Sunday, February 12, 2017

மவுத் டாக்கும் சசி மேடமும்

சினிமா சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் தெரியும்
முன்பெல்லாம் ஒரு புதிய படம் ரிலீஸ் ஆனவுடன்
அதன் வெற்றித் தோல்விக் குறித்து அறிய...

எம்ஆர்.டி.கே எனச் சினிமா  டிஸ்ரிபூஷன் துறையில்
சுருக்கமாக அழைக்கப்படும் மதுரை ராமனாதபுரம்
திருநெல்வேலி, மதுரை ரிஸல்டை அதிகம்
எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் இங்கு ஏ,சென்டர்
பி.சென்டர் மற்றும் சி சென்டரின் கலவை
மிகச் சரியாக இருக்கும்.இங்கு மதிப்பிடப்படும்
மதிப்பீடு கூடுமானவரையில்
மிகச் சரியாகவே இருக்கும்

ஏனெனில் இங்குள்ளவர்கள் எதையும்
நாகரீகம் என்னும் போர்வையில்
மௌனமாக இரசிக்காது சப்தம் போட்டே
இரசிப்பார்கள்.அதற்காகவே தமிழ்பட முன்னணி
இயக்குநர்களும்,குறைந்த கட்டணத்தில் உள்ள
இருக்கையில் அடையாளம் தெரியாமல் அமர்ந்து
பார்க்க வந்த செய்தியெல்லாம் முன்பு
அடிக்கடி பத்திரிக்கையில் வரும்

படம் மட்டும் அல்ல.அரசியல் நிகழ்வுகள் கூட
இங்கு கணிக்கப்படுகிற கணிப்பு
கூடுமானவரையில் மிகச் சரியாகவே இருக்கும்

நானும் கூடுமானவரையில் சில சமூக
இயக்கங்களில் சங்கங்களில் சம்பந்தப்பட்டதால்
பல்வேறு நிலைகளில் உள்ள மக்களை
அன்றாடம் சந்திக்கவேண்டிய சூழலில்
எப்போதும் இருப்பேன்

அன்று முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள்
உடல் நிலை சௌகரியம் இன்றி
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல்
இறுதி வரை யாருமே பார்க்க அனுமதிக்கப்படாமல்
இர்கசியம் காத்தது தொடங்கி,

இராஜி ஹாலில் மொத்தக் குடும்பமும்
முதல்வர் மற்றும் முன்னணி அரசியல்
வாதிகளை எல்லாம் பின் தள்ளி
தேவுடு காத்தது ,

இறுதிச் சடங்கின் போது அவரது
அண்ணன் பையனையே பின் வரச் செய்து
தானே முன்னால் மதச் சடங்குகள் செய்து
அனைவரையும் அதிர்ச்சி கொள்ளச் செய்தது

சுடுகாட்டு மண் ஈரம் காயும் முன்
பொதுச் செயலாளர் பதவிக்கு
முயன்று காய் நகர்த்தியது,

முதல்வருக்கு எதிராக அமைச்சர்களை
தன்னை முதல்வர் பதவிக்கு முன் நிலைப்படுத்திப்
பேசவைத்தது

அடுத்து நடந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கான 
கட்சிக்கூ ட்டத்தில்முதல்வரை ஒரு ஓரம் வைத்து
அவமானப்படுத்தியது,

தீர்ப்பு மிகச் சில நாளில் வருவது வரைக் கூடப்
பொறுக்காது முதல்வரை ராஜினாமா
செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியது

இப்போது சட்டமன்ற உறுப்பினர்களிடம்
பேசுகையில் கொஞ்சம் கூடுதல் வன்முறைத்
தொனித் தெரியும்படிப் பேசியது

இவையெல்லாம் தொடர்ந்து திருமதி
சசிகலா அவர்கள் மீது அனைவருக்கும்
தைரியமானவர் என்பதை விட
திமிர் பிடித்தவர் எனத்தான் எண்ண வைத்துப்
போனதைத் தவிர, தைரியமானவர் என்கிற
பிம்பத்தை உருவாக்கப் பயன்படவில்லை

இதே போன்று ஒரு நிலையை
ஜே ஜெ அவர்கள் செய்திருந்தால் அவர்களை
மிகத் துணிச்சல்காரர் என்கிற பிம்பத்தைக்
கூட்டுக் காட்டி இருக்கும்

காரணம் அவர் மிகப் பெரும் சோதனைகளை
மக்கள் மற்று தொண்டர்களிடம் இருந்த
செல்வாக்கின் காரணமாக
அந்த ஆணவம் பிடித்தவர் என்கிற பிம்பத்தை
உடைத்து துணிச்சல் மிக்கவர் என்கிற
பிம்பத்தை உண்டாக்கி இருந்தார்

என்வே அவர் எதைச் செய்தாலும் அது
அவர் அவர் குறித்து உண்டாக்கி வைத்திருந்த
பிம்பத்தைக் கூட்டிக் காட்டுவதாக் இருந்தது

மாறாக சசிகலா அம்மையாரைப் பொருத்தவரை
மிகச் சரியாகச் சொன்னால் ஜேஜே அவர்களின்
அரசியல் சரிவுக்கு எல்லாம் சசிகலா அவர்களும்
அவர்களது குடும்பத்தார் அனைவரும்தான்
காரணம் என்கிற அசைக்கமுடியாத கருத்து
அனைத்துத் தரப்பு மக்களிடம் இருக்கிற காரணத்தால்

இவர் செய்கிற துணிச்சசலான நடவடிக்கை எல்லாம்
அவர் அவர் குறித்து உண்டாக்கி வைத்திருக்கிற
சூனியக்காரி என்கிற பிம்பத்திற்குத் தான்
வலுசேர்த்துப்போகிறது

இனித் திரும்பமுடியாத அளவு தவறானபாதையில்
வெகு தூரம் வந்து விட்டதால்
இனி சரிவை மட்டுமே சசிகலா அவர்கள்
சந்திக்க நேரிடும் என்பதே நான் சந்தித்த
அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருக்கிற
திட்டவட்டமான அபிப்பிராயம்

இந்த நிலையில் ஆளுநரின் முடிவு எப்படி
இருக்கும் அல்லது எப்படி இருந்தால் அது
மக்களின் மன நிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும் ?

சக்திவாய்ந்த புரட்சித் தலைவியின்
இயக்கம் இந்த நிகழ்வுகளுக்குப் பின்
என்னவாகும் ?

(சசி  மேடம்  உங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்

நீங்கள்  உயிரைக்  கொடுத்தெல்லாம்  கட்சியை
காப்பாற்ற வேண்டாம் . நீங்களும் உங்கள்
குடும்பமும்  ஒதுங்கினாலே  கட்சி
நிச்சயம் உச்சம் தொடும் )

மக்கள் கருத்தின் அடிப்படையில் அது அடுத்தப்
பதிவாகத் தொடரும்

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்ந்தால் தேறாது...

கரந்தை ஜெயக்குமார் said...

மக்கள் கருத்தும் இதேதான்

கரந்தை ஜெயக்குமார் said...

மக்கள் கருத்தும் இதேதான்

வை.கோபாலகிருஷ்ணன் said...

பெரும்பாலான மக்களின் கருத்துக்களையே இங்கு சிறு வேண்டுகோளாக வைத்துள்ளீர்கள்.

இருப்பினும் அதனைக் காதில் வாங்கிக்
கொள்வார்களா என்பது சந்தேகமே.

பார்ப்போம்.

balu said...

Suba. Veerapandian endra tharuthalaiyum, Veeramani Endra tharuthalaiyum sasikalavai thooki pidithu aadukirargal.

Avargal Unmaigal said...

சசிகலா உயிரைவிட்டாவது கட்சியை காப்பாற்றுவேன் என்ற சொன்ன வாக்கையாவது காப்பாற்ற தன் உயிரைவிட்டாலே போதும்

G.M Balasubramaniam said...

மக்கள் பேச்சுக்கு மதிப்பு இப்போது இருக்காது எம் எல் ஏ க்களின் ஆதரவுதான் முக்கியம் மேலும் ஆளுனர் மத்திய அரசின் பிரதி நிதி சூத்திரதாரிகள் மத்தியில் பாவம் தமிழக மக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

மக்களும் அதேதான் சொல்லி வருகிறார்கள். பார்ப்போம்

வெங்கட் நாகராஜ் said...

அவராக ஒதுங்காமல் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டார் இன்று - நீதிமன்றத்தால்.....

Post a Comment