Saturday, February 6, 2016

உயர்ந்தவர்கள்...

நான் ஏற்கெனவே சென்னை வெள்ள
 நிவாரணப் பணிக்காக அரிமா சங்கமும்
வில்லாபுரம் குடியிருப்போர் நலச் சங்கமும்
இணைந்து பொது மக்களிடம் தெருத் தெருவாகச்
 சென்றுநிவாரணப் பொருட்களைச் சேகரித்து
அனுப்பிய விவரத்தைப் பதிவிட்டிருந்தேன்.

எங்கள் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையின்
 காரணமாகமுடிந்த அளவு நிதியும்,
அதிக அளவில் நிவாரணப் பொருட்களும்
வழங்கியவர்கள் மனதில் நீங்கா  இடம்
பெற்றிருந்தாலும் கூட..
( ஏறக்குறைய பதினைந்து   இலட்சம் )

அப்படி வசூலித்துச் செல்லுகையில்
ஒரு மசூதியின் வாயிலில்பிச்சை எடுத்துக்
கொண்டிருந்த ஒரு பெண் தன் அருகில்
இருந்த மகளிடம்  இருபது ரூபாயைக் கொடுத்து
உண்டியலில்போடச் சொன்ன நிகழ்வு
இன்று வரை மனதைத் தொடும்
நிகழ்வாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது

அதற்குப் பின் நடந்த ஒவ்வொரு கூட்டத்திலும்
இந்த நிகழ்வைபதிவு செய்து கொண்டே வந்தேன்.

அதன் படியே நேற்று மதுரை ஃபாத்திமா மைக்கேல்
மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த  மாவட்ட லியோ
சங்கத்  துவக்க விழாவில்  கலந்து கொண்ட
இந்திய அளவில்மாநில அளவில் உயர் பதவியில்
இருக்கிற அரிமாதலைவர்களிடமும் இதை ஒரு
 செய்தியாக மட்டும் பதிவு செய்தேன்.

இதனை மிக அருமையாக தன்
சொற்பொழிவின் போதுசுட்டிக் காட்டி
நெகிழ்ந்த பள்ளித் தாளாளர்
லயன்.ஸ்டாலின்  ஆரோக்கியராஜ் அவர்களின்
பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த லியோ
கூட்டு மாவட்டத் தலைவர்  லயன்.மனோஜ்  அவர்கள்
மிகச் சரியாகஅந்தப் பெண்ணிடம் போய்ச்
சேரும்படியாக ஏற்பாடுசெய்து கொடுத்தால்
அந்தப் பெண்ணின் வாழ் நாள்
முழுமைக்கும் ஒருவேளை உணவுக்கான
ஏற்பாட்டினைத் தன் சொந்தப் பொறுப்பில்
செய்து தருவதாகஅந்த மேடையிலேயே
உறுதியளித்தார்.

அதற்கான ஏற்பாடுகளை இந்த வாரத்தில் செய்து
முடித்து விடுவேன் என்றாலும் இந்த நிகழ்வின் மூலம்

"நல்லவைகளை, நல்லவர்களை எத்தனை முறை
நினைவு கூற முடிந்தாலும் நல்லதே
ஏனேனில் அது தொடர்ந்து நல்லனவற்றையே
தொடர்ந்து விளைவித்துக் கொண்டே போகும் "

என நான் கொண்டிருக்கும் நம்பிக்கையை மீண்டும்
உறுதி செய்து போனது மிகுந்த மகிழ்வளிக்கிறது

இதனைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
கூடுதல் மகிழ்வடைவேன், நீங்களும் மகிழ்வீர்கள்
என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா என்ன ?
( பேசிக்கொண்டிருப்பவர்  தாளாளர்
லயன்  ஸ்டாலின்  ஆரோக்கியராஜ்  அவர்கள்
முன் வரிசையின் வலது  ஓரம் அமர்ந்திருப்பவர்
லயன் மனோஜ்   அவர்கள் )

13 comments:

RAMJI said...

தோண்டும் தோழமையும் அரிமாவின் இரு கண்கள் அந்த கண்களால் நீங்கள் கண்டு நெகிழ்ந்த ஒரு சிறுமியின் வாழ்வு தங்களது அறிய முயற்சியால் மலர போவதை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன் வளாக வளர்க உங்கள் தோண்டும் தோழமையும்

பழனி.கந்தசாமி said...

நெகிழ்ச்சியான நிகழ்வு.

G.M Balasubramaniam said...

பகிர்வுக்கு நன்றி நல்லாரைக் காண்பது நன்றே ...... நலமிக்க நல்லார் சொல் கேட்பதும் நன்றே.....

Gurusamy N said...

மனதைதொட்டது

Gurusamy N said...

மனதைதொட்டது

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனதைத் தொடும் நிகழ்ச்சிகள் மேலும் தொடர்கதையாகப்போவது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகள்.

Saratha J said...

அருமையான பதிவு.

R.Umayal Gayathri said...

நெகிழ்ச்சியான பதிவு சார்

வெங்கட் நாகராஜ் said...

நெகிழ்ச்சி.....

வலிப்போக்கன் - said...

மகிழ்ச்சி ...அய்யா...

ரூபன் said...

வணக்கம்
ஐயா
தகவலை கேட்டபோது மகிழ்ச்சிதான்.. இப்படியாக சிறுதொகையாவது உதவி செய்த அந்த நல்ல மனம் வாழ்க.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

chandrasekran kamesh said...

NALLA MANAM VAZHA THODURATTUM UNAGAL PANI

chandrasekran kamesh said...

NALLA MANAM VAZHA THODURATTUM UNAGAL PANI

Post a Comment