Wednesday, June 15, 2016

இறைவி--விமர்சனம் போல

ஜெயகாந்தன் அவர்களின்" சில நேரங்களில்
சில மனிதர்கள் " நாவலில்

"சீட்டாடுகிற
எல்லோரும் தோற்பதில்லை. ஜெயிக்கவும்
செய்கிறார்கள் .அப்படியிருக்க சீட்டாட்டத்தை ஏன்
தீமையானது என்கிறார்கள் " என ஒரு கேள்வி
எழுப்பி,கதாபாத்திரத்தின் மூலம் அதற்கான பதிலை
இப்படிச் சொல்வார்

"சீட்டாடி ஜெயித்த பணம் வீடு வந்து சேராது
ஆனால் தோற்றால் பணமெடுக்க வீடுதான்
வரவேண்டி இருக்கும் "என்பார்

வென்றால் கொண்டாட வெளி உறவுகள்
ஆயிரம் இருக்கும். ஆனால் தோற்றால்
வந்து விழுகிற அதனால பாதிக்கிற இடம்
நிச்சயம் வீடாகவும் மனைவியாகவும்
குழந்தைகளுமாகத் தான்  நிச்சயம் இருக்கும்

வாழ்க்கை என்பது கணவன், குழந்தைகள்
வீடு என மட்டுமே எனக் கொள்ளுகிறாள் பெண்

வாழ்க்கையென்றால் குடும்பமும் என மட்டுமே
கொள்ளுகிறான் ஆண்

இந்த இரண்டு எதிர் எதிர் நிலைகள்
ஒன்றை ஒன்று  புரிந்து கொண்டு கொஞ்சம்
 அனுசரித்து விட்டுக் கொடுத்துப்போகிற நிலை
வாழ்வைச்  சுவையானதாக்கிப் போகிறதோ
இல்லையோ, பிரச்சனையற்றதாகிப் போகிறது

அதன் காரணமாகவே சில சமூக இயக்கங்களில்
 ( அரசியல்தவிர்த்து  )பயிற்சியின் போது,
முதலில் உன்னைக் கவனி,பின் குடும்பம்,
பின் தொழில்,பின்னரே இந்த சமுக
இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடு என்பதாக
பயிற்றுவிக்கிறார்கள்

சொல்லப் பட்டதிலிருந்து, சொல்லப்படாத
பலவற்றை சிந்திக்குமாறு (நல்ல திசையில்  )
ஒரு படைப்பது தூண்டிப்  போகுமானால்
அதுவே மிகச் சிறந்த படைப்பாக இருக்கும்
எனக் கொண்டால்  இறைவி திரைப்படம்
ஒரு  சிறந்த திரைப்படம்எ ன்பதுவே என் கருத்து

வாழ்த்துக்களுடன்...

8 comments:

ஸ்ரீராம். said...

இன்னும் பார்க்கவில்லை.

ஸ்ரீமலையப்பன் said...

நான் சமீபத்தில் பார்த்த மிக சிறந்த படம் இறைவி... ethilumpudhumai.blogspot.in

kowsy said...

நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனாலும் நீ அதன் பின்னர்தான் சமூகம் என்பதில் எனக்கும் உடன் பாடுதான்

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு விமர்சனம்! நன்றி!

G.M Balasubramaniam said...

சில திரைப்படங்களை தொலைக்காட்சியில் பார்ப்பதோடு சரி. இறைவி என்றொரு படமா.?

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விமர்சனம். பெரும்பாலும் சினிமா பார்க்க முடிவதில்லை. தில்லியில் ஏதோ ஒரு மூலையில் தமிழ்படங்கள் திரையிடுவதால்....

Unknown said...

நான் இன்னும் பார்க்க வில்லை சொல்வது மிக சரி....

வலிப்போக்கன் said...

படம் பார்க்கவில்லை..தொலைக்காட்சியில் வரும்போது பார்த்து் கொள்கிறேன் அய்யா...

Post a Comment