Wednesday, July 1, 2015

காரணம் மறந்த காரியங்கள்...

நம் நடன மகிழ்வுக்கு
ஒத்திசைவாய் இருக்குமென
நாம் கட்டிக் கொள்ளும்
காலச் சதங்கை
அதன் போக்கில் போவோமெனில்
நம்மை கணந்தோரும் ஆடவிட்டு
நிச்சயம் மூச்சிறைக்க வைக்கும்

சுமை இறக்கி இளைப்பாற
உதவியாய் இருக்குமென
நாம் சார்ந்திருக்கும்
உறவுச் சுமைகல்
சற்று அசர ச் சாயுமெனில்
அதுவே கனத்தச் சுமையாகி
நம்மைக் கதற கதற வைக்கும்

அக்கரைப் போய்ச்சேர
ஆதரவாய் இருக்குமென
நாம் விரும்பி ஏறிய
நட்புப் படகு
துடிப்பின் விசையை இழந்தோமெனில்
நம் திசையை அது தீர்மானித்து
நம்மை அலைக்கழிக்க வைத்துவிடும்

நம்பிக்கை வளர்க்கவென்று
அவசியத் தேவையென
நாம் விரும்பித் தொடரும்
சம்பிரதாயங்கள் கூட
வெற்றுச் சடங்குகளாகிப் போயின்
அவநம்பிக்கையைப் பெருகவிட்டு
நம்மைஅது அற்பப் பிறவியாக்கிவிடும்

சொல்வதற்கு ஏதுமிருந்தும்
சொல்லத்தான் வேண்டுமென
நாளும் நச்சரிக்கும்
படைப்பது கூட
பயனற்ற கரு கொண்டதாயின்
நம் படைப்பைக் கூளமாக்கி
நம் மதிப்பைச் சூறையாடித்தான் போகும்

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான் ஐயா... அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு போல...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தையும் மிக அழகாக உதாரணங்களுடன் சொல்லி முடித்தே விட்டீர்கள். முடிவு வரிகள் முத்திரை பதிப்பவை. :)

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உதாரணங்களுடன் நச்சென்று பதிந்தது. நன்றி.

UmayalGayathri said...

ஆம் ஐயா ...உண்மைதான் நன்றி
தம +1

சசிகலா said...

சொல்ல வருவதை நாசூக்காக நயமாக பதிவிடும் முறை சிறப்புங்க ஐயா.

ஸ்ரீராம். said...

அருமை.

ஸ்ரீராம். said...
This comment has been removed by the author.
ஸ்ரீராம். said...
This comment has been removed by the author.
”தளிர் சுரேஷ்” said...

அருமையான உதாரணங்கள்! சிறப்பான தத்துவம்! நன்றி!

Yarlpavanan said...

"சொல்வதற்கு ஏதுமிருந்தும்
சொல்லத்தான் வேண்டுமென
நாளும் நச்சரிக்கும்
படைப்பது கூட
பயனற்ற கரு கொண்டதாயின்
நம் படைப்பைக் கூளமாக்கி
நம் மதிப்பைச் சூறையாடித்தான் போகும்" என்ற
தங்களின் சிந்தனை வரிகள்
எழுதுகோல் ஏந்திய
ஒவ்வொருவருக்கும் நல்வழிகாட்டலே!

G.M Balasubramaniam said...

நல்ல அறிவுரை படைப்பவை பயனுள்ளதாகவே இருக்க வேண்டும். நன்று சொன்னீர்.

Unknown said...


சொல்வதற்கு ஏதுமிருந்தும்
சொல்லத்தான் வேண்டுமென
நாளும் நச்சரிக்கும்
படைப்பது கூட
பயனற்ற கரு கொண்டதாயின்
நம் படைப்பக் கூளமாக்கி
நம் மதிப்பைச் சூறையாடித்தான் போகும்

உண்மைதான்!

balaamagi said...

வணக்கம்,
அருமையான வரிகள்,
வாழ்த்துக்கள்
நன்றி.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

சொல்ல வரும் விஷயத்தினை விளங்க வைக்க நீங்கள் தந்த உதாரணங்கள் அருமை. படைத்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது!

த.ம. +1

Thulasidharan V Thillaiakathu said...

உதாரணங்களுடன் சொல்லிச் சென்றமை அருமை நண்பரெ! ஆம் படைப்பவை பயனுள்ளதாகத்தான் இருக்க வேண்டும்....அருமை!

Post a Comment