ஒரு அபூர்வமான இடத்திற்கு
இன்பச் சுற்றுலா சென்று வந்த பின்...
இன்னும் சரியாய்த் திட்டமிட்டு
கூடுதல் இடங்களை
இரசித்துப் பார்த்திருக்கலாமோ..
ஓய்வெடுத்தலைக் குறைத்து
இன்னும் பயணத்தைப்
பயனுள்ளதாக ஆக்கி இருக்கலாமோ..
என எண்ணி எண்ணி
வருந்துபவனைப் போல் அல்லாது .
அபூர்வமாய் வாய்த்தப் பிறப்பின்
அந்திமக் காலத்தில்.
இன்னும் கூடுதலாய் உழைத்து
பிறருக்குக் கொடுத்து இரசித்திருக்கலாமோ
இன்னும் ஒவ்வொரு நொடியினையும்
நேர்த்தியாய் இரசித்துக் களித்திருக்கலாமோ
என்கிற எண்ணமே தோன்றாதபடி
அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பவன் எவனோ
அவனே "வாழ்வாங்கு வாழ்பவன் "
எனும் வார்த்தைக்குப் பொருளானவன்
மற்றவரெல்லாம் நிச்சயமாய்
சாகாததால் இங்கிருப்பவர்கள் அவ்வளவே
இன்பச் சுற்றுலா சென்று வந்த பின்...
இன்னும் சரியாய்த் திட்டமிட்டு
கூடுதல் இடங்களை
இரசித்துப் பார்த்திருக்கலாமோ..
ஓய்வெடுத்தலைக் குறைத்து
இன்னும் பயணத்தைப்
பயனுள்ளதாக ஆக்கி இருக்கலாமோ..
என எண்ணி எண்ணி
வருந்துபவனைப் போல் அல்லாது .
அபூர்வமாய் வாய்த்தப் பிறப்பின்
அந்திமக் காலத்தில்.
இன்னும் கூடுதலாய் உழைத்து
பிறருக்குக் கொடுத்து இரசித்திருக்கலாமோ
இன்னும் ஒவ்வொரு நொடியினையும்
நேர்த்தியாய் இரசித்துக் களித்திருக்கலாமோ
என்கிற எண்ணமே தோன்றாதபடி
அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பவன் எவனோ
அவனே "வாழ்வாங்கு வாழ்பவன் "
எனும் வார்த்தைக்குப் பொருளானவன்
மற்றவரெல்லாம் நிச்சயமாய்
சாகாததால் இங்கிருப்பவர்கள் அவ்வளவே
7 comments:
//சாகாததால் இங்கிருப்பவர்கள் அவ்வளவே//
நெத்தியடி இது என்னையும் சாருமோ... ஆலோசிக்கின்றேன்.
நீங்கள் வாழ்வாங்குப் பட்டியலில்....உங்கள் தொடர் பதிவுகளே அத்தாட்சி..
வாழ்வாங்கு வாழ்பவன், ஞானம் பொறுத்து...
ஞானம், பக்குவம் பொறுத்து...
பக்குவம், அனுபவம் பொறுத்து...
அனுபவம், அன்பைப் பொறுத்து...
நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம்.
அருமை...சுருக்கமாய்...கவித்துவமாய்..
.மகிழ்ச்சி...
வாழ்வாங்கு வாழ்பவர்கள் பற்றிய நல்லதொரு கவிதை. ரசித்தேன் ஜி.
Post a Comment