நிறைவாகச் செய்ய அனுபவமும் விரைவாகச்
செய்யஇளமையும் ,நிறையச் செய்ய இரண்டும் சேர்ந்து
இருத்தலும் அவசியம் என்பதை சமீபத்தில் நாங்கள்
முயற்சி எடுத்து புதிதாக அமைத்த
அரிமா லியோ சங்க
இளைஞர்கள் மூலம் புரிந்து கொண்டோம் .
எங்கள் குடியிருப்புப் பகுதியில்(சுமார் 6000 வீடுகள் )
பாதுகாப்புக்குறித்த விஷயங்களில் பெரியவர்கள்
கவனம் செலுத்த இளைஞர்களைசுற்றுச்
சூழல்குறித்த விஷயங்களில் கவன ம் செலுத்துமாறு
கேட்டுக் கொண்டோம்
நாங்கள் கேட்டு க் கொண்ட ஒரே வாரத்தில்
ஒரு குறிப்பிட்டச் சாலையைத் தேர்ந்தெடுத்து
புதர்களை நீக்கி நூறு பூமரக் கன்றுகளை நடவும்
அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியாகவும்
ஒரு சிறப்பு விழாவுக்காகவும்உடனடியாக மிகச்
சிறப்பாக ஏற்பாடு செய்துவிட்டார்கள்
இதுவரை அப்பகுதியில் அனைவரையும்
மிரட்டுபவராகவும் அதன் காரணமாக
பொது இடத்தைச சுய நலமாகவும்
பயன்படுத்தியவருமான ஒரு ஜாதி
அடிப்படைவாதி விழா நடக்கவிடாதும்
அப்பகுதி மக்களைஒன்று சேரவிடாதும்செய்ய
அடாவடித்தனத்தனமாய் முயற்சிக்க அதனை
அனுபவசாலியான பெரியவர்கள் காவல்துறையின்
முயற்சியுடன் தடுத்து விழாசிறப்பாக நடைபெறவும்
ஒற்ற்றுமையின் மேன்மையை அப்பகுதி மக்கள்
உணர்ந்து தெளியும்படியாகவும் செய்தார்கள்
அப்பகுதி மக்கள் அனைவருக்கும் மட்டுமல்லாது
இயக்கத்தில் பட்டும் படாமலும் இருக்கும் சிலருக்கும்
அனுபவமும் இளமையும் ஒன்று சேர்ந்தால்
எதனையும்சாதிக்க இயலும் என்கிற நம்பிக்கையையும்
போனாசாகஇந்த நிகழ்வு கொடுத்துப் போனது
அந்த விழா குறித்தான சில புகைப்படங்கள்
தங்கள் பார்வைக்காக
13 comments:
அருமை
வணக்கம்
ஐயா
நம்பிகைதான் வாழ்க்கை..நிகழ்வை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல பணி, வாழ்த்துக்கள்.
பணி சிறக்க வாழ்த்துகள்!
இளைஞர்களை அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் சரியான விதத்தில் பயன்படுத்த தெரிந்தால் செய்யும் காரியங்கள் வெற்றி அடையும் என்பதற்கு உங்களை போன்றவர்கலின் முயற்சியே சான்று
வாழ்த்துக்கள் ஐயா. பலரும் இம்முயற்சியை தொடர்ந்தால் சமுதாயம் நன்கு முன்னேறும். பல நேரங்களில் தயக்கதிலேயே நாம் பலவற்றை கடந்து போகின்றோம்.
ஆம் இப்படி ஒற்றுமையுடன் செயல்படுவதை தடுப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருப்பது வேதனை.
வாழ்த்துக்கள் ரமணிசார்
நல்லதொரு பணி! இளமையுடன் அனுபவமும் கைகோர்த்து பணியாற்றியது சிறப்பு! வாழ்த்துக்கள்!
நல்ல பணி மேலும் தொடர வாழ்த்துகள்.....
உங்கள் பணி தொடர இறைவன் அருள்புரியட்டும்
//அனுபவமும் இளமையும் ஒன்று சேர்ந்தால்
எதனையும்சாதிக்க இயலும்//
மிகவும் சரியான வார்த்தைகள். நல்ல வழிகாட்டிகள் கிடைத்தால் இன்றைய இளைஞர்கள் நிறையவே சாதிப்பார்கள்.
நற்பணி தொடர வாழ்த்துக்கள்
Post a Comment