Wednesday, March 15, 2017

எல்லாம் சில வார ஆட்டம்தான்....





பகல் உச்சிப் பொழுது எனப் பெயர்.
அதனால் எந்தப் பலனும் இல்லை 
முழுமையாக உடல்முழுவதும் போர்த்திக்கொண்டு கூட வீ ட்டுப் பால்கனியில்  நின்று  ஒரு புகைப்படம்  எடுக்க இயலவில்லை
பனிப் பொழிவு  அத்தனைக்கடுமையாக  இ ருக்கிறது 

மக்களுக்கு நியாயமான கோபம் 
திருமதி சசிகலா அவர்கள் மீது இருந்தாலும் கூடச்  சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதால் 
ஏதும் செய்யமுடியாதுமக்கள்  தவிப்பதை போலவே 
இந்தப் பனிப்பொழிவின் அட்டகாசத்தில்  கதிரவனும் 
அடங்கியே  கிடக்கிறான்
  
எல்லாம் சில வார ஆட்டம்தான்  என்பது 
நம்மைப் போலவே அவனுக்கும் தெரியும்தானே 

16 comments:

அன்பே சிவம் said...

ஒரு அறைப் பறவையின் கூட்(கட்)டில் எத்தனை சிறைப் பறவைகள்!!!.

இராய செல்லப்பா said...

...எதிர்பார்த்த அளவுக்குப் பனிப்பொழிவு இல்லை...

chellappay@gmail.com

Avargal Unmaigal said...


ரொம்ப பயமுறுத்திவிட்டுடாங்க இதற்கெல்லாம் போய் ஸ்டேட் ஆப் எமர்ஜன்சி அறிவித்து இருக்க வேண்டாம்

Avargal Unmaigal said...

ரமணி சார் சட்டை போட்டு பால்கணி போவதற்கு பதில் தோளில் துண்டை போட்டு ஸ்ணோவில் பிள்ளையார் செஞ்சு விளையாடி இருக்கலாம் நீங்க

கீதமஞ்சரி said...

ஆஹா.. நல்ல உவமை...

ஸ்ரீராம். said...

நல்ல உவமை, நல்ல செய்தி!

ஸ்ரீராம். said...

@அன்பே சிவம், அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். அறையையும் சிறையையும் இடம் மாற்றிப் போட்டால் இன்னும் நன்றாக இருக்குமோ!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆட்டம் முடியும் தருவாயில்...

Unknown said...

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவுங்க மண்ணுக்குள்ள

கோமதி அரசு said...

படங்களுடன் செய்தி அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

நம் ஊரில் பனியே இல்லையே, வெயில் வறுத்தெடுக்கிறதே, இவர் ஏதோ சொல்கிறாரே, என எனக்குள் குழம்பினேன்.

//இந்தப் பனிப்பொழிவின் அட்டகாசத்தில் கதிரவனும் அடங்கியே கிடக்கிறான்//

இந்த மேற்கண்ட வரிகளைப் படித்ததும் மட்டுமே ஏதோ புரிந்தும் புரியாததுமாக என்னாலும் கொஞ்சம் உணர்ந்து கொள்ள முடிந்தது. :)

G.M Balasubramaniam said...

நாட்களை இனிமையாகக் கழிக்க வாழ்த்துகள்

ராஜி said...

புது வெள்ளை மழை பொழிகின்றதுன்னு பாட்டு பாடவேண்டியதுதான்

அபயாஅருணா said...

எல்லாப் படங்களிலும் ஐஸ் சுனாமி மாதிரி இருக்கிறதே

Yarlpavanan said...

எல்லாம் சில வார ஆட்டம் தான்
அதற்குள் எத்தனையோ மாற்றம்!

Thulasidharan V Thillaiakathu said...

பனி படர்ந்த இடங்கள் அழகு! பதிவை ரசித்தோம்

Post a Comment