Saturday, May 12, 2018

neet is also good as neat

நீரை அடித்துக்கிளப்பி
அச்சுறுத்தும் அலையாக்கி
அலைதான் கடலென
 சாதிக்க முயல்கிறது
சுயநலப் பேய்க்காற்று

 அலைச்சீற்றம் கண்டு
அச்சம் கொண்டு
முத்தெடுக்கப் பயணிப்போரை
முடக்கிவிட முயல்கிறது
முட்டாள்ப் பேய்க்காற்று

கடலின் ஆழம் அறிந்தோர்
 அதன் சீலம் அறிந்தோர்
கிஞ்சிற்றும்
குழப்பம் கொள்ளவில்லை
ஒதுங்கிக் கரையில் நிற்கவில்லை

கடந்ததைத் தாண்டும் விதமாய்
சாதனையெனச் சொல்லும் விதமாய்
 கூடுதலாய் கடலினுள் பயணிக்கின்றனர்

பதினான்குக்கொருவர்
அதுவும் கூடுதல் பிடுங்கலின்றி
முத்தெடுத்தல் சாத்தியம் என்பது
அவர்களுக்குத்தெரியும்

கத்தியின்றி இரத்தமின்றி
சுதந்திரம் பெறுதல் மட்டுமின்றி
அல்லக்கைகளின் அட்டகாசங்களை
ஒழிக்கவும்  முடியும் என்பதற்கு
ஒரு நேரடிச் சாட்சியாய்....

ஆம் இனிநேர இருக்கும்
பெரும் மாறுதலுக்குக் கட்டியம் கூறும் விதமாய்

ஆம் இனி மாளிகைக்காரர்கள் மட்டுமின்றி
இனி மத்தியமரும்
முத்தெடுக்கும்  சாத்தியமென்பதை
நிரூபிக்கும் விதமாய்  

14 comments:

ஸ்ரீராம். said...

முத்தெடுக்கும்வரை நம்பிக்கை வராது! எடுத்தது முத்துதானா என்றும் தெரிய வேண்டுமே....!

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் கவிஞரே...
பழைய கருத்துகளை திறந்து விட்டதில் மகிழ்ச்சி.

Ramani S said...

நிச்சயம் நல் முத்து தகுதியானவர்களுக்கு கள்ளச்சந்தை அல்லாது கிடைக்க இது ஒன்றே சிறந்த வழி

Ramani S said...

கொஞ்சம் அதிக வேலைப்பளு மற்றும் அலைச்சல் காரணமாக அப்படி இருக்கும்டி ஆகிவிட்டது.இனி முன்புபோல் தொடர்வேன் வாழ்த்துக்களுடன்

திண்டுக்கல் தனபாலன் said...

சாத்தியமாக்கட்டும்...

Ramani S said...

வரவுக்கும் வாழ்த்துக்கும் நல்வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: இனி மத்தியமரும்
முத்தெடுக்கும் சாத்தியமென்பதை
நிரூபிக்கும் விதமாய் //

உண்மைதான் எங்களுக்கு இது நல்லவிதமாகத்தான் இருக்கிறது

கீதா: அருமை...நீங்கள் தலைப்பில் சொல்ல வந்தது இந்த வரிகளில் புரிகிறது. ஆனால் ...நடைமுறையில் வேறு விதமாக அல்லவா இருக்கிறது! இங்கு

Ramani S said...

இல்லை காசுக்கு கூவுகிறவர்கள் கூடுதலாகக் கூவி குழப்புவதே அனைவருக்கும் சந்தேகம் வரக் காரணம் என நினைக்கிறேன்

Anonymous said...

It's really very difficult in this busy life to listen news on Television, thus I just use world wide web for that purpose, and obtain the latest information.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இப்பொருள் சார்ந்து ஆதரவாகவும் எதிர்த்தும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்தி உண்மையை ஆராய வழி விடாமல் முடக்கி விடுகிறது.

Ramani S said...

அத்துறையைச் சார்ந்த உங்களைப் போன்ற விசயமறிந்த நடுநிலையாளர்கள்தானே இந்த குழப்பத்தைத் தீர்க்க வல்லவர்கள்/வேண்டியவர்கள் இல்லையா

Anonymous said...

Thank you a lot for sharing this with all people you actually understand what you're talking approximately!
Bookmarked. Kindly also consult with my site =). We may have a link exchange
agreement between us

R Muthusamy said...

மூழ்கி முத்தெடுப்பதிலும் ஜனநாயகம் தேவைதானே.

Anonymous said...

Very interesting info!Perfect just what I was searching for!

Post a Comment