Monday, October 2, 2017

இதுவும் விக்ரம் வேதாதான்




"நிஜம் போல் ஒரு கதை சொல்லட்டுமா என்றான்"
விக்ரம்

"சொல் " என்றான் வேதா

விக்ரம் தொடர்ந்தான்

"அரசுத் துறையில் சுற்றுச் சூழல் பாதுகாப்புத்
திட்டத்தின் கீழ் ஐயாயிரம் மரக்கன்று
நடத் திட்டமிட்டார்கள்

அவசர அவசியம் கருதி குழி பறித்தல்,
மரக்கன்று ஊன்றுதல் ,குழியை மூடுதல் ஆகிய
மூன்று வேலைகளையும் ஒருவரிடமே கொடுத்தால்
காலதாமதம் ஆகும் எனக் கருதி
மூன்று வேலைகளைத் தனித்தனியாக
ஒவ்வொருவரிடமும் பிரித்துக் கொடுத்தார்கள்

குழி தோண்டுபவர் உடனே வேலையை
முடித்துக் கொடுத்து பில் தொகையையும்
பெற்றுவிட்டார்

இரண்டாமவருக்கு மரக்கன்றுகள் கிடைக்கத்
தாமதமாகிக் கொண்டே இருக்க

மூன்றாவர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து
இனியும் தாமதிக்க முடியாது என
குறிப்பிட்ட காலத்திற்கு முன் தன்
வேலையை முடிக்க வேண்டும் எனச் சொல்லி
வெட்டிய குழியை மூடி பணமும்
பெற்றுச் சென்றுவிட்டார்

மரக்கன்று ஊன்றாமலே குழி மூடப்பட
எரிச்சலுற்ற பொது ஜனம் இது குறித்து
விசாரித்து ஆவன் செய்ய உயர் அதிகாரிகளிடம்
மனுக் கொடுக்க, உயர் அதிகாரிகள்
தணிக்கை அதிகாரிகளிடம் விசாரிக்க
உத்தரவிட்டனர்

"இந்த விசாரனையின்
முடிவு என்ன என்னவாக இருக்கும்
எனச் சொல்ல முடியுமா ? "
என்றான் விக்ரம்

வேதா சற்றும் யோசிக்கவில்லை
சட்டென இப்படிச் சொன்னான்

"அவசரம் அவசியம் கருதி மூன்றாக
டெண்டர் விட்டது சரிதான்
குழிவெட்டியதற்கான ஆதாரமாய்
பட்டியலுடன் புகைப்படமும் இணைக்கப்
பட்டுள்ளது.என்வே இந்த வேலை
நடைபெற்றுப் பின் பணம் பட்டுவாடா
செய்ய்ப்பட்டது உண்மை

அதைப்போலவே குழியை மூடியதற்கான
ஆதாரமாய் பட்டியலுடன் புகைப்படமும்
இணைக்கப்பட்டுள்ளது. என்வே இந்த
வேலை நடந்ததும் உண்மை

மர்க்கன்றுக்கென டெண்டர் எடுத்தவர்
கன்றுகள் சப்ளை செய்யவில்லை
எனவே அவருக்கு பணப் பட்டுவாடா
ஏதும் செய்யப்படவில்லை

எனவே இந்த வேலையில் முறை மீறலோ
அல்லது ஊழலோ இல்லை எனவே
இந்த மனுவை தள்ளுபடி செய்யலாம்
என வந்திருக்கும் சரிதானே " என்றான்

வேதாவின் மிகச் சரியானப் பதிலால்
விக்ரம் திகைத்திருக்க
வேதா ஒரு கதை சொல்ல ஆரம்பித்தான்

"நீ நிஜம் போல் ஒரு கதை சொன்னாய்
நான கதை போல் ஒரு நிஜம் சொல்கிறேன்
முடிவு என்னவாக இருக்கும் நீ சொல்"
எனச் சொல்லிச் சொல்லத் துவங்கினான

"மதுரையில் தென் பகுதியில் வில்லாபுரம்
புது நகர் என ஒரு ஒரு பகுதி
வீட்டுவசதி வாரியத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது

ஏற்க்குறைய ஐந்து பிரதான வீதிகளும்
நூற்றுக்கு மேற்பட்ட குறுக்குத் தெருக்களும்
அமைந்த அந்தப் பகுதியில் வீதி குறிக்கும்
பெயர் பலகை இல்லாததால் ஏற்படும்
சிரமங்கள் குறித்து அந்தப் பகுதி வாழ மக்கள்
மா நகராட்சிக்கு மனு கொடுக்க..

மா நகராட்சி அதிகாரிகளும்,மொத்தக்
குறுக்குத் தெருக்கள் எண்ணிக்கையை
அதற்கான பெயர் பலகைக்கான டெண்டரும்
விட்டுவிட்டார்கள்

இடையில் அந்த மரக்கன்றுக்காரரைப் போலவே
தெருவின் எண் குறித்த விவரங்கள்
பெற்றுத் தர அதிகாரிகள் தவறியதால்
அவசர அவசியம் கருதி (?) அந்த
ஒப்பந்தக்காரரும் ஒட்டு மொத்த
பெயர் பலகையையும், வில்லாபுரம்
புது நகர் குடியிருப்பு எனவே தயார் செய்து
எல்லாத் தெருக்களிலும் ஊன்றி வைத்து
பட்டியலும் வாங்கிச் சென்று விட்டார்

மதுரை தெருக்களெல்லாம் மதுரை என்கிற
பெயர் பொறித்ததுபோல் இப்போது
வில்லாபுரம் புது நகர் பகுதி தெரு முழுவதும்
வில்லாபுரம் புது நகர் என்கிற பெயர்
பலகையே உள்ளது

இது அலட்சியத்தின்பால் நடந்த வெட்டிச்
செலவு ஊழலா ? அல்லது ஊழலினால்
அதிகாரிகள் கொண்ட அலட்சியமா?
இந்த விஷயத்தை உயர் அதிகார்களின்
கவனத்திற்குக் கொண்டு சென்றால்
என்ன நடக்கும்? "என்றான்

விகரம் கொஞ்சமும் யோசிக்காமல்
சட்டெனப் பதில் சொன்னான்

"இது பெரிய விஷயமே இல்லை
முதலில் இப்போதுள்ள அதிகாரிகள்
இது எங்கள் காலத்தில் நடக்கவில்லை
காரணமானவர்களிடம் விளக்கம்
கோரியுள்ளோம் என்பார்கள்

இதற்கிடையில் அந்தப் பெயர் பலகைகளை
உடன் அப்புறப்படுத்தி கரி பூசிய
முகத்தைத் துடைத்து கொள்வார்கள்

ஒப்பந்தக்காரரை பட்டியலிலிருந்து நீக்கி
இருக்கிறோம் எனச் சொல்லி பின்
அவர் மனைவி பெயரிலோ மகன் பெயரிலோ
பதிவு செய்து கொடுப்பார்கள்

பிடுங்கப்பட்ட பெயர்பலகைகளை பெயர் மாற்றி
வேறு ஒரு பகுதிக்கு ஊன்றுவதற்கு
ஏற்பாடு செய்து காசக்கி விடுவார்கள்

இதற்கிடையில் இது குறித்து தொடர்ந்து
ஏதும் எழுதவேண்டாம என சம்பத்தப்பட்டவரை
அவருக்கு வேண்டியவர்கள் மூலம்
கேட்டுக் கொண்டு இந்த விஷயத்தை அப்படியே
அமுக்கியும் விடுவார்கள்
சில நாட்களில் எல்லோரும் இதை
மறந்தும் விடுவார்கள்" என்றான்

விக்கிரமனின் மிகச் சரியான பதிலால்
நிலை குழைந்து போன வேதா பின்
பலமாகச் சிரித்து...

"நிஜம் போன்ற கதையும்
கதை போன்ற நிஜமும்
நம் ஊரில் சகஜம்தானே
வா ஒரு நல்ல காஃபி சாப்பிடலாம்"
என அழைக்க இதை படித்த நம்மைப் போல
அவர்களும் மிக சகஜமாகிப் போனார்கள் 

11 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா! அட! படம் தோற்றது போங்கள்! இப்படித்தானே நடக்கிறது!! அப்படியே யதார்த்தத்தை உரித்துக் காட்டிவிட்டீர்கள். அவர்களும் சகஜமாகித்தான் போக வேண்டும்...வேறு என்ன செய்ய முடியும்?!! ரசித்தோம்...

ஸ்ரீராம். said...

நிஜமாகும் நிழல்கள்! வேதனைதான்.

முற்றும் அறிந்த அதிரா said...

அருமையாகச் சொல்லிட்டீங்க. எனக்கு விக்ரம்வேதா [பெரிதாக] படம் பிடிக்கவில்லை.

ரமணி அண்ணன், உங்கள் புளொக்கின் உள்ளே போய் செட்டிங்ஸ் இல் மாற்றம் செய்யுங்கோ.. போஸ்ட் போடும் மாஜின் அகலம் அளவைக் கூட்டிவிட வேண்டும்.. அப்போதான், போஸ்ட் அகலமாக புத்தகம் போல வரும். இது மாஜின் அகலம் குறைவாக இருப்பதனால்.. கதை வசனம்கூட கவிதைபோலத்தான் பார்வைக்கு தெரியுது.

Blogger -> Theme ->Customise -> Adjust Withs

ராஜி said...

வேதாளம் இன்னும் தலைதெறிச்சு ஓடாமயா இருக்கு

பூ விழி said...

ஆம் பழகிவிட்ட சகஜம் நமக்கும்

தனிமரம் said...

இது ஒரு தொடர்கதைகள் போல நடக்கும் சித்துவிளையாட்டு. மக்கள் என்று சிந்திப்பார்களோ ? அருமையான கதை போல நிஜம் !

Unknown said...

நானும் பார்த்து கொதித்தேன். உங்கள் பதிவு. ஆறுதல்.

vimalanperali said...

சஜமாகிப்போவது சகஜம்தானே,,/

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

athira //

உரிமையுடன் அக்கறையுடன்
தாங்கள் கூறிய ஆலோசனைக்கு
மனமார்ந்த நன்றி

சாப்பாடு குறைக்கச் சின்னத் தட்டை
பயன்படுத்துவதைப் போல
எழுதும் பகுதியை
குறைவாக வைத்துக் கொண்டாலே
ஒருவகையிலெழுதும் நீளம் குறையும்
என்கிற எண்ணத்தில்தான் இப்படித் தொடர்கிறேன்

சில நாளில் கதைகள் எழுதும் உத்தேசம்
இருக்கிறது அப்போது நிச்சசயம்
மாற்றிவிடுவேன்

மீண்டும் வாழ்த்துக்களுடனும்
நன்றியுடனும்

G.M Balasubramaniam said...

உண்மை நிலையை விளக்கும் ஒரு வேதாள கதை

Post a Comment