நாம்தான் சூட்சுமம் தெரியாது
செக்கு மாடாய்
சுற்றிச் சுற்றித் திரிகிறோமா ?
அழகிய மலரினைப்போல
குழந்தையின் சிரிப்பினைப்போல
அன்றாட விடியலைப்போல
அழகானவை
இனிமையானவை
உயர்வானவை எல்லாம்
மறைப்புகள் ஏதுமின்றி
எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகையில்
நாம் தான்
கண்ணை மூடி
காட்சி தேடும்
மூடனாகத் திரிகிறோமா ?
தினம் எதிர் கொள்ளும்
சுனாமிச் சீற்றங்களும்
பூகம்ப அதிர்வுகளும்
எரிமலை குழம்புகளும் கூட
நம்முள்
எவ்வித சலனங்களையும்
ஏற்படுத்தாது போக....
வெகு சிலருக்கோ.....
...
முதலிரவில் மறுத்துச் சொன்ன
ஒரே ஒரு வார்த்தை.கூட..
கை மாறி மாறி வந்து சேர்ந்த
ஒரு சிறு கனி.கூட..
அலைந்து ஓய்ந்துச் சாய்ந்த
அடி மரத்து நிழல் கூட
விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போக
போதி மரமாகி போக
நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோமா ?
நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்து
சூட்சுமம் அறியும் உபாயமறியாதிருந்து
சவமாய் வாழ்ந்தே சாகிறோமா ?
செக்கு மாடாய்
சுற்றிச் சுற்றித் திரிகிறோமா ?
அழகிய மலரினைப்போல
குழந்தையின் சிரிப்பினைப்போல
அன்றாட விடியலைப்போல
அழகானவை
இனிமையானவை
உயர்வானவை எல்லாம்
மறைப்புகள் ஏதுமின்றி
எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகையில்
நாம் தான்
கண்ணை மூடி
காட்சி தேடும்
மூடனாகத் திரிகிறோமா ?
தினம் எதிர் கொள்ளும்
சுனாமிச் சீற்றங்களும்
பூகம்ப அதிர்வுகளும்
எரிமலை குழம்புகளும் கூட
நம்முள்
எவ்வித சலனங்களையும்
ஏற்படுத்தாது போக....
வெகு சிலருக்கோ.....
...
முதலிரவில் மறுத்துச் சொன்ன
ஒரே ஒரு வார்த்தை.கூட..
கை மாறி மாறி வந்து சேர்ந்த
ஒரு சிறு கனி.கூட..
அலைந்து ஓய்ந்துச் சாய்ந்த
அடி மரத்து நிழல் கூட
விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போக
போதி மரமாகி போக
நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோமா ?
நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்து
சூட்சுமம் அறியும் உபாயமறியாதிருந்து
சவமாய் வாழ்ந்தே சாகிறோமா ?
11 comments:
சூழ்ச்சியில் சூட்சுமமும் இருக்கிறது...!
சூட்சுமத்தை சூட்சுமமாக அன்றி நேரிடையாகக் கவிதை வடிவில் வெளியிட்டமைக்கு நன்றி.
//விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்து//
நல்லதொரு ஆக்கம். மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.
சிறப்பான பகிர்வு.
த.ம. 3
"சவமாய் வாழ்ந்தே " வித்தியாசமான சொல்லாடல்
சில சமயங்களில் வாழ்க்கையின் சூட்சுமங்கள் புரியாமல்தான் போகிறது.
திண்டுக்கல் தனபாலன் //
முதலாமவர் திரு நீலகண்டர்
இரண்டாமவர் பர்த்ருஹரி முனிவர்
மூன்றாமவர் புத்தர்
சாட்டை அடியாய் அடிச்சிட்டீங்க..
வணக்கம்
ஐயா
படித்த போது சிந்தகவைத்த பதிவு பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
செக்கு மாடாய் மிகச்சரியான வார்த்தைப்பிரயோகம்.
சிறப்பான தத்துவம்!
ஆஹா! அருமையான தத்துவம்....
Post a Comment