Friday, March 31, 2017

காலன் நடுவராக...

அதீத முயற்சியுடன்
பயிற்சியிலிருக்கிறான்
அந்தப் படைப்பாளி

பட்டுப் பட்டுப்
பெற்றஅனுபவ ஞானமும்
கற்றுக் கற்றுத்
தேர்ந்த மொழி அறிவும்
பயிற்சியாளர்களாக

அதீத அக்கறையுடன்
பயிற்சியிலிருக்கிறான்
அந்தப் படைப்பாளி

காலன் நடுவராக
காலம் போட்டியாளனாக
வாசகர்களே பார்வையாளர்களாக

நடைபெற இருக்கும்
அந்த இறுதிப் போட்டிக்கு

அதீத விழிப்புடன்
பயிற்சியிலிருக்கிறான்
அந்தப் படைப்பாளி

இறுதிப் போட்டிக்கான
நாளும் நேரமும்
தெளிவாகத் தெரியவில்லையாயினும்.....

அதனை முடிவுசெய்யும்
அதிகாரம்
தன்னிடம் இல்லையென்றாலும்

துளியும் சோர்வின்றி
தொடர்ந்து பயிற்சியிருக்கிறான்
அந்தப் படைப்பாளி


5 comments:

ஸ்ரீராம். said...

பயிற்சி வெற்றி அடையட்டும்.

இராய செல்லப்பா said...

இறுதிப் போட்டி நடைபெறும் நாளைத் தள்ளிப் போட்டு விட்டதாகத் தகவல் வருகிறதே!

- இராய செல்லப்பா நியூஜெர்சி

வை.கோபாலகிருஷ்ணன் said...

துளியும் சோர்வின்றி தொடர்ந்து பயிற்சியிலிருக்கும் அந்த யாரோவொரு படைப்பாளியே இறுதியில் வெற்றி பெறுவான்.

இறுதிப்போட்டி நடைபெறும் நாள் வரைதான் எல்லாம் ஆர்ப்பாட்டங்களும், யூகங்களும், ஜோஸ்யங்களும் இருக்கும்.

அதன்பின், மொத்தத்தில் எந்தவொரு பெரிய மாற்றமும் ஏற்படாதவாறு சுத்த வழுவட்டையாக மட்டுமே இருக்கக்கூடும்.

இது நாம் இதுவரை நடைபெற்ற ஒவ்வொரு போட்டியிலும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன விஷயமாகும்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
முயற்சியும் பயிற்சியும் இருந்தால்
வெற்றிதானே

G.M Balasubramaniam said...

அந்தக் காலந்தானே பாரதிக்கு நடுவராக இருந்தான்

Post a Comment