Thursday, June 11, 2015

முள்ளை முள்ளால் ( 2 )

நண்பன் சொல்லப் போகிற ஏமாந்த கதை
சுவாரஸ்யமாக மட்டுமல்லாது கூர்ந்து
கவனிக்கத் தக்கதாயும் இருக்கும் என்பதால்
அருகில் இருந்த டீக்கடை பெஞ்சில்
அமர வைத்துப்பின்...

 " ம்.. இப்போ சொல்றா " என அடியெடுத்துக்
கொடுத்தேன் நண்பன் சொல்லத் துவங்கினான்

"இது நடந்து ஆறு மாசங்கள் ஆகி இருந்தாலும்
ஒவ்வொரு அசைவும் மிகத் தெளிவா
நினைவில் இருக்கு

அன்னைக்கு  ஒரு திங்கட்கிழமை.
மீனாட்சியும் ஊர்ல இல்லை
சொந்தக்காரங்க கல்யாணம்னு
குழந்தைகளோட மாமியார் ஊர் போயிருந்தா

அன்னைகுன்னு எனக்கு மேல் அதிகாரிங்க
இன்ஸ்பெக்ஸனுக்கு வருவதாக இருந்ததால
நானும் காலையிலஎட்டு மணிக்கே
குளிச்சு  முடிச்சு  ஆபீஸ் போக
தயாராகிக்கிட்டிருந்தேன்

அப்போ வாசலில் ஏதோ பைக் நிற்கிற மாதிரித்
தெரியவே சட்டையை மாட்டிக்கிட்டு
வாசலுக்கு வந்தேன்

இந்த படுபாவிப் பய பைக்கை ஓரம்
நிறுத்திவிட்டுஎன் வீட்டு வாசலில்
வந்து நின்றான்

நீ இப்போ சொன்னயே அதே நிலைதான்
எனக்கும்  அன்னைக்கு

அவனை இதற்கு முன்பு
எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது
ஆனா எங்கே எப்போ எனத் தான் தெரியல

ஆனோ அவனோ என்ன ரொம்பத் தெரிஞ்ச மாதிரி
என்ன சார் ஆபீஸ் கிளம்பிட்டீங்களா
உங்களுக்குத் தகவல் தெரியும்தானே
நேத்தே சொல்லி இருப்பாங்களேன்னான்

என்ன தகவல் யார் சொல்லி இருப்பாங்களேன்னு
நான் அந்த நினைப்புபுல போக......

அவன் "சார் நேத்து கார்பரேசன் எஞ்சினியர்
இன்ஸ்பெக்ஷன் வந்தார் சார்.
உங்க வீடு பூட்டி இருந்தது
உங்களைக் கேட்டார் சார்  அப்படின்னான்

எனக்கும் எஞ்னியரைத் தெரியும் என்பதால்
ஒருவேளை கேட்டிருக்கலாம்
என யூகித்துக் கொண்டேன்

பின் அவனே சொன்னான் அங்கே பாருங்க
உங்க மெயின் தெரு போய்ச் சேருகிற
கிழக்காவும் மேற்காகவும் இரண்டு பொக்லைன்
வேலைக்கு வந்து ரெடியா நிக்குது .

முந்தா நாள் மழையிலே
ரோட்டுக்கு மேற்கால தண்ணி ரொம்பத் தேங்கிக்
கிடக்குதுன்னு கமிஷனர்கிட்டே ஏரியாக்கார்ங்க
எல்லோரும் ரிபோர்ட் பண்ண அவர்
இன்ஸ்பெக்ஸன் வந்து உடனே உங்க வீட்டு
ரோடு சைடுலநெடுக வாய்க்கால் தோண்டி
தண்ணிய கடத்தச் சொல்லிட்டார்

இப்பத் தோண்டஆரம்பிச்சுடுவாங்க
அப்படித் தோண்டினா உங்க வீட்டு வாசல்ல
கார் ஏறப் போட்டிருக்கிற ஸ்லோப்பை
எடுக்கவேண்டி இருக்கும்.அதைத்தான்
சொல்லி உங்களை  சிமெண்ட் பைப் எதுவும்
வாங்கிக் கொடுத்தால் கையோட  பதிச்சு
மூடிடலாம்னு எஞ்சினியர் சொல்ல வந்தார்
நீங்க இல்ல எனச் சொல்லி நிறுத்தினான்

எனக்கு அது அதிர்ச்சியான தகவலாக இருந்தது

உனக்குத்தான் தெரியுமே.என் வீட்டித் தெருவில்
நாலு வீடு தவிர வேறு வீடு இல்லை
நியாயப்படி என் வீட்டுப் பக்கம் வெட்டிவிட்டு
வாய்க்கால் கட்டினால்தான் சரியாகவும் வரும்

ஆனால் இந்த கார்ப்பரேஷன்காரன் தோண்டினா
அவன் வாய்க்கால் கட்டி முடிக்க
மூணுமாசமாவது ஆக்குவான்.
அதுவரை வண்டியை எங்கே நிறுத்துவது ?

கையோட மட்டம் பார்த்து பைப்பை
பதித்துவிட்டால் பிரச்சனையில்லை.

ஆனால் நிச்சயமாக இன்று வீட்டில் இருந்து
இதைப் பார்க்கவோ பைப் வாங்க்கிக் கொடுக்கவோ
என்னால் முடியாது

நான் குழப்பத்தில் சிக்கித் தவித்தேன்

நாம குழம்ப ஆரம்பிச்சாலே ஏமாறத்
தயாராகிட்டோன்னுதானே அர்த்தம்

ஏமாத்த நினைக்கிறவனுக்கும் அந்தக் குழப்பம்
தானே நல்ல லீட் இல்லையா ? " என்றான்

( தொடரும் )

10 comments:

சென்னை பித்தன் said...

சுவாரஸ்யம்
தம2

Unknown said...

அப்புறம்!?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//ஏமாத்த நினைக்கிறவனுக்கும் அந்தக் குழப்பம்
தானே நல்ல லீட்//
உண்மை உண்மை

UmayalGayathri said...

ஆமாம் ஆமாம்...நல்ல அறிகுறியை நாம அவர்களுக்கு கொடுத்து விடுகிறோம் இல்லையா....
அடுத்து காத்திருக்கிறோம். தம +1

S.P.SENTHIL KUMAR said...

சுவாரஸ்யமாக போகிறது கதை. தொடர்ச்சியை படிக்க ஆர்வம் பிறக்கிறது.
த ம 6

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்த 2ம் பகுதியில் மேலும் சுவாரஸ்யம் நீடிக்கிறது.

//நாம குழம்ப ஆரம்பிச்சாலே ஏமாறத்
தயாராகிட்டோன்னுதானே அர்த்தம்//

நாம சுவாரஸ்யமாகப் படிக்க ஆரம்பித்தாலே எழுத்தாளர் ‘தொடரும்’ போட்டுடுவாங்க இல்லையா ? :)

//ஏமாத்த நினைக்கிறவனுக்கும் அந்தக் குழப்பம்
தானே நல்ல லீட் இல்லையா ? "//

‘தொடரும்’ போட்டால் தானே அடுத்த பகுதி எப்போது என வாசகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள் ! :)

நல்ல டெக்னிக். வாழ்க !

தொடர்க !

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
கதை மிக அருமையாக நகர்கிறது.. படிக்கும் போது அடுத்தது என்ன என்ற ஆவலை தூண்டுகிறது... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன்...

சசிகலா said...

நாம குழம்ப ஆரம்பிச்சாலே ஏமாறத்
தயாராகிட்டோன்னுதானே அர்த்தம்....

ஆமாம் சரியாகச்சொன்னீர்கள் ஐயா.

”தளிர் சுரேஷ்” said...

தொடர்கிறேன்! எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்?

Post a Comment