Wednesday, January 9, 2019

கட்சியும் அரசும்

சிறுவனாய் இருக்கையில்
என் போல் பலருக்கும்
காங்கிரஸ் கொடிக்கும்
அரசாங்கக் கொடிக்கும்
இருக்கும் சிறு வித்தியாசம்
தெரியவே தெரியாது.

இரண்டினையும் ஒன்றெனவே
நாங்கள்
நினைத்துக் கொண்டிருப்போம்

அவ்வப்போது வரும்
குடியரசு தினமும்
சுதந்திர தினமும்
இரண்டு வேறு வேறு என
ஞாபகமூட்டிப் போகும்
நாங்கள்
வெட்கித் தலைகுனியும்படியாய்...

இப்போது
பெரியவனாய் ஆனபின்னும்
என் போல் பலருக்கும்
கட்சியென்பதற்கும்
ஆட்சியென்பதற்கும்
இருக்கும் வித்தியாசம்
சுத்தமாய்த் தெரியவில்லை

ஆட்சியாளர்களும்
இரண்டும் ஒன்றெனவே
நினைத்துக் கொண்டிருக்க

இப்போதும்
அது அப்படியில்லை என்பதனை
அவ்வப்போது வரும்
நீதிமன்றத் தீர்ப்புகளே
ஞாபக மூட்டிப் போகிறது

எல்லோரும் 
தலையில் அடித்துக் கொள்ளும்படியாய்...

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்...

ஸ்ரீராம். said...

சரிதான்... ஆனால் நீதிமன்றங்களும் ஆட்சி விவகாரங்களில் மெல்ல தலையிட ஆரம்பித்திருப்பது சரியா என்று தெரியவில்லை.

Yaathoramani.blogspot.com said...

ஆம் அவரவர்கள் லெட்சுமணக் கோட்டை
தாண்டாதிருத்தல் எல்லோருக்கும் நல்லது

K. ASOKAN said...

மிகவும் சரியான பார்வை பாராட்டுகள்

வெங்கட் நாகராஜ் said...

எங்கும் அரசியல்... எதிலும் குழப்பம்....

Post a Comment