Saturday, January 19, 2019

கலகக்காரன்.

."எத்தனை தடைகள் எதிர்ப்புகள்
வந்த போதும்
எப்படி உன்னால்.
கலகக்காரனாகவே தொடர்ந்து இருக்க முடிகிறது..
இந்த அசுர மனோபலம்
உனக்கு எங்கிருந்து கிடைக்கிறது ?"
என்கிறான் நண்பன்

" எங்கிருந்தும் கிடைக்கும்
நமக்குப் பார்க்கத் தெரிய வேண்டும்
நம் சக்தியில் நமக்கு
நம்பிக்கையும் வேண்டும்
அவ்வளவே " என்கிறேன்

"புரியவில்லை" என்கிறான்

அவனுக்கு விளக்குவதுபோல்
எங்களெதிரே
சாலையின் மறுபுற சாக்கடையோரமிருக்கும்
பூக்கடைக்கு வாக்கப்பட்டும்
நாற்றத்தை மீறி
மணந்து சிரிக்கிறது
குண்டு மல்லிகைப் பந்து

6 comments:

MuraliDharan.M said...

பூமிப் பந்தை புரட்டி விடும் நெம்புக்கோல் கவிதையின் லாகவம் தெரிகிறது.
நிறைய எதிர்பார்க்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கியது அருமை...

KILLERGEE Devakottai said...

உவமை ஸூப்பர் கவிஞரே

ஸ்ரீராம். said...

நல்ல உவமை.

"மணக்கும் வரை பூக்கடை, மணம் மாறினால் அது சாக்கடை!"

K. ASOKAN said...

நாற்றத்தை மீறி
மணந்து சிரிக்கிறது
குண்டு மல்லிகைப் பந்து-அருமையான வரிகள் பாராட்டுகள்

G.M Balasubramaniam said...

/
" எங்கிருந்தும் கிடைக்கும்
நமக்குப் பார்க்கத் தெரிய வேண்டும்
நம் சக்தியில் நமக்கு
நம்பிக்கையும் வேண்டும்
அவ்வளவே " என்கிறேன்/ ரசித்தேன்

Post a Comment