Friday, June 12, 2015

முள்ளை முள்ளால் ( 4 )

இவன் கதையை இங்கு தொடர்ந்து
விலாவாரியாகச் சொல்லாமல் விரிவாகச்
சொல்வதன் காரணமே இதில்
ஏமாறுபவனின் பலவீனமும்
ஏமாற்றுபவனின் திறமையையும் புரிந்து
கொள்ளும்படியான சூட்சுமங்கள் இதில்
நிறைய இருக்கிறது

பொதுவாக பேங்க் வாசலில் பத்து ரூபாய்
நோட்டைக் கீழே போட்டுவிட்டு  அதிகம் பணம்
வைத்துள்ளவர்களிடம் அதைக் காட்டி
அவர் எடுக்க குனிகின்ற நேரம் கையில் பையில்
அவர்கள் வைத்துள்ள அதிகப் பணத்தை
பறித்துக் கொண்டு பறந்த கதைகளை
அடிக்கடி செய்தித் தாளில் பார்த்திருப்பீர்கள்

அதைப் போலத் தான்  ஏமாற்றுபவர்களும்
அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்கிற
சில தகவல்களை  அல்லது அவர்கள் முயன்று
சேகரித்த சில தகவல்களை
நம் முன்னே சிதறவிட்டு அதை நாம்
நம்பித் தொலைக்கிற வேலையில் சட்டென
நம்மைமுட்டாளாக்கி அவர்கள் காரியத்தைச்
சாதித்துக் கொள்கிறார்கள்

இந்த விஷயங்கள் தெரியாமல்தான் நாம்தான்
சட்டென சில முக்கியமான தகவல்களை
ஜாக்கிரதையாகக்கையாளாமல் சிந்த விட்டு விட்டு
அப்படிப்பட்டவர்களிடம்
எளிதாகச் சிக்கி கொள்கிறோம்

என் நண்பன் விஷயத்தில்

என் நண்பனும் இலாகா பொறியாளர்தான்
என்கிற சிறு தகவலையும்....

அவனுக்கும் கார்பரேஷன் எஞ்சினியருக்கும்
பழக்கமிருக்கிறது என்கிற தகவலையும்..

எப்படியோ தெரிந்து வைத்துக் கொண்டு
நன்றாக விளையாடி இருக்கிறான்....

மறு நாள் நிச்சயம் வேலை நடந்திருக்காது
என்பதை நான் அவன் சொல்வதை வைத்தே
புரிந்து கொண்டேன்

இருப்பினும் அவன் மூலம் தெரிந்து கொள்வதே
மிகச் சரியாக இருக்கும் என நினைத்து மீண்டும்
அவனை " சொல்லுடா " எனத் தூண்டினேன்

அவன் சொல்லத் துவங்கினான்

"எனக்கும் அன்னைக்கு அதிகாரியுடன் ஸ்பாட்
இன்ஸ்பெக்ஸன் மாலை ரிவியூ மீட்டிங்னு
வேலை செம டைட்டா இருந்ததால இரவு
எட்டு மணிக்குத் தான் வீட்டுக்கு வந்தேன்

வரும்போதே மிகச் சரியாகப் பைப்பை
பொருத்தி இருப்பானா மண்போட்டு நிரப்பி
இருப்பானா வண்டியை ஏற்ற முடியுமான்னு
குழம்பிக்கிட்டே வந்தேன்

வீட்டு வாசலுக்கு வந்து பார்த்தா எதுவுமே
நடக்கவில்லை .வாசலும் தெருவும்
முன்னமாதிரியே இருந்தது.

அப்போது கூட எனக்கு அவன் மேல்
அவ நம்பிக்கை வரவில்லை.
கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில்
வேலை முடிஞ்சிருக்காது இங்கே நாளை
நடக்கலாம்னு நானா நினைச்சிக்கிட்டேன்

மறுநா காலையில  சீக்கிரம் எழுந்திருச்சி
தெருவோட கிழக்குக் கோடியும்
மேற்கும் கோடியும் பார்த்தபோதுதான்
லேசா சந்தேகம் தட்ட ஆரம்பிச்சது

காரணம் இரண்டு பக்கமும் ஏற்கெனவே
அடஞ்து போயிருந்த டிட்சைத் தோண்டி
அதுவரை வாய்க்கால் அடைப்பை எடுத்து
காலனியில் மேல் பகுதியல தேங்கி இருந்த
மழைத் தண்ணியை எல்லாம் முழுசும்
கடத்தி இருந்தாங்க

இதன்படிப் பார்த்தா இப்போ நம் பக்கம்
வாய்க்கால் தோண்ட வேண்டிய
அவசியமே இல்லை

பின்ன எப்படி அவன் சொன்னான் ?

நானும் எப்படி இதை நம்பினேன் ?

முதன் முதலா இப்படி முட்டாள்தனமா ஏமாந்ததை
நினைக்க நினைக்க மனசு ரொம்ப நொந்து போச்சு

எனக்கு ரூபாய் கூட பெருசா தெரியலை
திட்டம் போட்டு ஒருத்தன் என்னை இப்படி
முட்டாளாகிப் போனதை நினைக்க நினைக்க
ஒரு மாதிரியாகிப் போச்சு

அப்படி நான் நொந்து போய் வராண்டாவில்
அசந்து போய் சோபாவில் சாய்ந்திருக்கையில் தான்
வாசல் பக்கம் சார்னு யாரோ
கூப்பிடுகிற சத்தம் கேட்டுது

நிமிர்ந்து பாத்தா அடுத்தத் தெரு செட்டியார்
நின்றிருந்தார்

அவரிடம் பேசப் பேசத்தான் சும்மா கிடந்த
சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டிக் கதையா
இவரை அறியாமலேயே ஏமாற்ற
அவனுக்கு நிறைய டிப்ஸ் கொடுத்திருப்பது தெரிந்தது

நான் நொந்து போனேன் "" என்றான்


(தொடரும் ) 

12 comments:

Unknown said...

இதுவும் தொடர் கதையா!!?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இன்னமும் தொடர்கிறதா? அவரும் நொந்தவரா? இப்பதிவின்மூலமாக அவன் ஏமாற்றுக்காரன் என்று தெரிகிறது. பார்ப்போம், முடிவை.

G.M Balasubramaniam said...

இவர் பெயரைச் சொல்லி அவரையும் ஏமாற்றி இருக்கிறானா. இன்னும் எத்தனை பேர் இவன் வலையில்.?

”தளிர் சுரேஷ்” said...

இவர் பேரைச் சொல்லி அங்கேயும் ஏமாற்றி இருப்பானோ? தொடர்கிறேன்!

”தளிர் சுரேஷ்” said...

இவர் பேரைச் சொல்லி அங்கேயும் ஏமாற்றி இருப்பானோ? தொடர்கிறேன்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

செட்டியாரும் அவனிடம் ஏமாந்தவர் தானா? அப்போ இனி வரும் பகுதிகளில் இருவரின் ஏமாற்றப்பட்ட கதைகளையும் மேலும் சுவாரஸ்யமாக நாம் தெரிந்துகொண்டு, நாம் இதுபோல யாரிடமும் ஏமாறாமல் சற்றே எச்சரிக்கையாக இருக்க ஏதுவாகும். தொடரட்டும் இதுபோன்ற சுவாரஸ்யமான அனுபவப் பதிவுகள்.

S.P.SENTHIL KUMAR said...

இந்த தொடரைப் படிக்கும் போது நமது பதிவர் நடனசபாபதி அவர்கள் எழுதும் ஏமாற்றுவதும் ஒரு கலை என்ற தொடர்தான் நினைவுக்கு வருகிறது.
த ம 4

Kasthuri Rengan said...

தொடருங்கள் ஆவலோடு காதிருக்கிறோம்

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்து அறிய காத்திருக்கிறேன்...

சென்னை பித்தன் said...

ஏமாற்ருபவர்கள் எப்போதும் கெட்டிக்காரர்கள்தான்!
தம 7

வே.நடனசபாபதி said...

ஏமாற்றுபவர்கள் நம்மைவிட கெட்டிக்காரர்கள். நம்மில் பலர் நிச்சயம் எங்காவது ஏமாந்திருப்போம். நாம் விழிப்போடு இல்லாவிடில் நிச்சயம் ஏமாற்றப்படுவோம் என்பது உறுதி. நான் முதன் முதல் ஏமாந்தது பற்றி எத்தனைக் காலம்தான் ...? என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன். பின்னர் ‘ஏமாற்றுவதும் ஒரு கலை தான்!’ என்ற தலைப்பில் ஒரு தொடர் பதிவு எழுதி வருகிறேன். அதை படித்துவிட்டு நண்பர் திரு செந்தில்குமார் அவர்கள் தங்கள் பதிவைப் படிக்கும்போது எனது பதிவு நினைவுக்கு வருவதாக எழுதியுள்ளார் என நினைக்கிறேன். ஐயா! தாங்கள் பதிவுலகின் மூத்த பதிவர். தங்களின் பாணி தனித்துவம் வாய்ந்தது. எனவே தங்கள் பதிவோடு என் பதிவை நினைத்துக்கூட பார்க்க இயலாது. பதிவை இரசித்தேன். தொடர்கிறேன்.
த.ம.8

Yarlpavanan said...

பா நடையில்
பாயும் வேகத்தில்
பறக்கும் எண்ணங்களில்
நறுக்கெனச் சிந்திக்க வைக்கும் தொடர்!

Post a Comment