Sunday, June 21, 2015

முன்னறித் தெய்வப்பட்டியலில்...

முன்னறித்  தெய்வப்பட்டியலில்
இரண்டாவதாயிருப்பதுக்  குறித்து
அவர்கள் கவலைப்பட்டதே இல்லை

குழந்தைகளின்முன்னேற்றம் குறித்துச்
சிந்திப்பதில் அவர்கள் எப்போதும்
முதலாவதாகவே இருக்கிறார்கள்

மாதா துவங்கி தெய்வத்தில் முடியும்
அந்த நால்வர் பட்டியலில்
குருவுக்கு முன்னர் இடம்பெற்றது
வெறும் வார்த்தை ஜாலத்திற்காக இல்லை

உலகைப் புரிந்து கொள்ளக்
கற்றுக் கொடுப்பதில் அவர்கள்
அனைத்து விஷயத்திலும் நிஜமாகவே
குருவுக்கு முன்னால்தான் இருக்கிறார்கள்

அன்னையர் தினம் அளவு
தந்தையர் தினம் கொண்டாடப்படுவது குறித்தும்
அவர்கள் சஞ்சலப்படாதே இருக்கிறார்கள்

ஆணுக்கென இந்தச் சமூகம் விதித்திருக்கும்
சில விசித்திர விதிகளினால்
அவர்கள்  உணர்வுகளை எப்போதும்
உள்ளத்தில் அடக்கிவைத்தே அலைகிறார்கள்

நம்மை வயிற்றில் சுமக்காது போயினும்
காலமெல்லாம் நெஞ்சில் சுமந்து சுகங்காணும்

நமக்குப் பாலூட்டி வளர்க்காது போயினும்
காலமெல்லாம் சிகரத்தில் வைக்க தினம்சாகும்

தந்தையரின் தியாகங்களை
சிந்தையினில் எந்நாளும் கொள்வோம்-அவரின்
கனவுகளை நினைவாக்கி
அவர்மனதைக் குளிர்வித்து மகிழ்வோம்

அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

11 comments:

KILLERGEE Devakottai said...

அருமையான விளக்கவுரை தங்களுக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

தமிழ் மணம் 2

”தளிர் சுரேஷ்” said...

அருமை ஐயா! சிறப்புக்களை சிறப்பாக சொன்னது கவிதை! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே...
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே...

கரந்தை ஜெயக்குமார் said...

நம்மை வயிற்றில் சுமக்காது போயினும்
காலமெல்லாம் நெஞ்சில் சுமந்து சுகங்காணும்
உண்மை ஐயா உண்மை
தந்தையர் தின வாழ்த்துக்கள்
தம +1

UmayalGayathri said...

தந்தையர் தின வாழ்த்துக்கள் ஐயா...சிறப்பான கவிதை வரிகள்.நன்றி.

தம +1

G.M Balasubramaniam said...

முன்னறித் தெய்வப் பட்டியலில் இரண்டாம் இடம்.பட்டியல் ஒரு வரிசைக்காக சொல்லப் பட்டதே. எல்லோரும் முதன்மையானவரேஅதில் மாதாவுக்கு முன்னிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது. மற்றவர்கள் ஆல்சோ ரேன். அவ்வளவுதான் நானும் ஒரு பதிவு தந்தையர் தினத்துக்காக எழுதி இட்டிருக்கிறேன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல புகழாரம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையாக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்.

அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

Unknown said...

தந்தையரின் தியாகங்களை
சிந்தையினில் எந்நாளும் கொள்வோம்-அவரின்
கனவுகளை நினைவாக்கி
அவர்மனதைக் குளிர்வித்து மகிழ்வோம்
நன்று!நன்று நன்று!

கே. பி. ஜனா... said...

//ஆணுக்கென இந்தச் சமூகம் விதித்திருக்கும்
சில விசித்திர விதிகளினால்
அவர்கள் உணர்வுகளை எப்போதும்
உள்ளத்தில் அடக்கிவைத்தே அலைகிறார்கள்// அருமை...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
தந்தையர்தினக் கவிதை மனதை நெருடியது. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment