Sunday, May 15, 2016

தேர்தல்...டுவல்த் ஹவர்

நிகழ்காலச் சிறுதுளிக்கு
நெஞ்சமது மடங்குமெனில்
எதிர்காலம் பாலையாகும்
நிச்சயமாய் எனப்புரிந்து

ஜாதிமதச் சகதியிலே
சறுக்கிவிழ நேருமெனில்
நாதியற்றுப் போகும்நம்
சந்ததிகள் என்றறிந்து

காசுபண ஆசையிலே
கணம்மயங்க நேருமெனில்
ஏதுமற்றுப் போகும்நம்
எதிர்காலம் என்றுணர்ந்து

ஐந்துநொடி நேரத்திலே
அறிவிழக்க நேருமெனில்
ஐந்துவருட நரகமுண்டு
தப்பாது எனத்தெளிந்து

போரதற்குச் செல்லுகின்ற
மன்னவனின் தெளிவோடு
சாவடியை நோக்கிப்போ
சரியான முடிவோடு

வரலாறு ஆகவேணும்
மேமாதம் பதினாறு
தவறாது வாக்களித்துத்
தமிழகத்தைச் சீராக்கு

8 comments:

Anonymous said...

எரிகின்ற கொள்ளியிலே
எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி "
சரிகின்ற பாறையிலே
எந்தப் பாறை சுமை தாங்கி ?

வருகின்ற நாட்களிலே
தருபவர் யார் சிந்திக்காது
வாங்குவோர் யார்
தாங்குவோர் யார்

சிந்தித்து செயல்படு
அந்தி நேரம் வருமுன்னே
முந்திப்போய் ஓட்டிடு.

வெங்கட் நாகராஜ் said...

//ஐந்துநொடி நேரத்திலே
அறிவிழக்க நேருமெனில்
ஐந்துவருட நரகமுண்டு
தப்பாது எனத்தெளிந்து//

சரியாகச் சொன்னீர்கள். ஐந்து நொடி தான் ஐந்து வருடங்களை தீர்மானிக்கிறது....

த.ம. +1

G.M Balasubramaniam said...

பல சமயங்களில் முன்புநினைத்ததை மாற்றுவதும் அந்த ஐந்து நொடிகள்தான்

Unknown said...

ஆஹா, என்ன அருமையான சொல் வீச்சு.

Unknown said...

ஆஹா, என்ன அருமையான சொல் வீச்சு.

ADHI VENKAT said...

சரியாய்ச் சொன்னீர்கள்.

ADHI VENKAT said...

சரியாய்ச் சொன்னீர்கள்.

சிவகுமாரன் said...

நல்லாச் சொன்னீங்க

Post a Comment