Sunday, June 12, 2016

அவசியமும் அநாவசியமும்

ஆயுதம் என்பது
நிச்சயம் அவசியம் என்போருக்கு
கவசம் நிச்சயம் அவசியம்

அங்கீகாரம் என்பது
நிச்சயம் அவசிய மென்போருக்கு
பட்டயம்  நிச்சயம் அவசியம்

அதிகாரம் என்பது
நிச்சயம் அவசிய மென்போருக்கு
பதவி நிச்சயம் அவசியம்

அழகு
நிச்சயம் அவசியம் என்போருக்கு
அலங்காரம் நிச்சயம் அவசியம்

விவாதம்
நிச்சயம் அவசியம் என்போருக்கு
வார்த்தைகள் நிச்சயம் அவசியம்

................................................................

................................................................

..................................................................

அவசியம்
நிச்சயம் அவசியம் என்போருக்கு
எல்லாமே  நிச்சயம் அவசியம்

அவசியம் என்பது
அவசியம் இல்லை என்போருக்கோ
நிச்சயம் எல்லாமே அநாவசியம்

8 comments:

ஸ்ரீராம். said...

ஹிஹிஹி... சுவர் இருந்தால்தானே சித்திரம்!

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

இருந்தால் நல்லது
இல்லையென்றால் ரொம்ப நல்லது
அவசியம் என்பது அவசியமில்லை
என்பதைச் சொல்வதற்காக இது
சரியாக வரவில்லையோ ?

ஸ்ரீராம். said...

அப்போது அவர்கள் பற்றற்றவர்களோ..

KILLERGEE Devakottai said...

ரசித்தேன் கவிஞரே வார்த்தைகளின் வசீகரத்தை...

G.M Balasubramaniam said...

அவசியம் அநாவசியம் என்று எதையும் பொதுப்படுத்த முடியாதுஎன்றே நினைக்கிறேன்

ஸ்ரீமலையப்பன் said...

அவசியமான பதிவு ... http://ethilumpudhumai.blogspot.in

தனிமரம் said...

அவசியம் அதிகம் தேவை .அருமையான விளக்க கவி ஐயா.

Post a Comment