Thursday, January 11, 2018

அட நீ வேற....

அவன் :    இப்பத்தான் அண்ணே அமெரிக்கா
                  யுனிவெர்சிடி நண்பன் சொன்னான்

இவன் :    என்னத்தடா சொன்னான் ஏற்கெனவே
                  அங்குள்ளவன் சொன்னான்னு
                  என்னத்தையோ இங்குள்ளவர் சொல்ல
                 பெரிய குழப்பமா இருக்கு
                  இதுல நீ வேற

அவன் :   இல்லன்ணே கடவுள கும்பிடாட்டிலும்
                  பரவாயில்லை கொழுந்தனாரை கும்பிட்டா
                  மழைபெய்யும்னு
                 சொன்னா தப்பு இல்லையா அண்ணே
                அப்ப புருசந்தான் தெய்வம்னு நம்புற நம்ம
                 கலாச்சாரம் பண்பாடு என்ன அண்ணே ஆகிறது

இவன்     அப்படி யார்றா சொல்லி இருக்கா
                  எங்கடா சொல்லி இருக்கா

அவன்:   அதுதான் வள்ளுவரு அந்தப் பாட்டுக் கூட
                தெய்வத்தை கும்பிட்டு ஆகாட்டிக் கூட
                கொழுந்தனாரை கும்பிட்டு எந்திரிச்சா
                மழைபெய்யும்னு
                வரும்னுங்கிறதை அவன் தான் அண்ணே
               படிச்சுக் காண்பிச்சான்.
              நானும் கண்ணால பாத்தேண்ணே

இவன் :   போடா போய்த்த் தொலைடா.
             தேவையில்லாம எனக்கு பிரம்மஹத்தி தோஷம்
             பிடிக்க வைச்சுறாத
             (எனச் சொல்லியபடி மிக வேகமாக இடத்தைக்
             காலி செய்கிறான்)

அவன் :   (பதில் சொல்லத் தெரியாமல் ஓடுவதை
               நினைத்த மனதுக்குள் சிரித்தபடி
              அதுதானே அமெரிக்காரனா கொக்கா
              பதில் சொல்ல முடியாம ஓடுறதைப் பாரு
              என மெல்ல முனங்குகிறான்

6 comments:

G.M Balasubramaniam said...

பாவம் திருவள்ளுவர்.....!

இணைய திண்ணை said...

வடிவேலு காமெடில சொல்றாப்போல
"செகப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்" கதையா ஆயிடுச்சி. என்ன பண்றது.

Please visit http://onlinethinnai.blogspot.com

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
நீண்ட நாட்கள் ஆகிவிட்டன ஐயா தங்களின் பதிவு கண்டு.
நன்றி
தம +1

ஸ்ரீராம். said...

:)))

Yarlpavanan said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

மனோ சாமிநாதன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Post a Comment