அந்த முக்கியப் பிரமுகர் கடந்து செல்வதற்காக
எங்கள் வண்டியை ஓரம் கட்டினார் காவலர்
நாங்கள் எரிச்சலுடன் காத்திருந்தோம்
அந்தச் சிவப்புச் சுழல் விளக்கு பொருத்திய வண்டி
அதற்கான நூற்றுக்கும் அதிகமான
இணைப்பு வண்டிகளுடன் கடந்து செல்ல
அரை மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது
போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விட்டது
போரடிக்காது இருப்பதற்காகவோ
நிஜமான சந்தேகத்திலோ
நண்பன் இப்படிக் கேட்டான்
"சமூக வாழ்வில் இத்தனை உயரம் தொட்டு
நம்மை வியப்பிலாழ்த்தும் இவர்கள்
தனி மனித வாழ்வில் ஏன்
சராசரிக்கும் கீழாகக் கிடக்கிறார்கள்
சமூகத்தையே சீர்திருத்து இவர்களுக்கு
தன் குடும்பத்தை சரியாக்கத் தெரியாதா ?"
என்றான்
எல்லோரும் அமைதியாக
என் முகத்தைப் பார்த்தார்கள்
"இதோ உனக்கான பதில்
நடு ரோட்டிலேயே நிற்கிறது "என்றேன்
"புரியவில்லை "என்றனர் கோரஸாக
"இதோ சில நிமிடங்களில்
சீர்கெட்டுப் போன இந்த போக்குவரத்தை
சீர் செய்யும் காவலருக்கு
கார் ஓட்டத் தெரியுமா என்பது கூட சந்தேகமே
ஆயினும்
மற்றவர்கள் முறையாக பயணம் செல்ல
மிகச் சரியாக வழிகாட்டத் தெரியும்
அவருடைய முழுத் திறனையும்
அதில் ரசிப்போம்
அவருக்கும் நம்மைப் போல்
கார் ஓட்டத் தெரிந்து
என்ன ஆகிவிடப் போகிறது "என்றேன்
அவர்களுக்கு என் பதில்
புரிந்ததாகத் தெரியவில்லை
போக்குவரத்து சீராகிக் கொண்டிருந்தது
எங்கள் வண்டியை ஓரம் கட்டினார் காவலர்
நாங்கள் எரிச்சலுடன் காத்திருந்தோம்
அந்தச் சிவப்புச் சுழல் விளக்கு பொருத்திய வண்டி
அதற்கான நூற்றுக்கும் அதிகமான
இணைப்பு வண்டிகளுடன் கடந்து செல்ல
அரை மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது
போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விட்டது
போரடிக்காது இருப்பதற்காகவோ
நிஜமான சந்தேகத்திலோ
நண்பன் இப்படிக் கேட்டான்
"சமூக வாழ்வில் இத்தனை உயரம் தொட்டு
நம்மை வியப்பிலாழ்த்தும் இவர்கள்
தனி மனித வாழ்வில் ஏன்
சராசரிக்கும் கீழாகக் கிடக்கிறார்கள்
சமூகத்தையே சீர்திருத்து இவர்களுக்கு
தன் குடும்பத்தை சரியாக்கத் தெரியாதா ?"
என்றான்
எல்லோரும் அமைதியாக
என் முகத்தைப் பார்த்தார்கள்
"இதோ உனக்கான பதில்
நடு ரோட்டிலேயே நிற்கிறது "என்றேன்
"புரியவில்லை "என்றனர் கோரஸாக
"இதோ சில நிமிடங்களில்
சீர்கெட்டுப் போன இந்த போக்குவரத்தை
சீர் செய்யும் காவலருக்கு
கார் ஓட்டத் தெரியுமா என்பது கூட சந்தேகமே
ஆயினும்
மற்றவர்கள் முறையாக பயணம் செல்ல
மிகச் சரியாக வழிகாட்டத் தெரியும்
அவருடைய முழுத் திறனையும்
அதில் ரசிப்போம்
அவருக்கும் நம்மைப் போல்
கார் ஓட்டத் தெரிந்து
என்ன ஆகிவிடப் போகிறது "என்றேன்
அவர்களுக்கு என் பதில்
புரிந்ததாகத் தெரியவில்லை
போக்குவரத்து சீராகிக் கொண்டிருந்தது
30 comments:
எனக்குப் புரிந்தது என்று நினைக்கிறேன் :)
சீர் கெட்டுப் போன போக்குவரத்தை காவலர் சரி செய்வது உண்மை. ஆனால்.. சீர் கெட்ட சமூகத்தை இந்த 'தலைவர்கள்' சீர் திருத்துகிரார்களா?
வணக்கம்
ஐயா
இந்த பலவீனத்தால்தான் இன்று பலர்வாழ்வு சிந்தையுண்டு கிடக்கிறது...சொல்லி வேண்டிய கருத்தை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி வெளியிட்ட விதம் தனிச்சிறப்பு ஐயா. பகிர்வுக்கு நன்றி த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாஸிட்டிவ்! நல்ல சிந்தனை.
நல்ல சிந்தனை....
த.ம. +1
பலமான சிந்தனை ஐயா...
நம் மண்ணின் பெருமைகளில் (?) இதுவும் ஒன்று.
நல்ல சிந்தனைஐயா
தம+1
முன்பே ரசித்தது இப்போது மீண்டும் ரசிக்கிறேன்
/மற்றவர்கள் முறையாக பயணம் செல்ல மிகச் சரியாக வழிகாட்டத் தெரியும்//
ஆனால் சிவப்புச் சுழல் விளக்கு பொருத்திய வண்டியில் செல்லுபவர்களுக்கு வழிகாட்டத் தெரியும் என்றாலௌம் அது நல்ல வழியாக இருக்காது என்பதுதான் உண்மை
//அவர்களுக்கு என் பதில் புரிந்ததாகத் தெரியவில்லை//
:) யாருக்கும் லேஸில் புரியாத சிலவற்றை தாங்கள் புரியவைக்கும் பாணிதான் தங்களின் தனிச்சிறப்பு என்பது எனக்கு நன்கு புரிகிறது. :)
//போக்குவரத்து சீராகிக் கொண்டிருந்தது//
அதுதான் இதில் நமக்கு மிகவும் முக்கியத்தேவை. எப்படியோ ஒருவழியாகச் சீரானதில் சிறிய மகிழ்ச்சி. :)
உண்மைதான் அய்யா, தாங்கள் சொன்னவரிகள் அனைத்தும். நன்றி.
அல்ல பதில் தான் ஐயா தம +1
சென்னையில்தான் இப்படி! மதுரையிலுமா!
இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை ஐயா! ஆனாலும் கவிதையாக சொன்னவிதம் சிறப்பு! நன்றி!
தேன்மதுரத்தமிழ் கிரேஸ் //.
உடன் வரவுக்கும்
சுவாரஸ்யமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
bandhu ...//
உடன் வரவுக்கும்
சிந்திக்கவைக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ரூபன் said...//
கருத்தை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி வெளியிட்ட விதம் தனிச்சிறப்பு//
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ஸ்ரீராம். said...//
பாஸிட்டிவ்! நல்ல சிந்தனை.//
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வெங்கட் நாகராஜ் said...//
நல்ல சிந்தனை.... //
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
திண்டுக்கல் தனபாலன் said..//
.
பலமான சிந்தனை//
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Dr B Jambulingam said...//
நம் மண்ணின் பெருமைகளில் (?)
இதுவும் ஒன்று.//
கேள்விக் குறியை மிகவும் இரசித்தேன்
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கரந்தை ஜெயக்குமார் said...//
நல்ல சிந்தனைஐயா//
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
G.M Balasubramaniam said..//
.
முன்பே ரசித்தது இப்போது
மீண்டும் ரசிக்கிறேன்//
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Avargal Unmaigal said...//தங்கள் உடன் வரவுக்கும்
யதார்த்த நிலை விளக்கிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வை.கோபாலகிருஷ்ணன் said...
//அவர்களுக்கு என் பதில் புரிந்ததாகத் தெரியவில்லை//
:) யாருக்கும் லேஸில் புரியாத சிலவற்றை தாங்கள் புரியவைக்கும் பாணிதான் தங்களின் தனிச்சிறப்பு என்பது எனக்கு நன்கு புரிகிறது//.
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
mageswari balachandran said...//
உண்மைதான் அய்யா, தாங்கள் சொன்னவரிகள் அனைத்தும்//
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
R.Umayal Gayathri //.
உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
புலவர் இராமாநுசம் said...
சென்னையில்தான் இப்படி! மதுரையிலுமா!//
மதுரையும் தமிழ் நாட்டில்தானே இருக்கிறது
‘தளிர்’ சுரேஷ் said...
இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை ஐயா! ஆனாலும் கவிதையாக சொன்னவிதம் சிறப்பு! நன்றி!//
உடன் வரவுக்கும் மனம் திறந்த
வெளிப்படையான கருத்துரைக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Post a Comment