தமிழில்
இருக் "கலாம் "
வந்திருக் "கலாம் "
போயிருக் "கலாம் "
செய்திருக் "கலாம் "
முடித்திருக் "கலாம் "
நினைத்திருக் "கலாம் "
இப்படி நூறு வார்த்தைகள் உண்டு
ஆயினும்
இவைகள் அனைத்தும்
தெளிவற்றவை
உறுதியற்றவை
நேர்மறைத் தன்மையற்றவை
ஆயினும்
தமிழுக்கு
தமிழனுக்கு
இந்தியனுக்கு
உறுதியை உறுதி செய்வதாய்
நேர்மறைத்தன்மை ஊட்டுவதாய்
இளைஞர்கள் நரம்புகளை முறுக்கேற்றுவதாய்
ஒளிகூட்டுவதாய்
வழிகாட்டுவதாய்
ஒரே ஒரு "கலாமாய் " வந்தவரே
அப்துல் "கலாமாய் " ஒளிர்ந்தவரே
இந்த நூற்றாண்டில்
இந்தியனின் உன்னத உயர்வுக்கு
காரணமாய இருந்தவரே
தொடர்ந்து இருப்பவரே
இன்னும் சிலகாலம்
இருந்து வழிகாட்டியாய்
இருந்திருக் "கலாம் "என
இந்தியரெல்லாம்
கண்ணீர்விடவைத்து....
அந்தப் பொறாமைப் பிடித்த காலன்
தன் கோரமுகத்தை
அழிக்கும் புத்தியை
உங்கள் விசயத்திலும்
காட்டிவிட்டானே "பாவி "
அந்தக் காலனை
முன்னே வரவைத்து
காலால் எட்டி உதைத்து
காலம் வென்றவர்கள் பட்டியலில்
முண்டாசுக் கவிஞர் வரிசையில்
எங்கள் அப்துல் "கலாமே '
நீங்களும் சேர்ந்துவிட்ட இரகசியம்
அறிய மாட்டான் அந்த அப் "பாவி "
விழித்து இருக்க
வருவதே கனவென
புதிய வேதம் சொன்னவரே
நீங்கள் ஒளிகூட்டிக் கொடுத்த
தீபமதைக் கையிலேந்தி
புதிய உலகை நிச்சயம் படைப்போம்
இறுதி மூச்சு வரை
ஓயாது உழைத்த பெருந்தகையே
இனியேனும் கொஞ்சம் ஓய்வெடுப்பீர்
நீங்கள் காட்டிய வழியில்
வீறு போடத் துடித்திருக்கும்
இளைஞர் படைதனைக் கண்டு
இனியேனும் இரசித்து மகிழ்ந்திருப்பீர்
16 comments:
தமிழனுக்கு கலாத்தால் பெருமை என்றால் உங்கள் இரங்கற்பாக்களால் அவருக்கு நீங்கள் பெருமை சேர்த்துள்ளீர்கள்
கவிஞரின் அஞ்சலியில் நானும் பங்கு கொள்கிறேன். அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
மாணவர்களை அவக்குப் பிடிக்கும். இந்தியர்கள் அனைவருமே அவரின் மாணவர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள்.
தமிழில்
முயன்றால் ஜெயிக்கலாம்
பயின்றால் சாதிக்கலாம்
நட்புடன் பழகலாம்.
இப்படியும் சில வார்த்தைகள் இருக்கிறதே அய்யா. உண்மையில்
அன்னாரது மறைவு நம் தேசத்திற்கு மட்டுமல்ல. தேசத்தை நேசிக்கும்
ஒவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் ஏற்பட்ட இழப்பாகவே கருத வேண்டும். ஆழ்ந்த அஞ்சலி.
கலாம் அவர்களின் மறைவு நம் கல்விக்கு இழப்பு மாணவர்களுக்கும் பெரிய இழப்பு . அவர் கற்பித்தவற்றை நாம் நினைவில் கொண்டு கனவாக்கினால் அதுவே நாம் அவருக்குச் செய்ய்யும் அஞ்சலி, மரியாதை!
நாம் எல்லோருமே அவரது மாணவர்கள்! ஆழ்ந்த அஞ்சலிகள்!
இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் தெரிந்த ஒரே கலாம் அப்துல்கலாம். குடும்ப உறுப்பினர்போல அனைவருடைய மனதிலும் நிறைந்தவர். அவரின் கனவை நனவாக்குவோம்.
nenju porukkuthilaye
விழித்து இருக்க
வருவதே கனவென
புதிய வேதம் சொன்னவர்
இன்று உறங்கச் சென்றுவிட்டார்
நிம்மதியாய் உறங்கட்டும்
தம+1
அனைவருக்கும் குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு மாபெரும் இழப்பு...
அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலிகள்...
அருமையான கவிதையாய் ஐயாவின் புகழ் பாடினீர்கள்!
மறைந்த மாபெரும் தலைவருக்கு எனது அஞ்சலிகள்!
விஞ்ஞான விதை விதைத்தவர்-அவர்தம் விதைத்த விதைகள் விருட்சங்களாகும்
கண்ணீரோடு
விண்ணகம் சென்றவரே தங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் ஐயா.
மாணவர்களின் நம்பிக்கை அவர். நல்ல மனிதர்.
மிகச்சிறந்த கவியஞ்சலி! ஆழ்ந்த இரங்கல்கள்!
இந்தியாவின் கனவே கண்ணுறங்கியது.
வேதனை.. வேதனை.
நெஞ்சம் நெகிழ வைத்த இரங்கல் பா!!
டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்!
நீங்கள் ஒளிகூட்டிக் கொடுத்த
தீபமதைக் கையிலேந்தி
புதிய உலகை நிச்சயம் படைப்போம்
அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html
Post a Comment