எவ்வளவு முழுமையாக
நுரையீரலிருந்துக் காற்றை
வெளியேற்ற முடியுமோ
அவ்வளவு வெளியேற்றுங்கள்
பின் இயல்பாக
தனக்குத் தேவையானக் காற்றை
நுரையீரல் தானகவே
நிரப்பிக் கொள்ளும்
எவ்வளவு அதிகமாக
உழைப்பாலோ உடற்பயிற்சியாலோ
பசியை மட்டும்
உண்டாக்கிக் கொள்ளுங்கள்
பின் நிறைவாக
தனக்குத் தேவையான உணவை
நமது இரைப்பைத் தானாகவே
நிரப்ப முயலும்
எவ்வளவு விரைவாக
பக்தியாலோ முயற்சியாலோ
அவ நம்பிக்கையை மட்டும்
அடியோடு விரட்டுங்கள்
மிக எளிதாக
நம்முள் கருகொண்ட
கனவுகள் யாவும்
நிஜமாகத் துவங்கும்
நுரையீரலிருந்துக் காற்றை
வெளியேற்ற முடியுமோ
அவ்வளவு வெளியேற்றுங்கள்
பின் இயல்பாக
தனக்குத் தேவையானக் காற்றை
நுரையீரல் தானகவே
நிரப்பிக் கொள்ளும்
எவ்வளவு அதிகமாக
உழைப்பாலோ உடற்பயிற்சியாலோ
பசியை மட்டும்
உண்டாக்கிக் கொள்ளுங்கள்
பின் நிறைவாக
தனக்குத் தேவையான உணவை
நமது இரைப்பைத் தானாகவே
நிரப்ப முயலும்
எவ்வளவு விரைவாக
பக்தியாலோ முயற்சியாலோ
அவ நம்பிக்கையை மட்டும்
அடியோடு விரட்டுங்கள்
மிக எளிதாக
நம்முள் கருகொண்ட
கனவுகள் யாவும்
நிஜமாகத் துவங்கும்
20 comments:
#பக்தியாலோ#
இதுதான் கொஞ்சம் உதைக்கிறது ,மற்றபடி கவிதை இனிக்கிறது :)
த ம 2
பக்தி என்பதும் முயற்சி தான்..
கனவுகள் யாவும் நிஜமாகும்..
வாழ்க நலம்!..
ரசித்தேன்.
வணக்கம்
அருமையான கருத்தை சொல்லியுளீர்கள் இரசிக்கவைக்கும் வரிகள்
பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அவநம்பிக்கையை வேரறுத்து நம்முள் தன்னம்பிக்கையை விதைக்கும் அழகிய சிறு கவிதை!!
ரசித்தேன் வாழ்த்துக்கள் ஐயா .
கனவுகளை நிஜமாக்கும் கருவூலப்பெட்டகம் தங்கள் வரிகள்.
உண்மை ஐயா...
oom...mulu unmai....
Vetha.Langathilakam
சிகரம் அடையச் சுருக்கு வழி
வாழ்வில் உயரச் சிறந்த வழி
அவ நம்பிக்கையை விரட்டி
தன் நம்பிக்கையைப் பெருக்கு
அதுவே வழி!
தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
படித்துப் பாருங்களேன்!
உழைப்பால் உடற்பயிற்சியால் பசியை உண்டாக்கிக் கொண்டால் பின் நிறைவாக
தனக்குத் தேவையான உணவை
நமது இரைப்பைத் தானாகவே
நிரப்ப முயலும் என்கிறீர்கள் நிரப்பிக் கொள்ளும் என்று சொல்லவில்லையே. பகவான் ஜியை நானும் வழிமொழிகிறேன்
கனவுகளை நனவாக்குவதற்கான வரிகள் அருமை.
த.ம 6
எளிமையாக ஓர் ஆலோசனை! இனிமையான கவிதை வடிவில்! அருமை! வாழ்த்துக்கள்!
வணக்கம் ஐயா!
சுருக்கு வழியென்று சொன்ன கவியை
விருப்புடன் கொண்டேன் விரைந்து!
மிக அருமை ஐயா! அற்புதமான சிந்தனை!..
வாழ்த்துக்கள்!
நம்முள் கருகொண்ட கருக்கொண்ட
கனவுகள் யாவும்
நிஜமாகத் துவங்கும்
அருமை அருமை ஐயா நன்றி
தம 9
மிக எளிதாக
அவநம்பிக்கையை வெளியேற்றினால்
//நம்முள் கருகொண்ட கருக்கொண்ட
கனவுகள் யாவும்
நிஜமாகத் துவங்கும்//
சிறப்பான வரிகள்.
வணக்கம் சகோதரரே!
மிக அருமையான சிந்தனையுடன் ௬டியக் கவிதை...
சிகரம் அடைந்த சுருக்கு வழியில், தன்னம்பிக்கை மிகுந்த பாதையில் பயணித்த திருப்தியை தந்தது, தங்கள் கவிதையின் ஒவ்வொரு வரிகளும்....
பகிர்ந்தமைக்கு நன்றிகள்...
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
பக்தி என்பதும் ஒரு நம்பிக்கைதானே!அம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியமே
அருமையான கவிதை!
Post a Comment