Friday, June 5, 2015

நெத்தியடி

காங்கிரஸ்  கொடிக்கும்
இந்திய அரசின் கொடிக்கும்
மிகச் சரியாகக் கவனித்தால் மட்டுமே
புரியக் கூடிய சிறு வித்தியாசம் போல

ஆன்மீகத்திற்கும் மதத்திற்கும்
ஒரு சிறு வித்தியாசம் உண்டு

அது மிகச் சரியாகப் புரியாததால்தான்
நாத்திகவாதிகளின் சதிராட்டமும்
ஆத்திகவாதிகளின் கொண்டாட்டமும்
இவ்வுலகில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது

இதை சீர் செய்ய
மதவாதிகளும் விரும்பமாட்டார்கள்
நாத்திக வாதிகளும் விரும்பமாட்டார்கள்

காரணம்
இதனைச் சீர் செய்தால்
இருவர் பிழைப்பும் நாசமாகிப் போய்விடும் என்பது
அவர்கள் இருவருக்கும் தெரியும்

இதனைப் புரியாது
என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே
நாம் தான் இரண்டையும்
போஷித்துக் கொண்டிருக்கிறோம்
நாம்தான்  நாசமாகிக் கொண்டும் இருக்கிறோம் 

11 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

சரியான புரிதல் யாரும் சிந்தித்திருக்க மாட்டார்கள் ஐயா. சிந்தித்து பதிவாக பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.த.ம 2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai said...

அருமையானதொரு அலசல்
தமிழ் மணம் 3

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.

உண்மையை சரியான கோணத்தில் சிந்தித்து சொல்லியிருக்கிறீர்கள்.! நடுவில் நிற்கும் நாம்தான்
எங்கும் நகர இயலாது இருதலைக் கொள்ளி எறும்பாகிறோம் .பகிர்வுக்கு நன்றி.
தாமத வருகைக்கு மன்னிக்கவும். இனித் தங்கள் பதிவுகளைத் தொடர்கிறேன். நன்றி.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

’நெத்தியடி’ யான ஆக்கம் :)

balaamagi said...

நெத்தியடி தான் சூப்பர். நன்றி

G.M Balasubramaniam said...

சரியாகப் புரிந்து கொள்ளாமல் இலக்கு இல்லாமல் நெத்தியடி தேவையா யாரை நோக்கி அது.?

S.P.SENTHIL KUMAR said...

//அது மிகச் சரியாகப் புரியாததால்தான்
நாத்திகவாதிகளின் சதிராட்டமும்
ஆத்திகவாதிகளின் கொண்டாட்டமும்
இவ்வுலகில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது//


உண்மையான வரிகள்.
த ம 4

திண்டுக்கல் தனபாலன் said...

ஆக மொத்தமும் நாச(மு)ம்...

sury siva said...

Spiritual is not just to get confined and imprisoned within the parameters of ritual, but to travel beyond .
If only one could understand every step of Raja yogha and dwell deep at every step before proceeding to the next step,
what Ramani sir indicates could very well be understand. Unfortunately, most of us, me not excluded, run assuming the understanding of basics.
The first two steps Yama and Niyama themselves require a rigorous training of nearly 7 to 10 years.
We just happen to read a couple of books and feel that we have understood everything and try to explain all from our mindset.
What finally results is
what Didndugal Dhanapalan has said.
subbu thatha

sury siva said...

There are a few typographical errors which have crept in my earlier comments.
Please read :

instead of 'within the parameters of ritual..."

Instead of "What Ramani Sir .........well be understand."
read: " what Ramani Sir................well be understood."

subbu thatha
"within the parameters of rituals."

sury siva said...

Please read "rituals" instead of "ritual"
They mean different things.

Post a Comment