Thursday, June 25, 2015

சில சந்தேகங்கள்

சராசரிகள் எல்லாம் பள்ளி நாட்களில்
புத்திசாலிகளாய் ஜொலிக்க
உலகுக்கு பல அபூர்வ கண்டுபிடிப்புகளைக்
கொடுத்தவர்கள் எல்லாம் ஏன்
பள்ளியில் சேரவே
தகுதியற்றவர்களாய்க் கருதப்பட்டார்கள் ?

கல்வித்திட்டம் சரியில்லையா அல்லது
நம் அனுமானங்கள் சரியில்லையா ?

சராசரிகள் எல்லாம் இளமைக்காலங்களில்
அறிவுப் பெருக்கத்திற்கு
நூல்களையும் சான்றோர்ளையும் சார்ந்திருக்க
தீர்க்கதரிசிகள் எல்லாம் ஏன்
தனிமையையும் காடு மலைகளையும்
விலங்கினங்களையும் சார்ந்தே இருந்தார்கள் ?

நூல்களைவிட தனிமையும் விலங்கினங்களும்
அதிகம் சொல்லித் தருமோ ?

அறிஞர்களும் சான்றோர்களும்
தங்கள் உணர்வுகளை எண்ணங்களை
நேரடியாக வெளிப்படுத்திப் போக
எல்லையற்ற சக்திமிக்கவனுக்கு மட்டும் ஏன்
தன்னை வெளிப்படுத்திக் கொள்ள
ஒரு அவதாரமோ ஒரு தூதுவனோ
அவசியத் தேவையாக இருக்கிறது ?

ஆண்டவன் என்பவன் மனிதனுக்கு
மட்டும்தானா ? அல்லது
மனிதனுக்குத் தான் ஆண்டவன் தேவையா ?

25 comments:

G.M Balasubramaniam said...

ஆண்டவனுக்கு மனிதனும் மனிதனுக்கு ஆண்டவனும் தேவை. நீங்கள் குரிப்பிடுவது எக்செப்ஷன்ஸ் அல்லவா.?

திண்டுக்கல் தனபாலன் said...

இயற்கை தரும் பாடத்தை விட சிறந்தது ஏதுமில்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம்...

Yaathoramani.blogspot.com said...


G.M Balasubramaniam //.மிகச் சரி
தங்கள் உடன் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

.

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

..நான் சொல்ல நினைத்தது அதுவே
தங்கள் உடன் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yarlpavanan said...

சில சந்தேகங்கள்
பலவாறு
எண்ணமிட வைக்கும்
சிறந்த பதிவு!

Yaathoramani.blogspot.com said...

Yarlpavanan Kasirajalingam //

உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

சசிகலா said...

அறிவு சார்ந்த விளக்கங்கள் நூல்களில் இருக்க தீர்க்கதரசிகள் ஏன் காடுகளை நோக்கிப்போகின்றனர். நல்ல பல சிந்திக்க வைக்கும் கேள்விகள். தகுந்த பதிலையும் ஒரு பதிவாக தந்திடுங்கள்.

Yaathoramani.blogspot.com said...

சசி கலா said...
அறிவு சார்ந்த விளக்கங்கள் நூல்களில் இருக்க தீர்க்கதரசிகள் ஏன் காடுகளை நோக்கிப்போகின்றனர். நல்ல பல சிந்திக்க வைக்கும் கேள்விகள்.//

திண்டுக்கல் தனபாலன் said..//.
இயற்கை தரும் பாடத்தை விட சிறந்தது ஏதுமில்லை என்று அவர்கள் நினைத்திருக்கலாம்..

balaamagi said...


வணக்கம்,
தங்கள் வரிகளில் இருந்து,
எல்லையற்ற சக்திமிக்கவனுக்கு மட்டும் ஏன்
தன்னை வெளிப்படுத்திக் கொள்ள
ஒரு அவதாரமோ ஒரு தூதுவனோ
அவசியத் தேவையாக இருக்கிறது ?

அப்படி வாங்க,
இதை நாம் சொன்னால் நம்மை ஏளனமாக பார்க்கக ஒரு கூட்டம்.
அருமையான வரிகள் சிந்தனையைத் தூண்டும் வரிகள், வாழ்த்துக்கள். நன்றி.

சென்னை பித்தன் said...

//ஆண்டவன் என்பவன் மனிதனுக்கு
மட்டும்தானா ? அல்லது
மனிதனுக்குத் தான் ஆண்டவன் தேவையா ?//

இரண்டும்தான்
த ம 4

Yaathoramani.blogspot.com said...

mageswari balachandran said..//.
அப்படி வாங்க,
இதை நாம் சொன்னால் நம்மை ஏளனமாக பார்க்கக ஒரு கூட்டம்.
அருமையான வரிகள் சிந்தனையைத் தூண்டும் வரிகள்,//

உணர்வுப்பூர்வமான பின்னூட்டம்
மனம் கவர்ந்தது
மிகக் குறிப்பாக "அப்படி வாங்க "

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் said...//

இரண்டும்தான்//

உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” said...

சிந்திக்க வைக்கும் கேள்வி!

ஸ்ரீராம். said...

யோசிக்க வைக்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஆண்டவன் என்பவன் மனிதனுக்கு மட்டும்தானா?//

இல்லை. ஆண்டவன் எல்லாவற்றிற்கும் அப்பாற் பட்டவன். அவனின்றி ஒரு அணுவும் அசையாது.
அவனை யாராலும் சுலபமாகப் புரிந்துகொள்ளவும் இயலாது.

//அல்லது மனிதனுக்குத் தான் ஆண்டவன் தேவையா?//

தினமும் அன்றாட நம் வசதியான வாழ்க்கையில் தேவையில்லாதது போலவேதான் தோன்றும். அவன் அருள் தேவை என்று நினைக்கும் காலம் வரும்போது நிச்சயமாக ஒருநாள், தேவைப்படவும் கூடும்.

இவையெல்லாம் என் பொதுவான சொந்தக் கருத்துகள் மட்டுமே.

தாங்கள் ஆங்காங்கே மேலே குறிப்பிட்டுள்ளவைகள் சில விதிவிலக்குகளாக இருக்கலாம்.

யோசிக்க வைக்கும் அருமையான பகிர்வுக்கு நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

யாருக்கு யார் தேவை......

சிந்திக்க வைக்கும் பகிர்வு.....

த.ம. 7

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

அற்புதமான பின்னூட்டம்
இயற்கையோடு இயைந்து இருப்பைவகளுக்கு
நிச்சயமாக ஆண்டவன் குறித்த அச்சமோ
சிறு எண்ணமோ கூட இருப்பதில்லை
வேண்டியதுமில்லை

ஏனெனில் இயற்கையே ஆண்டவன்தானே

அவருடன் முரண்படாதுதானே எக்கணமும்
அவைகள் இருக்கின்றன

அறிவும் மனமும் கொண்டதாக அதிகம்
அலட்டிக் கொள்கிற மனைதனுக்குத் தான்
அவன் அதிகம் தேவைப்படுகிறான்

ஆண்டவனும் இவனிடம் நெருங்கத்தான்
அதிக அச்சம் கொள்கிறான்

Yaathoramani.blogspot.com said...

‘தளிர்’ சுரேஷ் said..//
.
சிந்திக்க வைக்கும் கேள்வி!//
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். said...//
யோசிக்க வைக்கிறது.//
உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் said..//.
யாருக்கு யார் தேவை......

சிந்திக்க வைக்கும் பகிர்வு.....


உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

ப.கந்தசாமி said...

சந்தேகமே ஆபத்திற்கு அறிகுறி.

Yaathoramani.blogspot.com said...

பழனி. கந்தசாமி said..//.
சந்தேகமே ஆபத்திற்கு அறிகுறி.

சந்தேகம் ஆராய்ச்சிக்கும்
தொடர்ந்து தேடலுக்கும்
வழிவகுக்கும் தானே இல்லையா ?

மகிழ்நிறை said...

கல்வியியல் சிந்தனைகளை எல்லோரும் முன்னெடுப்பது ஆரோக்கியமான விஷயம் இல்லையா சார்!! அவசியமான சிந்தனை! அருமை!

Yaathoramani.blogspot.com said...

Mythily kasthuri rengan said...
கல்வியியல் சிந்தனைகளை எல்லோரும் முன்னெடுப்பது ஆரோக்கியமான விஷயம் இல்லையா சார்!//

தங்கள் வரவுக்கும் அருமையான
ஆழமான சிந்தனையில் பிறந்த
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
சொல்ல வந்த விடயத்தை மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் அறிவு மிக்க கருத்து பகிர்வுக்கு நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment