்த விதம் மிகவும் நன்றாக உள்ளது.. உண்மையான கருத்துக்கள்... கவிதையாக சொல்லிய விதம் சிறப்பு.. பகிர்வுக்கு நன்றி த.ம2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கவிதை வாழ்க்கை ஒப்பீடு அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் ஒப்பீடு அருமை ஐயா...

வெங்கட் நாகராஜ் said...

அருமையான ஒப்பீடு.....

த.ம. +1

இளமதி said...

ஐயா! தங்களின் கவிதை சிறியதாயினும் அதன் பொருளும் அந்தக் கற்பனையின் ஆற்றலும் விஸ்வரூபமானது!

வாழ்த்துக்கள் ஐயா!

சசிகலா said...

தகுந்த தலைப்பும் அது சார்ந்த வரிகளும் சிந்திக்க வைக்கின்றன. நன்றிங்க ஐயா.

சென்னை பித்தன் said...

//கவிதையே வாழ்வின்
ஒரு சிறு மாதிரி
வாழ்க்கையே கவிதையின்
மாபெரும் விஸ்வரூபம்//
அருமை

சென்னை பித்தன் said...

//கவிதையே வாழ்வின்
ஒரு சிறு மாதிரி
வாழ்க்கையே கவிதையின்
மாபெரும் விஸ்வரூபம்//
அருமை

UmayalGayathri said...

கருப்பையே பேரண்டத்தின்
ஒரு சிறுமாதிரி
பேரண்டமே கருப்பையின்
மிகப் பெரும்விஸ்வரூபம் //

அழகு ஐயா.தம +1

”தளிர் சுரேஷ்” said...

நல்ல ஒப்பீடு! அருமை! வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

அட! என்ன ஒரு அற்புதமான வரிகள். இந்த அண்டத்தின் தத்துவத்தையே உள்ளடக்கிய வரிகள்! அற்புதம்....அற்புதம்....மிக மிக ரசித்தோம்..சார்!

Kasthuri Rengan said...

//கவிதையின்
மாபெரும் விஸ்வரூபம்//
நல்ல படிமம்
தம+

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருமை! எப்படி உங்களால் மட்டும் இப்படி சிந்திக்க முடிகிறது?

Unknown said...

இது மாதிரியும் கவிதை எழுத உங்களால் மட்டுமே முடியும் :)
த ம 13

KILLERGEE Devakottai said...

கவிதை விஸ்வரூபம் எடுத்தது
த,ம,14

Yarlpavanan said...

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

அருணா செல்வம் said...

உங்களின் கருத்தே விஸ்வரூபம்.

அருமை இரமணி ஐயா.

'பசி'பரமசிவம் said...

‘அணுக்களுக்குள்ளே அண்டங்கள்! அண்டமெங்கும் அணுக்கள்! ’ -விஞ்ஞானம் கண்டறிந்த உண்மையை அழகிய சில கவிதைகளில் அடக்கிவிட்டீர்கள்.

பாராட்டுகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வாழ்க்கையே கவிதையின் மாபெரும் விஸ்வரூபம்//

வாழ்க்கையின் விஸ்வரூப தரிஸனம் தங்களின் இந்தக் கவிதையில் கண்டு மகிழ்ந்தேன். :)

Post a Comment