Wednesday, May 25, 2016

அரசியல் நாகரீகம்

பச்சைத் தன்மை
துளியுமின்றி
பட்டுப்போய் நிற்கும் மரமாய்

அரசியல் நாகரீகத்திற்கும்
தமிழகத்திற்கும்
ஏழாம் பொருத்தமே
என்று இருந்த வேளையில்

வரிசை முக்கியமில்லை என
ஜனநாயகக் கடமையாற்ற
வந்தமர்ந்திருந்த
எதிர்கட்சித்தலைவரின்
பெருந்தன்மையும்

கவனத்திற்கு வராததால்
நேர்ந்த தவறென்றும்
ஒருங்கிணைந்து  பணியாற்றவே
விருப்பம் எனத் தெரிவித்த
முதல்வரின் விளக்கமும்

கொஞ்சம் நம்பிக்கையூட்டிப் போகிறது

பார்ப்போம்

12 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அருமையாகச் சொல்லிவிட்டீர்கள். ஆம்! நம்பிக்கை ஊட்டுகின்றதுதான். ஒரு வேளை முதல்வரும் வலைப்பக்கங்களில் வருபவனவற்றை அறிந்திருப்பாரோ! இரண்டாம் முறையும் ஆட்சி கிடைத்திருக்கிறது என்றாலும் இந்த முறை நோட்டாவிற்குக் கிடைத்த வாக்குகளையும் கண்டதால் அவர் மனதில் ஏற்பட்ட மாற்றமோ!! எப்படியோ மாற்றம் ஏற்பட்டால் நல்லதே!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

தமிழ்மண வாக்குப் பட்டையைக் காணவில்லையே

ஸ்ரீராம். said...

உண்மை. எனக்கும் தோன்றியது அதுதான்.

எப்போதும் தம வாக்குப்பட்டை இருக்கும். வாக்களித்து முடித்தவுடன்தான் காணாமல் போகும். இன்றும் அப்படியே!!!

கவியாழி said...

சனநாயகம் வாழ்க.தமிழக அரசியலில் தமிழர்களுக்காக ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என நம்புவோமாக

ஸ்ரீமலையப்பன் said...

துவக்கம் புதிதாய் இருக்கணும்...... ஏதோ இப்படி ஒரு விளம்பரம்தான் நியாபகத்துக்கு வருது

G.M Balasubramaniam said...

/கவனத்திற்கு வராததால்
நேர்ந்த தவறென்றும்/அப்படியா சொன்னார்கள். நடைமுறை வழக்கம் கடைபிடிக்கப்பட்டது என்றுகூறியதல்லவா நான் படித்த /பார்த்த நினைவு

”தளிர் சுரேஷ்” said...

முதல்வரின் இந்த அறிவிப்பை பார்த்து நாம் தமிழகத்தில்தான் இருக்கிறோமா என்றொரு எண்ணம் வந்துவிட்டது. நல்லதொரு மாற்றம்! தொடரட்டும்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உண்மைதான் என்னாலும்ம்நம்ப முடியவில்லை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உண்மைதான் என்னாலும்ம்நம்ப முடியவில்லை.

Unknown said...

சுருக்கமானவிளக்கம்.இந்நிலைதொடரநந்நிலைநீள வேண்டுவோம்

sampath.g said...

கட்டுஅவுட்டும் காலில் விழதாததும் நல்ல மாற்றம் தான்.

sampath.g said...

கட்டுஅவுட்டும் காலில் விழதாததும் நல்ல மாற்றம் தான்.

Post a Comment