Thursday, June 18, 2015

நிஜமாகும் கட்டுக்கதை

ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம்  உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம் சாத்தியமற்றதென்றும்
ஒரு  தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து
சாரமற்ற  என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது

எங்கிருக்கும் உடலையும் எங்கிருக்கும் உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது
அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது

இப்போதெல்லாம்
உயிரை பிரித்து வைத்து உலவிய
 அரக்கனின் கதையும் கூட
சாத்தியமென்றே படுகிறது எனக்கு 

13 comments:

சீராளன் said...

வணக்கம் ஐயா !

காரணம் இல்லாமல் கட்டுக் கதைவருமோ ?

அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
தமிழ்மணம் கூடுதல் உருவாக்கு !

ஸ்ரீராம். said...

ப்ரக்ரஸிவ் காம்ப்ரமைஸ்!!!!!!

:))))))))))))

ஸ்ரீராம். said...
This comment has been removed by the author.
ஸ்ரீராம். said...
This comment has been removed by the author.
கரந்தை ஜெயக்குமார் said...

அன்பின் வலிமை அது
நன்றி ஐயா
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பிருந்தால் எதுவும் சாத்தியம் தான்...!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நேர்மறை எண்ணங்கள் நம்மை மேம்படுத்தும் என்பதற்கு நல்ல சான்று.
அண்மையில் விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன், காண வாருங்கள்.
http://drbjambulingam.blogspot.com/2015/06/200-5000.html

சசிகலா said...

அன்பிருந்தால் எதுவும் சாத்தியப்படுமே.. நன்றாகச் சொன்னீர்கள் ஐயா.

balaamagi said...

அய்யா, வண்கக்ம.முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து
உண்மைதான், வாழ்த்துக்கள், தொடருங்கள். நன்றி.

G.M Balasubramaniam said...

நம்ப முடியாதவற்றுக்கு இப்படியும் வியாக்கியானம் தரலாம் வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

புதிய சிந்தனை
தம+1

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பு ஐயா! இது மீள்பதிவா? ஏற்கனவே படித்த மாதிரி தோன்றுகின்றது!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அன்பால் எதையும் சாதிக்கமுடியும்... ஐயா.. மிக அருமையான கருத்தாடல் பகிர்வுக்கு நன்றி ஐயா. த.ம 9

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment