Sunday, February 26, 2017

இவையெல்லாம் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்...

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா
அவர்களை நீதிமன்றம் குற்றவாளி எனத்
தீர்மானித்து அதற்கான உத்தரவினைப்
பிறப்பித்த பின்னும்...

செல்வி ஜெயலலிதா அவர்களை குற்றவாளி
எனக் கூறுதல் கண்டனத்துக்குரியது
என டிடிவி தினகரன் அவர்கள் கூறுவதும்...

"ஹைட்ரோ கார்பன் திட்டம் மக்களுக்கு நன்மை
பயக்கும் திட்டம். ஒரு நாடு நன்றாக
இருக்கவேண்டுமென்றால்
ஒரு மாநிலத்தைத் தியாகம் செய்யலாம் "
என நம் மாநிலத்தைச் சேர்ந்த
இல. கணேசன் அவர்கள்
நம்  மாநிலத்தில் இருந்தே சொல்வதும்...

பகுத்தறிவுப் பிரச்சாரத்தையே
அடிப்படையாகக் கொண்ட தி. மு. க கட்சியின்
செயல் தலைவர் தன் அறுபதாம் ஆண்டுக்குரிய
வைபவத்தை கோவிலில் வைதீக முறைப்படி
செய்து முடித்து வெளிவர அதுகுறித்து
நிருபர்கள் கேள்வி எழுப்ப அது என் தனிப்பட்ட
விஷயம் எனக் கூறுவதும்...

அரசியல் அரிச்சுவடி கூட அறியாத
எந்த அரசியல் இயக்கங்களிலும்
பங்குபெறாத திருமதி , தீபா அவர்கள்
 உறவு என்பதாலேயே
ஒரு இயக்கத்தைத் துவக்குகிற தைரியமும்
மிகத் துணிச்சலாக முன்னோடி
இயக்கத் தலைவர்களுடன் தன் பெயரையும்
இணைத்து கட்சிப் பெயரிடுவதும்

நிச்சயம் இது தமிழ் நாட்டில் மட்டுமே
சாத்தியம் என நினைக்கிறேன்...

பழம் பெருமைகளிலும்,
நிகழ் காலச் சிறுமைகளிலும்
சிறந்து விளங்குவது எது என ஒரு போட்டி
வைக்கப்படுமானால் நிச்சயம்
இரண்டிலும்நம் தமிழகமே
முதல் பரிசு தொடர்ந்து பெறும்
என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனக்கு

உங்களுக்கு ?

14 comments:

Asokan Kuppusamy said...

தமிழ்நாட்டின் அடையாளம் இதுதானோ

ஸ்ரீராம். said...

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்? நமக்கு நல்லவர்களே கிடைக்க மாட்டார்களா?!

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை ஐயா
வேதனை

வெங்கட் நாகராஜ் said...

வேதனை.....

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
எல்லாம் அரசியல் வித்தைதான்....அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

நேற்று எது நடந்ததோ அது நன்றாகவே நடந்து முடிந்துள்ளது .....

இன்று எது நடக்கிறதோ அது நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது .....

நாளை எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கப்போகிறது .....

என்று பகவத் கீதையில் பகவான் சொல்லியுள்ளதை, அனைவருமே புரிந்துகொண்டு விட்டார்களோ என்னவோ என்று எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

உங்களுக்கு ?

Bagawanjee KA said...

குற்றவாளியின் பினாமி ஆட்சியைப் பிடிப்பதும் தமிழகத்தில் மட்டுமே நடக்கக் கூடிய ஒன்று ......இதையும் சேர்த்துக் கொள்ளலாமே :)

G.M Balasubramaniam said...

பாருக்குள்ளே நல்ல நாடு நம் தமிழ்நாடு

bandhu said...

தீபா மிகுந்த துணிச்சல் மிக்கவர். MAD பேரவை என்று பெயர் வைக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும்!

எத்தனையோ விஷயங்களில் முன்னோடியான நாம் இப்போது இது போன்ற விஷயங்களில்!

அன்பே சிவம் said...

குற்றமே தும் 'புரியாமல்' தண்டனையை மக்கள் அனுபவிப்ப தும், குற்ற'வாலி'கள் கொற்றம் புரிவதூஉம், இதோ இங்கு தான்.

Avargal Unmaigal said...

தமிழகத்தின் நிலை பரிதாபத்திற்குரியதாகவே இருக்கிறது

தி.தமிழ் இளங்கோ said...

ஒருவேளை இதை எண்ணித்தான், ‘தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவருக்கோர் குணமுண்டு’ என்று அந்த கவிஞர் பாடியிருப்பாரோ என்னவோ?

திண்டுக்கல் தனபாலன் said...

என்னமோ போங்க...!

Chellappa Yagyaswamy said...

கூவத்தூர் நாடகம் மாதிரி ஒன்றும் தமிழ்நாட்டில்தான் சாத்தியம். 'விஷக்கிருமிகள் பரவி விட்டன' என்று 1967இல் பக்தவச்சலம் அவர்கள் கூறியது மெய்யாகிவிட்டது.
-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

Post a Comment