Sunday, June 4, 2017

கலைஞரும் காவேரியும் ( 2 )

தலைப்பைப் படித்ததும் காவேரி நீர்க்குறித்தும்
அது தொடர்பான கலைஞரின் நிலைப்பாடுகள்
குறித்தும் எதுவோ எழுதப் போகிறேன்
என நினைத்திருப்பீர்கள்.
இந்தப் பதிவு அது குறித்தல்ல

எங்கள் பகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த
காவேரி மணியன் குறித்தும் அவர் தொடர்பாக
கலைஞரின் சாமர்த்திய பேச்சுக் குறித்தும்.

1971 இல் எங்கள் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினராக
இருந்தவர் காவேரி மணியம் அவர்கள்.
இவர் வழக்கறிஞர்.எங்கள் ஊர்க்காரர்.
மதுரை நகர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர்
சிறந்தப் பண்பாளர்.

இவரின் செயல்பாடுகள் சட்டமன்ற உறுப்பினராக
இருக்கையில் எப்படி இருந்தது என்பதற்கு
ஒரு உதாரணம்வேண்டுமானால் சொல்லலாம்

இவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கையில்தான்
மிஸா சட்டம் அமல்படுத்தப்பட்டது

அப்போது ஆளுங்கட்சியாக இருந்த தி.மு. க. மீது
 அதிகாரிகள் மத்தியிலும் மக்கள்
மத்தியிலும் ஒரு கசப்புணர்வு இருந்தது நிஜம்

பல இடங்களில் தி. மு. க கட்சியின் பொறுப்பாளர்கள்
மக்கள் பிரதிநிதிகள் எல்லாம்
கைது செய்யப்பட்டபோது
மிக மோசமாக நடத்தப்பட்டார்கள்.

சிலர் மிக மோசமாக தாக்கவும்பட்டார்கள் என்பதும்
அனைவரும் அறிந்த விஷயம்

அந்தக் கைது செய்யப் படவேண்டிய நள்ளிரவில்
இவரைக் கைது செய்ய வீடு வந்த மாவட்டப்
போலீஸ் அதிகாரி இவரிடம் கைது வாரண்டைக்
காண்பித்து "உங்களை உடன் கைது செய்து
எங்கள் பொறுப்பில் மறு உத்தரவும் வரும் வரை
வைத்திருக்க உத்திரவு.மாநிலத்தில் கட்சியில்
அனைத்து உயர் பொறுப்பில் இருந்தவர்களியெல்லாம்
கைது செய்து காவல்  நிலையத்தில் வைத்து
இருக்கிறார்கள். தாங்கள் கைது செய்யப்பட்டதாக
உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பி விடுகிறேன்
தாங்கள் வீட்டிலேயே மறு உத்தரவும் வரும்வரை
வெளியில் செல்லாமல் இருக்கவும் " என கேட்டுக்
கொண்டு சென்று பின் அழைத்துச் சென்றது
என்பது அப்போது மிகப் பெரிய விஷயமாகப்பட்டது

காரணம் அப்போது காவல் செய்யக் 
கிடைத்த வாய்ப்பை தாங்கள் கொண்டப் 
பகைமையைத் தீர்த்துக் கொள்ள
பல காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்திக்
கொண்டிருந்த வேலையில்,இவ்வளவு
மரியாதையாக நடத்தப்பட்டவர் நிச்சயம்
இவராகத்தான் இருக்கச் சாத்தியம்.காரணம்
இவர் பதவியில் இருக்கையில்
அவரின் அணுகுமுறைஅத்தனை
சாத்வீகமாக இருக்கும்

மேலும் மதுரையில் மிஸாவில்
கைது செய்யப்பட்டவர்கள்எல்லாம்
மருத்துவக் காரணம் காட்டி,அல்லது
மன்னிப்புக் கடிதம் கொடுத்து வெளிவர
இவர் மட்டும் சட்ட ரீதியாக விடுதலை
செய்யும் மட்டும்சிறையிலேயே காலம் கழித்தவர்

இத்தனைச் சிறப்புக்களையும் விரிவாகக் சொல்லிச்
சொல்லிச் சென்றால்தான் அடுத்துச் சொல்ல வருகிற
விஷயம் சுவாரஸ்யப்படும்

இந்தச் சூழலில் தி.மு.க சார்பாக
ராஜ்யசபா உறுப்பினர் தேர்வு செய்யப்படவேண்டிய
நிலையில் ,அதில் ஒருவர் மதுரையைச் சார்ந்த
புறநகர் மாவட்டச் செயலாளரான அக்கினி ராசு
அவர்கள் அல்லது காவேரிமணியன்
அவர்கள் ஆகிய இருவரில் யாருக்கேனும்
ஒருவருக்கு என இருக்க

முடிவாக  அந்தப் பதவிக்கு அக்கினிராசு
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
இந்த விஷயம் காவேரிமனியம் அவர்கள் மீது
அபிமானம் கொண்டவர்கள் அனைவருக்கும்
கொஞ்சம் மனம் வருத்தம் தந்த
நிகழ்வாக அமைந்தது

இந்தச் சூழலில் காவேரிமணியம் வீட்டு
இல்ல விழா ஒன்றில் கலைஞ்ர் அவர்கள்
தலைமையேற்று நடத்திக் கொடுக்க
வந்திருந்தபோது

அந்தக் கூட்டத்தில் பேசிய முக்கியஸ்தர்கள்
சிலர் காவேரிமணியம் அவர்கள் மிகச் சரியாக
கௌரவிக்கப்படவில்லை என்பதை மிக
நாசூக்காகப் பேசிவைக்க,அதற்கு பதில்
சொல்லித்தான் ஆகவேண்டும் என்கிற
சூழல் அந்தக் கூட்டத்தில் இருந்தது
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும்
ஒரு எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில்
கலைஞர் அவர்கள் தனது சிறப்புரையில்
இப்படிப் பேசினார்

"சிலர் அக்கினிக்கு முக்கியம் தரப்பட்டது
குறித்தும் காவேரிக்கு முக்கியத்துவம் தராதது
குறித்தும் தங்கள் ஆதங்கத்தினைப் பதிவு
செய்தார்கள்

இதுகுறித்து இங்கு விரிவாகப் பேசமுடியாது
என்றாலும் கூட ஒரு விஷயத்தை நான் இங்குக்
குறிப்பிடமுடியும்.

அது அக்கினியின் ஜுவாலை எந்தச் சூழலிலும்
மேல் நோக்கியதாகவும்காவேரி நீரின் பயணம்
கீழ் நோக்கியதாகவே இருக்கும்

அதன் பொருட்டே ஒன்று சிறப்புப்பெற்றது
என நாசூக்காக சொல்லிப் போனார்

மேல் நோக்கிய பயணம் என்னவென்பது
கலைஞருக்கும் சம்பந்தப்பட்ட இருவருக்கும்
அவர்களுடன் நெருக்கமாக இருந்த சிலருக்கும்
மட்டுமே இன்று வரை தெரிந்த ராஜ இரகசியம்

ஆனாலும் இதற்கான பதிலை எதிர்பார்த்து
ஆவலுடன் இருந்த கூட்டத்தினருக்கு
ஒரு தவிர்க்க முடியாத, சொல்லமுடியாத
ஒரு விஷயத்தைச் சொன்னதுபோலவும்
ஏதோ காரணம் இருப்பது போல் ,ஒரு
இலக்கியத் தரமாக ஒரு சூசகமாக
ஒருவிஷயத்தை சொன்ன ராஜதந்திரத்தை
அந்தக் கூட்டம் இரசித்தது

அதில் நானும் இருந்து மிகவும்இரசித்தேன்

அந்த மேல் நோக்கிப் பாய்ந்த இரகசியம்
என்ன வென்று தெரிந்தவர்களில் நானும்
ஒருவனாக இருந்ததால் கொஞ்சம்
கூடுதலாகவே...

9 comments:

Bagawanjee KA said...

வசூலித்த நிதி மேலே செல்ல சேரவில்லையோ :)

KILLERGEE Devakottai said...

என்னவெல்லாமோ நடக்குது
த.ம.2

திண்டுக்கல் தனபாலன் said...

இன்று தான் அறிந்தேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"தாங்கள் கைது செய்யப்பட்டதாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அனுப்பி விடுகிறேன்
தாங்கள் வீட்டிலேயே மறு உத்தரவும் வரும்வரை
வெளியில் செல்லாமல் இருக்கவும்"//

இந்த ஒரு நிகழ்விலேயே அவர் மிகவும் மரியாதைக்குரிய பண்பாளராக இருந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

”அக்கினியின் ஜுவாலை எந்தச் சூழலிலும்
மேல் நோக்கியதாகவும் காவேரி நீரின் பயணம்
கீழ் நோக்கியதாகவே இருக்கும்” என்ற முறையில் பாலிஷ்டாக கலைஞர் அவர்கள் பேசியுள்ளதும் மிகவும் ரஸிக்கும்படியாகவே உள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள்.

Thulasidharan V Thillaiakathu said...

அறியாத சம்பவங்களை அறிகிறோம். பகிர்வுக்கு நன்றி!

சிவகுமாரன் said...

மேலே என்பது MP கீழே என்பது MLA ஆக இருக்குமோ.
கலைஞரின் பேச்சு சாமர்த்தியம் வேறு யாருக்கும் வராது.

asha bhosle athira said...

அரசியல் எனக்கு ஈடுபாடில்லை... கலைஞருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ர்மணி அண்ணன், நீங்க உங்கள் புளொக் எழுதும் பகுதியை.. செட்டிங்ஸ் போய் பெரிதாக்கி விட்டால் நல்லது.. இது அகலம் போதாமையால்.. கவிதைபோல இருக்குது பார்க்க.

வெங்கட் நாகராஜ் said...

பேச்சுத் திறமை - அவரிடம் அபரிமிதமான அளவில் உண்டு என்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

தொடர்கிறேன்.

Post a Comment