Sunday, April 26, 2015

கீறல்

திசை மாறாது
பொழுது மாறாது
மிக இயல்பாய்
இருளுண்டு
அனைத்தையும்
விளங்கக் காட்டிப் போகும்
அனைத்தையும்
இயங்கவைத்துப் போகும்
அந்தக் கதிரவனினும்

திசைக் கணக்கின்றி
ஒழுக்க நியதி ஏதுமின்றி
தாறுமாறாய்
ஒளிர்வதாயினும்
இருள் கூட்டிக் காட்டி
அனைத்தையும்
மிரளவைத்துப் போகும்
அந்த ஒரு நொடி
மின்னல் கீற்றே

மனம் கீறிப் போகிறது
அந்த நொடியினை
மறக்காது செய்து போகிறது

புரியச் சொன்னதை விட
புரியாதே
பம்மாத்துக் காட்டிப் போகும்
சில அற்புதக் கவிதைகள் போலவும்...

13 comments:

G.M Balasubramaniam said...

புரியாமல் சொல்லிப் போய் அறியாதவர்களிடமிருந்து பாராட்டு பெறுவதைவிட புரியச் சொல்லி பிறரை ஈர்பதே நல்லதுஎனும் கட்சியைச் சேர்ந்தவன் நான்மின்னலை விட ஆதவன் நிலைத்து நிற்பான் என் தளத்தில் ஒரு சுய தம்பட்டம் காண அழைக்கிறேன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மின்னல் சூரியன் இரண்டையும் கவிதையோடு ஒப்பிட்டது அருமை

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
அருமை
நீண்டநாட்களுக்குப் பின்
தங்களை வலையில் சந்தித்ததில்
மகிழ்ச்சி ஐயா
தம +1

”தளிர் சுரேஷ்” said...

புதுமையான ஒப்புமை! அருமை! வாழ்த்துக்கள்!

vimalanperali said...

பம்மாத்துக்காட்டுபவை எப்படி அற்புதக்கவிதையாகும்?

தி.தமிழ் இளங்கோ said...

ஏதோ ஒரு நெருடல். நீங்கள் மின்னலாய் வந்து போனாலும் கதிரவனாய் வந்து நிற்க வேண்டும் கவிஞரே! நீங்கள் அருகில் இருந்தால் அடிக்கடி வந்து உங்களைக் கண்டு பேச வாய்ப்பு இருந்திருக்கும். எட்டியே இருந்தாலும் வலைத்தளத்தில் நண்பர்கள் பலர் உண்டு. கவிதைதான் என்றில்லாமல், சின்னச் சின்ன மலரும் நினைவுகளையும் வார்த்தைகளாக்கி பதியவும்.
த.ம.4

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தாங்கள் ரசித்த அந்த நொடியினை ரசித்தோம். நன்று.

Seeni said...

அட டா..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
ஒப்பிட்டு எழுதிய உவமைகள் எல்லம் மிக அருமையாக உள்ளது இரசித்து படித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 6

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கதம்ப உணர்வுகள் said...

காலை புலர்வதே சூரியன் தவறாமல் தன் ஒளிக்கதிர்களால் எப்படி தவறாமல் எழுப்புகிறதோ அந்த கீறலும்.... திடிர் என்று வந்தாலும் எல்லோரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு சடார் என்று மறைந்து போகும் ஒழுங்கீன மின்னலையும் மிக அற்புதமாக கவிதைக்கு ஒப்பிட்டு இருக்கீங்க ரமணி சார்..

இதில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் என்னவென்றால் இலக்கணம் சந்தம் எல்லாம் அமைத்து எழுதப்படும் மரபுக்கவிதை சூரியனுக்கு ஒப்பாகவும்.... சொல்லாமல் திடிர் என்று வந்து மிரட்டிவிட்டு மறையும் மின்னலை புதுக்கவிதைப்போலவும் உருவகப்படுத்துவதாக நினைத்து வாசித்தேன்... கவிதை இன்னும் அதிகம் ருசித்தது....

மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ரமணி சார்...

கதம்ப உணர்வுகள் said...

கடைசி நான்கு வரிகள் தான் இந்த கவிதைக்கே மகுடம் சூட்டுகிறது ரமணி சார்.... அற்புதம்...

வெங்கட் நாகராஜ் said...

அருமை. தமிழ் இளங்கோ ஐயாவின் வேண்டுகோள் - அதே வேண்டுகோள் என்னிடத்திலிருந்தும்....

த.ம. +1

Post a Comment