Friday, June 2, 2017

மாட்டுக் கறி குறித்து ... ..

ன்று இன்று தமிழகத்தில் 10 ஆண்டுகள் பூர்த்தியான மாடுகளை அதை இறைச்சி கூடங்களில் நேரடியாக விற்கலாம். சந்தைகளில் விற்க கூடாது.
விவசாய பயன்பாட்டுக்காக மாடுகளை சந்தையில் விற்கலாம். ஆனால் சந்தையில் இருக்கும் அதிகாரிகளிடம் வாங்குபவர், விற்பவர் விவசாயியாக இருக்க வேண்டும்.
இறைச்சி கூடங்களில் 10 வயதிற்கு குறைவான மாடுகளை கொள்முதல் செய்யகூடாது. ஏன்னா இன்னும 10 குட்டி போட்டு, பால் குடுக்க தகுதியான மாட்டை இளம் வயதிலாயே கொல்லக்கூடது என்பது தான் அரசின் நோக்கம்.
சந்தைகளில் விவசாயிகளிடம் வாங்கும் மாட்டை அடுத்த ஆறு மாதங்களுக்கு மறுவிற்பனை செய்ய கூடாது. காரணம் விவசாயிகள் என்னும் போர்வையில் சந்தையில மாட்டை வாங்கி அடுத்த நாளே மறுவிற்பனையாக அடிமாட்டுக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளது.
இறைச்சி ஏற்றுமதியாளர்கள் 10 வயதிற்கு மேலான மாடுகளை விவசாயிகளிடம் நேரடியாக , மாடு அறுவை கூடங்கள் வாயிலாக கொள்முதல் செய்யலாம். இது தான் அரசு கொண்டு வந்துள்ள விதிமுறை
. இதில் எங்கேயுமே மாட்டு கறி கூடாதென்றோ..., மாடுகளை விற்க கூடாதென்றோ குறிப்பிடவில்லை. ஒரு மாட்டை கறிக்காக விற்கும் போது குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றப்பட வேண்டும் என தான் கூறியுள்ளது

இதை தான் கேரள உயர்நீதிமன்றமும் சொல்லி, பினராய் விஜயன் அரசை குட்டியுள்ளது

முக நூலில் நண்பர் Raja Udaykumarபதிவு செய்ததிலிருந்து ...நன்றியுடன்

23 comments:

ப.கந்தசாமி said...

ஆகவே மாட்டுக் கறி சாப்பிடத் தடையேதும் இல்லை.

G.M Balasubramaniam said...

மாடுகளை விற்கலாம் வாங்கலாம் ஆனால் அதை என்ன செய்வது என்பதில் நிறைய வழிமு றைகள் உண்டு நீதிபதிகளே குழம்பி இருக்கிறார்களோ இவர்களது சட்டத்தில்

Ramani S said...

ப.கந்தசாமி //

நிச்சயமாக...

Ramani S said...

G.M Balasubramaniam //

எனக்குத் தெரிய நீதிபதிகளிடம்
குழப்பமில்லை
ஊடகப் போராளிகள் குழப்புவதைப் போல
அதிகாரிகள்தான் அதிகம் குழப்பி
அதிகமீன்கள் பிடிப்பார்கள் என நினைக்கிறேன்

KILLERGEE Devakottai said...

தெளிவான விளக்கம் இன்றே அறிந்தேன் நன்றி
த.ம

KILLERGEE Devakottai said...

தெளிவான விளக்கம் இன்றே அறிந்தேன் நன்றி
த.ம

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு விளக்கத்திற்கு நன்றி...

அன்பே சிவம் said...

உண்மையை இதைவிட எளிமையாக சொல்ல இயலாது.

ஆனால் நம் வசவாளர்கள்
உணர்வார்களா?!.

Bagawanjee KA said...

நாட்டிலே ஆயிரம் பிரச்னைகள் .அதை மூடி மறைக்க மோடி அரசாங்கம் செய்யும் அரசியல் இது :)

சேட்டைக் காரன் said...

சபாஷ் ரமணி சார்! இது விஷயத்தில் கிடைத்தது சாக்கு என்று ஆகாயத்துக்கும் பூமிக்கும் மற்றவர்கள் தாவிக் குதிக்கிறபோது, எது யதார்த்தம் என்பதை, அது யார் சொல்லியிருந்தாலும், துணிச்சலுடன் இங்கே பதிவிட்டது பாராட்டத்தக்கது. வாழ்த்துகள் சார்

Julian Christo said...

Saringa mattuku birth certificate unda

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை ஐயா

Ramani S said...

ulian Christo said...
Saringa mattuku birth certificate unda//நீங்கள் நகரத்திலேயே வாழ்ந்து பழகியவராய்
இருக்கச் சாத்தியம் அதிகம் என நினைக்கிறேன்
ஏனெனில் அப்படி இருக்கிறது கேள்வி

(உங்கள் பக்கம் போய்ப்பார்த்தேன்
துவக்கப்படாமலேயே உள்ளது)

Ramani S said...

சேட்டைக் காரன் //

எனக்குச் சரியெனப்பட்டதை எழுதுகிறேன்
பகிர்கிறேன்.கொஞ்சம் கூடுதலான வார்த்தைகள்
இல்லாமல் கவனமாய் இருக்கிறேன்
எனவே பகிர்ந்ததில் அல்லது பகிர்வதில்
எனக்கு எப்போதும் அதைரியம் வந்ததில்லை
மனதில் பட்டதை அப்படியே பின்னூட்டமாய்
பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி


Ramani S said...

Bagawanjee KA //

பதிவைப் படிக்காமல் பின்னூட்டம்
இட்டுவிட்டீர்களோ ?
(இங்கு மோடிக்கு வேலையே இல்லையே)

Ramani S said...

அன்பே சிவம் said...
உண்மையை இதைவிட எளிமையாக சொல்ல இயலாது.

ஆனால் நம் வசவாளர்கள்
உணர்வார்களா?!.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள்
இதுவரைக் காணோம்
பார்ப்போம்
வாழ்த்துக்களுடன்...

Ramani S said...

KILLERGEE Devakottai //

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S said...

திண்டுக்கல் தனபாலன் //

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Rajeevan Ramalingam said...

தெளிவான விளக்கம் ரமணி சார். பேஸ்புக்கில் இது குறித்து ஒரே சண்டைதான். நான்கூட முதலில் இந்தியாவில் மாட்டு இறைச்சி சாப்பிடத் தடை என்றுதான் நினைத்தேன். இப்போது எல்லாம் புரிந்தது.

( உங்களுக்கு என் ப்ளாக்கில் பரிசு வைத்திருக்கிறேன் ரமணி சார் ) :)

Avargal Unmaigal said...

//எனக்குத் தெரிய நீதிபதிகளிடம்
குழப்பமில்லை
ஊடகப் போராளிகள் குழப்புவதைப் போல
அதிகாரிகள்தான் அதிகம் குழப்பி
அதிகமீன்கள் பிடிப்பார்கள் என நினைக்கிறேன்///


ஆனால் மதுரை நீதிபதிகள் இதை தவறாக புரிந்து தீர்ப்பு அளித்தாக செய்திகள் வந்து இருக்கின்றனவே அது மட்டுமல்லாமல் வட நாட்டில் உள்ள பாஜக தலைவர் ஒருவரும் எதிர்ப்பு தெரிவித்து தன் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வந்திருக்கிறதே..


எல்லாவற்றிற்கும் அதிக விளம்பரம் செய்யும் மத்திய அரசு பிரச்சனை சூடு பிடித்த பின்னலாவது உடனே புதிய சட்டம் என்ன சொல்லுகிறது என்பதை உங்கள் பதிவில் வந்ததை போல தெளிவாக வெளிடிட்டு இருக்கலாமே அதனால் பிரச்சனைகள் பராவது இருக்குமே

Ramani S said...

Rajeevan Ramalingam //

மிக்க நன்றி
பதிவுலக ஜாம்பவான்களுடன்
என்னையும் இணைத்து பரிசு
கொடுத்திருப்பது மிக்க மகிழ்வளிக்கிறது
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Julian Christo said...
This comment has been removed by the author.
Julian Christo said...

Nejamave theriyadhunga, now only found some info on web.

Thank you,

Post a Comment