Sunday, April 30, 2017

வளரட்டும் நிலைக்கட்டும் உலகெங்கும் மேதினத்தின் நோக்கங்கள் எல்லாமே

தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லா"மே "
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லா"மே "

நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லா"மே "
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லா"மே "

உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லா"மே "
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லா" மே "

கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லா"மே "
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லா"மே "

உணரட்டும்  இணையட்டும் வளரட்டும்
உழைப்பவருக்கு உழைக்கின்ற எல்லா "மே "
வளரட்டும் நிலைக்கட்டும்   உலகெங்கும்
"மே "தினத்தின் நோக்கங்கள் எல்லா"மே "


(அனைவருக்கும்  மே  தின  நல்வாழ்த்துக்கள் )

11 comments:

ஸ்ரீராம். said...

உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

Unknown said...

டும் டும் என்று முரசு கொட்டி சொன்ன அனைத்தும் நடக்கட்டும் :)

Thulasidharan V Thillaiakathu said...

உழைப்பாளர்களின் நோக்கங்கள் எல்லாம் நிறைவேரட்டும். வாழ்த்துக்கள்

இராய செல்லப்பா said...

எல்லா'மே' அழகானவரிகள். கண்ணதாசனின் பாடலை நினைவுபடுத்துகின்றன:

அன்பு நடமாடும் கலைக்கூட'மே'
ஆசை மழை மேக'மே'
கண்ணில் விளையாடும் எழில்வண்ண'மே'
கன்னித்தமிழ் மன்ற'மே'.

-இராய செல்லப்பா நியூஜெர்சி

KILLERGEE Devakottai said...

மே தின வாழ்த்து அருமை.

Angel said...

தன்னலமின்றி உழைக்கும் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

மே தினம் போற்றுவோம்

Kasthuri Rengan said...

ஆர்பரிக்கும் வாழ்த்துப்பா
அருமை அய்யா
தம +

வெங்கட் நாகராஜ் said...

அருமையான வாழ்த்துப்பா....

அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உணரட்டும் இணையட்டும் வளரட்டும்
உழைப்பவருக்கு உழைக்கின்ற எல்லா "மே "
வளரட்டும் நிலைக்கட்டும் உலகெங்கும்
"மே "தினத்தின் நோக்கங்கள் எல்லா"மே "//

Super Sir. :)

அனைவருக்கும் 'மே' தின நல்வாழ்த்துக்கள்


G.M Balasubramaniam said...

நல்லபதிவை ரசிக்கும் போது எதற்கு ஒப்பீடு. எல்லாமே சிறப்பாக இருந்தது

Post a Comment