Monday, May 27, 2019

ஓட்டிங் மெஷின் ஹேக்கிங்

ஓட்டிங் மெஷினை ஹேக் பண்ணித்தான் அவுக ஜெயித்ததாகச் சொல்றாங்களே அப்படியானா தமிழ்நாட்டில மட்டும் ரிசல்ட் ஏன் இப்படி ஆகிப் போச்சு..                                                    அது ஒன்னுமில்லை வடக்கே எல்லாம் தப்பை சரியாச் செய்துட்டாங்க. தமிழ்நாட்டுல மட்டும் தப்பைத் தப்பாவே செய்துட்டாங்க அம்புட்டுத்தான்                     அய்யோ புரியும்படியாகத்தான் சொல்லேன்                                                             விசயம் சிம்பிள் ஹேக்கருக்கு சரியா இங்கிலிஸ் தெரியாது.அமித்ஷா அவர்கிட்டே " மை டியர் சன் தமிழ்நாடு ரிசல்ட் இஸ் இன் யுவர் ஹேண்ட் டோண்ட் ஃபார்கெட் மைடியர் சன்னுன்னு திரும்பத் திரும்ப சொல்லி இருக்காரு..இதை மொழி பெயர்த்தவர் தங்கபாலு மாதிரிஒருத்தர் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கையையும் சூரியனையும் மறந்திடாதன்னு டிரான்ஸ்லேட்  பன்னிட்டாரு அதனால வந்த வினைதான் இது                              அய்யோ அப்பா இதில இவ்வளவு விசயம் இருக்கா.அப்புறம் என்ன ஆச்சு                 அப்புறம் என்ன இதை வெளியே சொல்லிப்புடாதன்னு ஹேக்கருக்கு இவங்களும் சில கோடி கொடுத்து விசயத்தை அமுக்கிப்புட்டாங்க.               யாருக்கும் தெரியாத இவ்வளவு பெரிய விசயம் உனக்கு மட்டும் எப்படித் தெரிஞ்சது                                               அதெல்லாம் பெரிய விசயமே இல்ல நீயும்   மோடி அவர்களுக்கு எதிரா எழுதறவங்க ஃபேஸ்புக்கைப் பத்து நாள் படி. உனக்கும் இந்த மாதிரி பல விசயங்கள் தானா தோணும்.சரி வரட்டா

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா

திண்டுக்கல் தனபாலன் said...

ஓஹோ...

Anonymous said...

unmai orunaal velichathirku varm

நெல்லைத்தமிழன் said...

நான் பயணம் செய்த பஸ்ஸில் ஒரு இஸ்லாமியர் இதேமாதிரி, ஈவிஎம் ஹேக்கிங்கினால்தான் பாஜக வெற்றி பெற்றது என்று நம்பிக்கையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அதே சமயத்தில், தமிழகத்தில் மக்கள் பாஜகவை ஒதுக்கிவிட்டார்கள் என்றும் சொன்னார். ஹாஹா

Post a Comment