Wednesday, January 21, 2015

" உம் "புராணம்

"மாதா
பிதா
குரு
தெய்வம்  "

என்றான் ஆன்மீக வாதி

"மாதா"வும் "
பிதா "வும் "
குரு "வும்தான் "
தெய்வம் "

என்றான் பகுத்தறிவு வாதி

"உம் தான் "
தேவையற்ற பிரிவினைகளின்
மூலம் என நவில்ந்தபடி
நகர்ந்தான் பொருள்முதல்வாதி

 "உம் தான் "
நமக்கு மூலதனம்
அதைவிடாது பெருக்கணும்
உறுதி கொள்கிறான் அரசியல்வாதி


"உம்மின்  "
உண்மை பலம் புரியாது
உம்மென  உலவுது
ஊமையாய் ஒரு பெருங்கூட்டம்

12 comments:

UmayalGayathri said...

உம்..புராணம் அருமை ஐயா

தம.1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
உம்... என்ற வார்த்தைக்குள் எவ்வளவு அர்த்தம் புரிந்து கொண்டேன் ஐயா.. பகிர்வுக்கு நன்றி த.ம3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

இதற்கும் உங்களுக்கோர் பாராட்டுக்கள்! அருமையான படைப்பு! நன்றி!

KILLERGEE Devakottai said...

ஸூப்பர் புராணம்
த.ம.4

Thulasidharan V Thillaiakathu said...

உம்மென அல்ல "உம்"

அருமை!

அருணா செல்வம் said...

“உம்“முள் இவ்வளவு இருக்கிறதா....!

அருமை இரமணி ஐயா.

RajalakshmiParamasivam said...

"உம்" மிற்குப் பின்னே இவ்வளவு இருக்கிறதா!

yathavan64@gmail.com said...

"உம்"-மின் உண்மை உணர்த்தும் கவிதை
ஆம்! ஆம்! அதுதான் சரி அய்யா!

இன்றைய எனது பதிவு
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
படரட்டும்!
நன்றியுடன்,
புதுவை வேலு,

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

'உம்'மை சாதாரணமாக நினைக்கக்கூடாது என்பதற்கான பதிவு. நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அட...! உம்...

வெங்கட் நாகராஜ் said...

உம்ம்ம்...

ஊமையாய் ஒரு பெருங்கூட்டம். இந்தக் கூட்டம் தான் மிகப் பெரியது!

த.ம. +1

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"உம்மின் " உண்மை பலம் புரியாது உம்மென உலவுது ஊமையாய் ஒரு பெருங்கூட்டம்//

”உம்மின்” பலம் உம்மால் இப்போது அறிந்து கொண்டேன். பாராட்டுக்கள்.

Post a Comment