Thursday, February 12, 2015

விட்டு விலகி...

மௌனித்து இருப்பவனுக்கே
அதிகம் பேசுபவனை விட
வார்த்தைகளின் பலம் தெரியும்

பசித்து இருப்பவனுக்கே
தொடர்ந்து உண்பவனை விட
உணவின் ருசி தெரியும்

விலகி இருப்பவனுக்கே
ஒட்டித் திரிபவனை விட
உறவின் அருமை தெரியும்

முற்றாக இழந்தவனுக்கே
அணைத்து வைத்திருப்பவனை விட
பொருளின் மதிப்புத் தெரியும்

ஆம்
அதிக தூரம் முன்தாண்ட முயல்பவன்
கொஞ்சம் பின் செல்வதைப் போல

என்றும்
எதிலும்
நாமாகவே

கொஞ்சம்விட்டு  விலகி
எதிர் நிலை நின்று
நிகழ்வுகளை இரசிக்கப் பழகுவோம்

என்றும்
எங்கும்
எப்போதும்

கிடைத்த வாழ்வினை
இரசித்தபடி
தொடர்ந்து பயணிக்க முயலுவோம்

13 comments:

ஸ்ரீராம். said...

முழுக்கவிதையையும் முதலில் முக நூலில் ரசித்து விட்டு இங்கு வருகிறேன்!

அருமை.

எம்.ஞானசேகரன் said...

அருமையான வரிகள். நிஜத்தில் இப்படிப்பட்ட அனுபவங்களை உணர்ந்தவர்களுக்கு இந்தக் கவிதையின் அருமை புரியும். த.ம.+

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படி இருந்தாலே என்றும் சுகம்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

விலகி இருத்தல் நெருக்கத்தை அதிகமாக்கும்
சிறப்பான வாழ்வியல் கருத்துக்கள்

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

RAMA RAVI (RAMVI) said...

அருமை.

//கொஞ்சம்விட்டு விலகி
எதிர் நிலை நின்று
நிகழ்வுகளை இரசிக்கப் பழகுவோ//

சிறப்பான வரிகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
உண்மையான வரிகள் சொல்வதற்கு என்னிடம் கருத்துக்கள் இல்லை ஐயா அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

///கொஞ்சம்விட்டு விலகி
எதிர் நிலை நின்று
நிகழ்வுகளை இரசிக்கப் பழகுவோம்///
அருமை அருமை
தம +1

அப்பாதுரை said...

நாளான கலக்கத்தில் தேடி வந்தால்..என் சோர்ந்த மனதில் ஓடிய எண்ணங்களின் பிம்பங்களை இங்கே கண்ட அதிர்ச்சியும் வியப்பும்... காலப்போக்கிலே சிக்கி சிதறாதிருக்க சிறு பிடிப்புகள் உங்கள் வரிகள்.

Unknown said...

அதிக தூரம் முன்தாண்ட முயல்பவன்
கொஞ்சம் பின் செல்வதைப் போல

அருமையான, இயல்பான எடுத்துக் காட்டு!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கிடைத்த வாழ்வினை இரசித்தபடி தொடர்ந்து பயணிக்க முயலுவோம்//

மிகவும் அருமையான உண்மையான சாத்தியமான சத்தியமான வரிகள்.

Thulasidharan V Thillaiakathu said...

கொஞ்சம்விட்டு விலகி
எதிர் நிலை நின்று
நிகழ்வுகளை இரசிக்கப் பழகுவோம்//

ஆஹா! அருமையான வரிகள்!

வெங்கட் நாகராஜ் said...

விட்டு விலகி இருப்போம்.....

இப்படி இருக்க முயல்கிறேன் - பல சமயங்களில் முடிவதில்லை.......

த.ம. +1

Post a Comment