Saturday, March 21, 2015

நீயும் கூட அசட்டு மாமா தானே

ஆசை நூறு நெஞ்சில் பொங்கி மாமா--என்னை
லூசுக் கணக்கா சுத்த விடுது மாமா-நம்ம
நேசம் உண்மை யென்றி ருந்தா மாமா-உடன்
வந்து என்னைக் காக்க வேணும் மாமா

மல்லு வேட்டிக் கட்டிக் கிட்டு மாமா-கனத்த
மைனர் செயினும் போட்டிக் கிட்டு மாமா-வில்லு
விட்டுப் பாயும் அம்பு போல மாமா-உடன்
வந்து என்னைப் பார்க்க வேணும் மாமா

எட்டு ஊரு கேக்கும் படியா மாமா-நல்ல
கெட்டி மேளம் கொட்டிக் கிட்டு மாமா-சீரு
தட்டு நூறு தூக்கிக் கிட்டு மாமா-நீயும்
சொந்தத் தோடக் கூடி வரணும் மாமா

பாறை போல இறுகிக் கிடந்த என்னை-ஒரு
பார்வை யாலே இளக்கிப் போன மாமா-உன்
பாதைப் பாத்து நோங்கிக் கிடக்கேன் மாமா-உடன்
பரிஸம் போட நாளைப் பாரு மாமா

ருசியாச் சமைச்ச சோறு கூட மாமா-கொஞ்சம்
ஆறிப் போனா ருசியை இழக்கும் மாமா- இது
சரியாப் புரிஞ்சா அசத்தல் மாமா நீயே -இல்லை
நிஜமா நீயும்  அசட்டு மாமா தானே

7 comments:

Yarlpavanan said...

"ருசியாச் சமைச்ச சோறு கூட மாமா-கொஞ்சம்
ஆறிப் போனா ருசியை இழக்கும் மாமா- இது
சரியாப் புரிஞ்சா அசத்தல் மாமா நீயே -இல்லை
நிஜமா நீயும் அசட்டு மாமா தானே!" என
எங்களுக்கும் புரிய வைக்கும்
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பாறை போல இறுகிக் கிடந்த என்னை-ஒரு
பார்வை யாலே இளக்கிப் போன மாமா

ருசியாச் சமைச்ச சோறு கூட மாமா-கொஞ்சம்
ஆறிப் போனா ருசியை இழக்கும் மாமா//

நன்னாச் சொல்லிட்டா ....... ம்ம்ம்ம்

மாமாவுக்கு இது சரியாப்புரியணுமே !

வித்யாசமான படைப்பு. பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

மாமா புரிந்து கொண்டு அசத்தலாகி விடுவார்...!

G.M Balasubramaniam said...

இதில் வரும் மாமா சொந்தமா?

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

அருமைான கருத்து மிக்க வரிகள் பகிர்வுக்கு நன்றி ஐயா. த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவியாழி said...

ருசியாச் சமைச்ச சோறு கூட மாமா-கொஞ்சம்
ஆறிப் போனா ருசியை இழக்கும் மாமா- இது
சரியாப் புரிஞ்சா அசத்தல் மாமா நீயே -இல்லை
நிஜமா நீயும் அசட்டு மாமா தானே///
ஆமாம்மா மாமா? அடுத்து என்ன கேட்கலாமா?

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா!!! என்ன ஒரு அருமையான காதல்......ம்ம்ம்ம் கொடுத்து வைச்ச மாமா....மாமா சீக்கிரம் வந்து அந்தப் பொண்ணோட ஏக்கத்தைத் தீருங்க மாமோய்...

Post a Comment