Monday, June 8, 2015

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்.......

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

புராண காலங்களில்
மன்னர் பரம்பரைகளில்
வ்ம்சமற்றுப் போகையில்
மன்னர்களைத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு
பட்டத்து யானைகள்
ஒரு வரப் பிரசாதமாகவே
இருந்திருக்கின்றன

எனவே ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

யானைகளில் ஜாதி உண்டுதான்
ஆயினும் அவைகளுக்கு
ஜாதி பார்க்கத் தெரியாது
யானைகளுக்கும் மதம் பிடிக்கும்தான்
ஆனால நம் மதம் பற்றித் தெரியாது
தனியாக அதனிடம்மாட்டினால்
மாட்டியவர்கள் பிரியாணிதான்
ஆனால் அது சைவம்தான்

ஆகையால் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

அதனைப் பராமரிக்க
அதிகம் செலவில்லை
தேர்தல் காலங்களில் ஒரு நாளின் செலவு
அதற்கு ஓராண்டுக்குப் போதும்
தேர்தல் பணியாளர்கள் பாதுகாப்புப் பணி
எல்லாவற்றையும் கூட்டிப் பார்க்க
செலவே இல்லாதது போலத்தான்

அதனால் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

அதனிடம் உள்ள பெரும் நிறை
எடை மட்டுமல்ல
நம்மைப் போல தலைவர்களைத் தேடி
அந்தப் புறங்களிலும்
தர்பார் மண்டபங்களிலும்
தலைவர்களின் ரகசிய வீடுகளிலும் அலையாது
மாட வீதிகளிலும்
மக்கள் கூடும் இடங்களிலேயேதான்
மாலையோடு தேடித் திரியும்

அதற்காகவாவது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

ஒரே ஒரு குறை
அதற்கு ஐந்தறிவு
நமக்கு ஆறு
அறிவு இருந்து பயன்படுத்தாதற்கும்
அது இல்லாமல் இருப்பதற்கும் கூட
அதிக வித்தியாசமில்லை
என்வே அது கூடஒரு குறையில்லை

இதை உணர்ந்தாவது
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்

ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

இலவச பிச்சை
மாறி மாறிக் கூட்டணி
ஜாதி வெறித் தூண்டல்
பரஸ்பர சாக்கடைச் சேறு வீச்சு
சவால் சவுடால் பேச்சு
இத்தனை சனியன்களையும்
ஒட்டுமொத்தமாய் ஒழித்துத் தொலைக்கவாவது
நாம் நிம்மதியாய் இருந்து தொலைக்கவாவது

இனி வரும் காலங்களிலேனும்
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை 
வளர்க்கத் துவங்குவோமா ?

13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரே ஒரு குறை, அதற்கு ஐந்தறிவு, நமக்கு ஆறு அறிவு இருந்து பயன்படுத்தாதற்கும் அது இல்லாமல் இருப்பதற்கும் கூட அதிக வித்தியாசமில்லை
எனவே அது கூடஒரு குறையில்லை//

சிந்திக்கத்தூண்டும் மிக அருமையான ஆக்கம். :)

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான சிந்தனை.

த.ம. 2

அன்பே சிவம் said...

அய்யா மன்னிக்க
உங்கள் கோரிக்கை ஏற்பதாக இல்லை.
காரணம்
தெருவுக்கு தெரு
தருவதுதான்
எங்கள் திட்டம்
அதற்கு முன்னோட்டமாக
ஊருக்கொன்று விடப்போகிறோம்
வெள்ளோட்டம்.

Yaathoramani.blogspot.com said...

அன்பே சிவம் //

..அதுவும் சரிதான்
வார்டு எலெக்ஸனை
நான் மறந்து விட்டேன்
தெருவுக்குத் தெருவே சரி
வாழ்த்துக்களுடன்....

bandhu said...

பட்டத்து யானைக்கு எப்படி லஞ்சம் கொடுத்து தன் கட்சியினரை மட்டுமே தேர்ந்தெடுக்கச் செய்யும் தொழில் நேர்த்தி தெரிந்தவர்கள் நம் அரசியல்வாதிகள்..

அதனால்..

முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு? திருமங்கலம் பார்முலா.. பண விநியோகம் என்று இல்லை மறை காய் மறையாக இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படையாகவே தெரிய நடக்கிறது. அப்படி விநியோகிக்கப் படும் பணம் 'நியாயமான' முறையில்.. ஊழல் இன்றி விநியோகம் செய்ய ..2G போல் இல்லாமல், வெளிப்படையான ஏல முறைப்படி, யார் தொகுதிக்கு நிறைய பணம் தருகிறார்களோ.. அவரே அந்த தொகுதியின் பிரதிநிதி என்ற சட்டத்தை கோருவோம்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
ஒவ்வொரு சன்ற மன்ற யானைகளும் தொகுதியில் வென்ற பின் பிச்சைபோட்ட மக்களை திரும்பி பார்க்க மாட்டார்கள் இதுதான் கவலையான விடயம் கருத்து நிறைந்த சிந்தனை.. த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

அதிக வித்தியாசமில்லை என்பது உண்மை தான்...

அம்பாளடியாள் said...

யானைகளில் ஜாதி உண்டுதான்
ஆயினும் அவைகளுக்கு
ஜாதி பார்க்கத் தெரியாது
யானைகளுக்கும் மதம் பிடிக்கும்தான்
ஆனால நம் மதம் பற்றித் தெரியாது
தனியாக அதனிடம்மாட்டினால்
மாட்டியவர்கள் பிரியாணிதான்
ஆனால் அது சைவம்தான்

ஆகையால் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

கவிதையின் ஒவ்வொரு வரியிலும் தங்களின் ஆதங்கம் புரிகிறது ஐயா
கூடவே மனமும் வலிக்கிறது :( இன்றைய அரசியல் நிலவரங்கள் மாற வேண்டும் !

G.M Balasubramaniam said...

தேர்தல் எப்போதோதான் வருகிறது. என்றைக்கும் யானையை கட்டிப் பராமரிப்பது என்றால் எது செலவு அதிகம்...?

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said..
சிந்திக்கத்தூண்டும் மிக அருமையான ஆக்கம்.//
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
:

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் said...
சிறப்பான சிந்தனை//

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

bandhu //ஆஹா இது அருமையான
ஐடியாவாக இருக்கே

Yaathoramani.blogspot.com said...

ரூபன் //உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Post a Comment