Tuesday, November 29, 2016

மீன்பிடிப் போட்டி...

குளம் கலக்கும் குணம்
குளம் அழிக்கும் குணம்
மீன் பிடிக்க
நினைப்பவர்களுக்கே வரும்

குளம் ஆக்கும்  மனம்
குளம் காக்கும் குணம்
நீரின் அருமை
அறிந்தவர்களுக்கே தகும்

மீன் பிடிப் போட்டியில்
சேறும் சகதியும்
குளத்து நீரை
சாக்கடையாக்கியத் தினங்கள்

ஒரு கெட்டக்
கனவினைப் போல
மெல்லக் கடந்து போக

மெல்லத் தெளியத்
துவங்குது
எங்கள் ஊர்க்குளத்து நீர்

துவேஷமும் வெறுப்பும்
மெல்லப் படிய
சீராகிடும் மனம் போலும்  

10 comments:

ஸ்ரீராம். said...

ரசித்தேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
உண்மை

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

யதார்த்தம்.

ராமலக்ஷ்மி said...

அருமை.

G.M Balasubramaniam said...

தினம் ஒரு பதிவு கவிதையாகவே எப்படி?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//துவேஷமும் வெறுப்பும் மெல்லப் படிய சீராகிடும் மனம் போலும்//

ஆஹா, இதைப்படித்ததும் ஒருசிலர் மேல் மட்டுமே, அதுவும் கொஞ்சூண்டு மட்டுமே, இருந்து வந்த துவேஷமும் வெறுப்பும், ஒருசில நொடிகளுக்காவது விலகி மனது சீராகிப்போனது போல இருந்தது எனக்கும்.

பகிர்வுக்கு நன்றிகள்.

வலிப்போக்கன் said...

உங்கள் ஊர்க்குளத்தில் நீர் இருப்பது..ஆச்சரியமளிக்கிறது அய்யா....!!!!

Yaathoramani.blogspot.com said...

வலிப்போக்கன் said...//
உங்கள் ஊர்க்குளத்தில் நீர் இருப்பது..ஆச்சரியமளிக்கிறது அய்யா....!!!!//

எங்கள் ஊர் குளம் என்பது
திருப்பரங்குன்றம் தொகுதி
இப்போதுதான் ஓட்டு மீன் பிடிக்கிற சாக்கில்
ஜாதி, மற்றும் பணச் சேற்றைக் கலக்கி
ஊரை நாற அடித்துப் போனார்கள்
இப்போதுதான் தொகுதி தெளியத்
துவங்கி இருக்கிறது

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. ரசித்தேன்.

Post a Comment