Thursday, April 19, 2018

தப்புக்கும் தவறுக்கும்...

தப்புக்கும் தவறுக்கும் இருக்கும்
வேறுபாடு புரியாததால் தான்
தப்புக்கான தண்டனையை தவறுக்கும்
தவறுக்கான மன்னிப்பை தப்புக்கும்
தப்புத் தப்பாய்த் தந்து
நாட்டில் தப்புக்களை
தாறுமாறாய் வளரவிட்டுக் கொண்டிருக்கிறோமா ?

நகத்தால் செய்து முடிக்கவேண்டியதை
கோடாலி கொண்டு பெயர்த்துக் கொண்டும்
கோடாலி கொண்டு வெட்டிச் சாய்க்கவேண்டியதை
நகத்தால் கீறிக் கொண்டுமிருக்கிறோமா ?
அதன் காரணமாகவே
நச்சு மரங்கள்இன்னும்
செழித்து வளர உரமிட்டுக் கொண்டிருக்கிறோமா ?

இல்லையெனில்
எங்கோ எவனோ ஒரு கயவன்
செய்து தொலைக்கும் கயமைக்கு
அவனுக்கு எதிராய் ஒன்று திரளாது
கயமைக்கு எதிராய் கொதித் தெழாது
 ஜாதி மதப்  பூச்சுப் பூசி
நாட்டின் இறையாண்மைக்கு
ஊறு விளைவிப்போமா ?

இல்லையெனில்
நம்மை கொதி நிலையிலேயே
அன்றாடம் நிற்க வைத்து
போராட்டக் களத்தில் குதிக்க வைத்து
தன்னை வளர்த்துக் கொள்ள நினைப்போரை
புரிந்துக்கொண்டு விலகாது
தொடர்ந்து மோசம் போவோமா?
தேச ஒற்றுமையைக்கு ஊறு விளைவிப்போமா ?

இனியேனும்
தப்புக்கும் தவறுக்குமான
வேறுபாட்டை மட்டுமல்ல
முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும்
முடிச்சு போட நினைப்போரை
எதனையும் ஜாதி மதத்திற்குள்
துணிந்து நுழைக்க முயல்வோரைக்
கண்டு ஒதுங்கிச் செல்வோமா ?
நாடேபெரிதென மனதில் உறுதி கொள்வோமா ?

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

சரியான பார்வை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தப்புக்கும் தவறுக்கும் இடையே இவ்வளவு இடைவெளி உள்ளதா?

Yarlpavanan said...

தப்புக்கும் தவறுக்குமான
தெளிவான பதிவு
நம்மாளுங்க உள்ளத்தில
விழிப்புணர்வு மலர வேண்டும்!

Tamilus said...

நல்லது.. வாழ்த்துக்கள்..

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US

மனோ சாமிநாதன் said...

மிக அருமை!

எம்.ஜி.ஆர் படப்பாடலான 'நல்ல நல்ல பிள்ளைகளை'-ல்

'தவறு என்பது தவறிச்செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது!
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தியாகணும் ' என்று வரும் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன!!

Post a Comment