எந்த ஒரு நிறுவனம் ஆனாலும் லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் தம் வாடிக்கையாளர் நலனிலும் கொஞ்சமேனும் அக்கறை கொள்ளவேண்டும்..அந்தவகையில் அரசு இயங்குவதற்கே காரணமாயிருக்கிற "குடி"மக்களின் நலனிலும் அரசு கொஞ்சமேனும் அக்கறை செலுத்தவேண்டும்.உதாரணமாக சைட் டீஸ்ஸீம் தண்ணீரும் இலவசமாய் தரலாம்.அதிகப் போதைக்காரர்களை வீட்டில் கொண்டு சேர்க்க தனியாக ஆட்களை நியமனம் செய்யலாம்.ஊருக்கு வெளியே கடை இருக்குமானால் ஊர் வரை போக்குவரத்து ஏற்பாடு செய்யலாம்.போதையில் ரகளை செய்தால் அதற்கு தண்டனை கிடையாது எனச் சொல்லலாம்..சில மதிக்கத் தக்க நாளில் கடைக்கு விடுமுறை அளிப்பதைப் போல மதுக்கடையை கொணர்ந்த தலைவர்களின் பிறந்த நாளை கௌரவிக்கும் விதமாக அன்று இலவசமாக மதுவினைத் தரலாம்..மொத்தத்தில் அனைவருக்கும் குடிக்கும் பழக்கம் ஏற்படுத்தும்படியாக ஒரு பிரச்சார அமைப்பை ஏற்படுத்தலாம்.குடியினால் இறப்பவர்களுக்கு இறுதிச் சடங்கை அரசின் செலவில் செய்யலாம்.இலவசமாக இறப்புச் சான்றிதழ் தரலாம்..இதை மட்டும் செய்து பாருங்கள் அப்புறம் எத்தனை காலமானாலும் எதிர்க்கட்சியே இல்லாமல் இதை அமல்படுத்தியவர்களே அவர்களது பரம்பரையே எப்போதும் தமிழகத்தை ஆள்பவர்களாக இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..
4 comments:
வருத்தம் தரும் நிகழ்வுகள். அரசுக்கு லாபம் என்ற பெயரில் இதையெல்லாம் செய்தாலும் செய்வார்கள்.....
கலிகாலம். நடந்தாலும் நடக்கும்!
வேதனையை பகிர்ந்துள்ள விதம் அருமை.
வேதனையை பகிர்ந்துள்ள விதம் அருமை.
Post a Comment