எதைச் சொல்வது என அறியாது
எப்படிச் சொல்வது என்பதறிந்து
என்ன செய்வது என அறியாது
உப்பரிகையில் உலாத்தியபடி சிலர்
எதைச் சொல்வது என்பதறிந்து
எங்கு எப்படிச் சொல்வதென அறியாது
என்ன செய்யலாம் என பிதற்றியபடி
வீதியில் திரிந்தபடிப் பலர்
எதை எப்படி என இரண்டுமறிந்தவர்
முன்புபோல் ஏன் இல்லை என
விசனப்பட்டு இருவருக்குமிடையில்
அனாதைகளாய் கதைகளுக்கான கவிதைகளுக்கான
பல அற்புதக் கனவுகளும் கற்பனைகளும்....
எப்படிச் சொல்வது என்பதறிந்து
என்ன செய்வது என அறியாது
உப்பரிகையில் உலாத்தியபடி சிலர்
எதைச் சொல்வது என்பதறிந்து
எங்கு எப்படிச் சொல்வதென அறியாது
என்ன செய்யலாம் என பிதற்றியபடி
வீதியில் திரிந்தபடிப் பலர்
எதை எப்படி என இரண்டுமறிந்தவர்
முன்புபோல் ஏன் இல்லை என
விசனப்பட்டு இருவருக்குமிடையில்
அனாதைகளாய் கதைகளுக்கான கவிதைகளுக்கான
பல அற்புதக் கனவுகளும் கற்பனைகளும்....
19 comments:
இப்படியே காலம் செல்வதாய்...!
:) ஆஹா ! அருமை.
இப்படித்தான் எத்தனையோ விடியல் இல்லாத கதைகளும் கற்பனைகளும் கனவுகளாய் மிதந்து கொண்டிருக்கின்றன!
ஆக்கம் அருமை!
பலரது பதிவின் ஆரம்பங்களே இப்படித்தானோ
சம்பந்தமில்லை என்று கூறும்போதே ஏதோ சம்பந்தம் இருப்பதைப்போலத் தெரிகிறதே?
இறுதி வரிகள் அருமை அண்ணா..
மனோ அக்கா சொல்லியிருப்பது போல் எத்தனையோ கனவுகளாய் மிதந்தும் வெளிவர இயலாதோ என்று காத்துக் கொண்டிருக்கின்றன
கீதா
ஆதங்க பதிவு அருமை வாழ்த்துகள்
அருமை.
ஆரம்பம் என் போன்றோருக்கு இப்போது கூட அப்படித்தான்
முதல் வரவுக்கும் உணர்ந்து நறுக்காய் பின்னூட்டமிட்டமைக்கும் நல்வாழ்த்துக்ககள்
மிக்க நன்றி
விடியல் இல்லாத..அற்புதமான வார்த்தைப் பிரயோகம் வாழ்த்துக்கள்
அட மாட்டிக்கிட்டேனா.
ஆம் அனுபவித்ததை எழுதுபவர்கள் அதிகம் இருந்தார்கள். இப்போது படித்து அறிந்ததை எழுதுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள்
வாழ்த்துக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கு மிக்க நன்றி
அருமை
அருமை ஐயா.
உங்களுக்கே உரித்தான பூடகக் கவிதை அருமை
Post a Comment